29-06-2018
*ஞானக் களஞ்சியம் கவிகள்*
*- வேதாத்திரிய தத்துவ விளக்க உரைகள்*
*கவி: 3*
அழுத்தம்எனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே
அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி
வழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும் ஆறும்
வகைவகையாம் உயிரினங்கள் தோற்று வித்து,
முழுத்திறனுடன் காத்து, முடிக்கும் மேலாம்
முழுமுதற் பொருளே நம்மறிவாய் ஆற்றும்
பழுத்தநிலை வரும்வரையில் “நீ நான்” என்போம்
பதமடைந்தோம்; ஒன்றானோம்; பரமானந்தம். (05.09.1983)
*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*
இறைநிலையானது இப்படித்தான் இயங்கவேண்டுமென்ற தன் அறிவாலும், தனது ஆற்றலாலும் எழுச்சிபெற்ற பிரபஞ்சத் தோ’ற்றப் பொருட்களாகத் தன்நிலையில் மாற்றம் பெற்றுள்ளது. இறைநிலையின் மாபெரும் ஆற்றல் என்பது அழுத்தம் ஆகும். அந்த அழுத்தம் தன்னிலே, தன்னையே இறுக்கிக் கொள்ளும் ஆற்றலாகவும், மற்றவற்றில் சூழ்ந்தழுத்தும் ஆற்றலாகவும் உள்ளது. தனது மாபெரும் உந்து ஆற்றலால் தன்னையே இறுக்கிக் கொள்ளும்போது, நெருக்கமுற்று, பிதுக்கமுற்று, நொறுங்கித் தூசுகள் போல தனக்குள்ளாகவே மிதந்து கொண்டிருக்கிறது. தானாக இருந்தபோது தன்னிறுக்க ஆற்றலாயிருந்தது. பிறிதொன்றாகிய தூசுக்களைச் சூழ்ந்து அழுத்துவதால் சுழல ஆரம்பிக்கிறது. தற்சுழற்சியுடைய தூசுத்துகள்கள் எனும் இறைத்துகள்களை முன்னோர்கள் பரத்தில் தோன்றிய அணு என்பதால் பரமாணு என்றனர்.
பரமாணுக்கள் இறைநிலையின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் நெருங்கும்போது கொத்தியக்கமாக ஆயிரமாயிரம் துகள்கள் சேர்ந்து இயங்கும் அமைப்பு விண் எனப்படும். விண்ணிற்குள் சிறைப்பட்ட இறைத்துகள்கள் தற்சுழறிச்சியாயிருப்பதால், இறைநிலையின் அழுத்தத்தால் கனமானவை மையம் நோக்கித் தள்ளப்பட்டு, லேசானவை வெளித்தள்ளும் சக்தியாவதால், விலக்குமாற்றல் காரணமாக, ஒரு சுழற்சியோடு மற்றொரு சுழற்சி ஒருபோதும் ஒட்டிக்கொள்ள முடிவதில்லை. இறைநிலையில் உராய்ந்து சுழல்வதால் ஏற்படும் தள்ளல் கொள்ளல் சக்தி காந்தம் எனப்படுகிறது. விண்ணும் சுழல்வதால் அதனுள்ளேயிருந்து காந்தம் விரிவலையாகி வெளித்தள்ளும் சக்தியாகிறது.
அதன் திணிவு குறைவதால் வேகம் அதிகமான விண் நெருங்கி இயங்க வாய்ப்பேற்படுவதால், விண்ணும் இறைநிலையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணையும் நிகழ்ச்சி பஞ்சபூதங்கள் எனப்படுகிறது. பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து எண்ணிலடங்கா கோள்களை உள்ளடக்கிய பிரபஞ்சத் தோற்றமாகியது. ஐந்து பௌதீகப் பிரிவுகளும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து ஒன்றை ஒன்று காக்கும்படியான அமைப்பில் காந்தச் சுழலும் கருமையமும் அமைந்து ஜீவன் என்ற நிலை பெற்று ஓரறிவு தாவரம் முதல் ஆறாவது அறிவு பெற்ற மனிதன்வரை தன்னிலையில் மாற்றம் பெற்றுள்ளது.
இறைநிலை முதல் மனித மனம் வரை அறியும் அறிவு, மனிதனிலே பகுத்தறிவாக உள்ளது. உண்மைப் பொருளான அறிவே, மேன்மைப் பொருளான மனமாக மனிதனிலே மலர்ந்துள்ளது என்பதை உணரும்வரை, எல்லாவற்றையும் தன்னிலேயிருந்து வேறுபடுத்தித்தான் மனிதன் பார்ப்பான். சிற்றறிவை பேரறிவிலே லயமாக்கும் நிலையடையும்போது, பரமே அந்தமாக, முடிவாக இருப்பதை உணர்வான்.
*விளக்க உரை: மு.நி.பேரா. இரா.மாரியம்மாள் மோகன்தாஸ்*
வேதலோக அன்பு நிலையம் அறக்கட்டளை
K.Pudur MVKMM Trust. Madurai
www.facebook.com/vethathiri.gnanam

No comments:
Post a Comment