https://m.facebook.com/story.php?story_fbid=636322477226288&id=100025456231980
உலக சமாதானம் பாடல்
24 . சூழ்நிலைகள்
ஒன்றறிவோம் , தேகசுகம் , அறிவு , செல்வம் ,
உற்றார் , ஊர் , உலகம் , அண்டம் , சந்தர்ப்பங்கள்
என்றவைகள் பொருந்துவதற் கேற்றவாறு
எவருக்கும் வாழ்வில் இன்ப துன்பங்காணும்,
அன்றன்று அவ்வப்போது இவைகள் மாறும் ,
அறிவோம் இவ்வமைப்பே சூழ்நிலைகள் என்று .
ஒன்றை ஒன்றும் இவைமோதும் நிர்ப்பந்தத்தால்
உயிரினத்தைச் செயல்படுத்தும் உண்மை காண்போம் .
( 1 ) சரீர ஆரோக்கியம் , ( 2 ) அறிவின் நிலை . ( 3 ) செல்வம் . ( 4 ) உற்றார் . ( 5 ) ஊர் ( 6 ) உலகம் , ( 7 ) பூமி முதலான கோள்களின் சார நிலைகள் ( 8 ) சந்தர்ப்பங்கள் என்னும் எட்டு வகையான சூழ் நிலைகளும் பொருத்துவதற்கேற்றவாறு . ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இன்பமோ துன்பமோ தோன்றுகிறது .
இந்தச் சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் அவ்வப் போது மாறிக் கொண்டே இருக்கும் . இவைகளில் ஒன்றை ஒன்றும் , ஒன்றை பலதும் , பலது ஒன்றையும் , பலதும் பலதையும் தாக்கிச் சாதக பாதகம் எப்போதும் விளைவிப்பனவாய் அமைந்திருக்கின்றன .
இத்தகைய சூழ்நிலையின் நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டே உயிரினங்கள் செயலாற்றவும் வேண்டியிருக்கின்றன .
உதாரணம் : அறிவின் விருப்பம் கடற்கரைக்குப் போகலாம் என்றிருக்கிறது . குடும்பத்தில் ஒருவருக்கு வியாதியின் காரணமாகவோ ( உற்றார் சூழ்நிலை ) , செலவுக்குப் பணமில்லாமலோ , ( செல்வச் சூழ்நிலை ) மழையினாலோ ( அண்ட சூழ்நிலை ) , விரும்பியபடி கடற்கரைக்குப் போக முடியாது போகிறது .
இப்போது திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஒருவன் அறிவு முடிவு கூறுகிறது . குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஆள் இல்லாமலோ , தாயாரின் உடல் நலக் குறைவாலோ , பெண் வீட்டுக்காரர் தொந்தரவாலோ , அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது .
ஒவ்வொரு மனிதனும் பெரும்பாலும் இத்தகைய சூழ்நிலைகளின் நாப்பந்தங்களுக்குட்பட்டுச் செயலாற்றி வாழ்கிறான் .
No comments:
Post a Comment