Tuesday, 11 December 2018

அருட்தந்தை கேள்வி பதில்

கேள்வி :-

"சுவாமிஜி அவர்களே, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள் திருமணம் செய்து கொண்டபின் உடல் இணைப்பால் ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?


மகரிஷியின் பதில் :-

"நிச்சயமாக பதிவுகளில் பரிமாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏற்படுவதே இருவரும் இணைந்து செயல்பட அல்லது எதிர்த்து சண்டையிட காரணமாகிறது. ஏற்கனவே ஒருவருக்கொருவர் உள்ள பதிவை மாற்றுவதற்குத்தான் இருவருமே இணைகிறார்கள். இதற்கான பதிவு ஏற்கனவே செயலுக்கு வந்த பிறகு தான் இயற்கை இருவரையும் இணைத்து வைக்கிறது. ஆனால் மேல் எழுந்த வாரியான பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும். அவையெல்லாம் ஒருவரை ஒருவர் பாதிப்பதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு செயல் பிடிக்கும் என்றால் மற்றவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை."


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments: