*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*பளிச் - னு ஒரு தத்துவம்*
*(13/12/2019)*
*எவை கட்டுப்படுத்த முடியும்? எவை கட்டுப்படுத்த முடியாது?*
*ஒருவர் தனது எண்ணங்களை, பேசும் சொற்களை, செய்யும் செயல்களை, தான் நடந்து கொள்ளும் முறைகளை, புலன்களை, தனது நற்பண்புகள், ஒழுக்கம் ,தவம் , தன்னை ஆராய்ச்சி செய்வதின் மூலமாக , தனது களங்கங்களை போக்கி , இவை அனைத்தையும் ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.*
*எவையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது.? தனது எண்ணம் சொல் செயல்களின் விளைவுகளை கட்டுப்படுத்த முடியாது. பிறரது எண்ணம் , சொல், செயல்கள் நடந்து கொள்ளும் முறைகளை, இயற்கையின் சட்டத்தினை கட்டுப்படுத்த முடியாது.*
*இதிலிருந்து ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. தன்னைத்தான் நல்ல படியாக மாற்றிக்கொள்ள முயற்சியை மேற்கொண்டால், எல்லாம் இயல்பாக நல்லபடியாகவே நடக்கும்.*
*உடல், மனம், கட்டுப்பாட்டிற்கு எண்ணத்தையே எண்ணத்திற்கு காவல் வைக்க அருட்தந்தை அவர்கள் கூறுகிறார்கள்.*
*அன்புடன் ஜே. கே*