https://www.facebook.com/100025456231980/posts/628076464717556/
உலக சமாதானம் பாடல்
23 . உடலில் இயற்கை செயற்கை ரசாயன மாற்றங்கள்
மனிதர்களின் உடலில் உள ரசாயனங்கள்
மாறிக் கொண்டே இருக்கும் இருவிதத்தில் .
தனியமைப்புக் கருவான நாத விந்தில்
தரம் மாறும் , அண்ட கோடி சஞ்சாரத்தால் ,
எனில் இவையே இயற்கை ரசாயன மாற்றம் ஆம் .
இயக்குவதால் உடலை , கொள்ளும் ஆகாரத்தால் ,
இனி அந்த உடலில் எழுகிற எண்ணத்தால் ,
ஏற்படும் மாற்றம் செயற்கை எனும் மாற்றாகும் .
மனிதர்கள் உடலில் உள்ள ரசாயன அமைப்பில் மாறுதல்கள் இயற்கை - செயற்கை என இரு விதங்கள் ஆகும்.
நாதவிந்து கூட்டமைப்பாலும் , ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பல அண்டங்கள் ஒன்றை ஒன்று ஒலி , ஒளி ஈர்ப்பு என்னும் வகையில் , கவர்ந்தும் தாக்கியும் பிரதிபலித்தும் கொள்ளும் இயக்கத்தாலும் ஒவ்வொரு உடலுக்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் இயற்கை மாற்றம் ஆகும் .
ஆகாரம் , மருந்து , முதலியன உண்பதாலும் உடற்கருவிகளை இயக்கித் தொழிலாற்றுவதாலும் பலவிதமான எண்ணங்கள் , ஆராய்ச்சிகள் நடத்துவதாலும் ஏற்படும் - விளையும் மாற்றங்கள் செயற்கை ரசாயனங்கள் எனப்படும் .