வாழ்க வளமுடன்
அருட்காப்பு விளக்கம் :
“அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக” என்பது அருட்காப்பு ஆகும்.
அருட்காப்பின் விளக்கம் பின்வருமாறு :
அருட்பேராற்றல் எங்கும் நிறைந்திருந்தாலும், அது தேங்கியும், அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க, அத்தூய காந்த ஆற்றல் பாதுகாப்பு வளையமாக அமையட்டும் என்று எண்ணத்தால் அருட்காப்பு கொடுத்துப் பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு கையாளும் வழக்கம் ஆகும்.
எந்த நோக்கத்தோடு காப்பு கொடுக்கிறார்களோ அதற்கேற்ப பயன் விளையும். எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும். இதனால் உயிராற்றலின் செலவு தடுக்கப்படுகிறது. ஆற்றல் பெருகி கொண்டே இருக்கிறது. முடிக்கவேண்டிய செயல்கள் தடையின்றி நிறைவேறுகின்றன.
இரவில் தூங்கச் செல்லும் போது அருட்காப்பு தன்னைச் சுற்றிலும், தனது வீட்டை சுற்றிலும் இட்டுக்கொள்ளலாம். தூக்கத்தின்போது தனக்கோ, இல்லத்திற்கோ எவ்வித தீங்கும் ஏற்படாது.
வாகனங்களில் பயணம் செய்கின்ற போது அருட்காப்பை வாகனத்தைச் சுற்றிலும் இட்டுக் கொண்டால், பயணம் மேற்கொள்ள இருக்கின்ற உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அவர்கள் விடை பெறுகின்றபோது அருட்காப்பு இட்டு அனுப்பலாம். ஊருக்கு நலமாக சென்றடைவார்கள்.
தன்னை விட வயதில் மூத்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு மௌனமாக அருட்காப்பு சொல்வது நலம். சிறியவர்களாக இருந்தால் வாய்விட்டு சொல்லி அனுப்பி வைக்கலாம். இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த அருட்காப்பை மெய்யுணர்வாளர்கள் பயன்படுத்திப் பலன் காணலாம்.
புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அருட்காப்பை மற்றவர்க்கு அளிக்கக்கூடாது. உயிர்க்கு உதவியாக, ஒரு கருணை செயலாக, உள்ளம் உவந்து அருட்காப்பிட வேண்டும்.
குருவே துணை.

No comments:
Post a Comment