Tuesday, 29 March 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*உரசு முத்திரை அல்லது பிரசன்ன முத்திரை*

தலை முடியை வளரச் செய்யும் செல்களை தூண்ட இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் குறைந்து போவதே முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரம்பத்திலேயே முடி உதிர்வதை சாதாரணமாக விட்டுவிடாமல் பிரச்சனையாக எடுத்து கொள்வதே நல்லது. தீவிரம் அடையும் போது தான் பலர் கவலைபட்டு கண்ட கண்ட எண்ணெயை வாங்கி உபயோகித்து பலன் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இரண்டு விரல்களிலும் இருக்கும் நகங்களை கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில் காட்டியவாறு உரச வேண்டும்

குறைந்தது 10 நிமிடமாவது தொடர்ந்து இந்த பயிற்சியை செய்வது நல்லது. சீரான வேகத்தில் நகங்களை உரசி கொண்டிருப்பதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி இழந்த முடி வளர்ச்சியை தூண்டிவிட முடியும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு இழந்த முடியை திரும்பவும் முளைக்க செய்யும். இந்த பயிற்சியை செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மற்றும் பின்னால் எதுவும் சாப்பிடக் கூடாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு உரசு முத்திரை என்று பெயர்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐