Thursday, 16 April 2020

உலக சமாதான பாடல்:22 -ரசாயன மாற்றத்தின் விளைவுகள்



https://m.facebook.com/story.php?story_fbid=622941515231051&id=100025456231980

உலக சமாதானம் பாடல் : 22

*ரசாயன மாற்றத்தின் விளைவுகள்*

ரசாயன மாற்றத்தின் விளைவுகள்
பலடையும் ரசாயன மாற்றங்கள் ஒப்ப
உட்கொள்ளும் சுவாசம் ரத்த ஓட்டம், மற்றும்
குடலதனில் ஆகார சீரணத்தில்,
குறிப்பிட்ட மாறுதல்கள். அறிவின் போக்கில்
இடம் பெருகல் குறைதலோடு சீவவசியத்
திறன் மாறல் அதன் விளைவாய் சமூகவாழ்வில்
கொடல் வாங்கல் அனுபவித்தல் இவற்றில் காணும்
கூர்ந்துணரத் தக்க பல நிகழ்ச்சிகள் ஆம்.


உடலில் ஏற்படும், கூடும், குறையும், ரசாயன மாற்றங்களுக்
கேற்றவாறு சுவாசம், இரத்த ஓட்டம், உணவு சீரணம் இவற்றிலும்
மாறுதல்கள் உண்டாகும்.
மேலும் அறிவிலும், உற்சாகத்திலும், சீவவசியத்திறனிலும்
(பலர் விருப்பு வெறுப்புக்கு உட்படல்) கூடுதல் குறைதல் ஏற்படும்.
அதன் விளைவாக சமூக வாழ்வில் கொடுக்கல், வாங்கல், அனுப
வித்தல் என்ற இம் முறைகளிலும் அவ்வப்போது பலவித மாறுதல்
களும் உண்டாகின்றன.

No comments: