Thursday, 17 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வஜ்ர முத்திரை*

இந்திரனின் கையில் உள்ள ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம் ஆகும்.
வைரத்துக்கும் வஜ்ரம் என்று பெயர். வஜ்ர முத்திரை, இடிக்கு
அடையாளமாகக் கூறப்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்
முறையாக நடக்கத் தூண்டுகோலாக இந்த முத்திரை உள்ளது.
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால், ரத்தம் அழுத்த
பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில், வயிற்றுக் கோளாறுகள், கணையம்
மற்றும் இதயப் பாதிப்புகள் ஏற்படும். ஒருவித வெறுப்பு,
அமைதியின்மை, தலைச்சுற்றல் ஆகியவை தோன்றும்.
அலுவலகத்தில் வேலை பார்த்து, இயந்திர வாழ்க்கை வாழ்பவர்
களுக்கு இந்த வஜ்ர முத்திரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
செய்முறை
கட்டை விரலின் நுனியை நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்
ஆகியவை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல்
வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யலாம்.
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம்.
நேர அளவு
ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும், ஐந்து நிமிடங்கள் வீதம்
செய்யலாம். அத்துடன் மூக்கின் அடிப்பகுதி, தலையின் முன் பக்க
நடுப்பகுதி, தலையின் பின்புறம், பிடரி, கழுத்துப் பகுதி ஆகிய
இடங்களில் நடு விரலால் மஜாஸ் செய்ய வேண்டும்.

*எச்சரிக்கை*

_*அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது.*_

*பலன்கள்*

1. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

2. அமைதியின்மை, தலைச்சுற்றல் குணமாகும்.

3. வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

4. கணையம், கல்லீரல் ஆகியவை பலப்படும்.

5. குறை ரத்த அழுத்த நோய் குணமாகும்.

6. புகைப் பிடித்தல், புகையிலை உபயோகித்தல், காப்பி, டீ குடித்தல்
ஆகிய பழக்கங்களை படிப்படியாகக் குறைத்து, நாளடைவில்
அப்பழக்கங்களில் இருந்து விடுபடலாம்.

7. இயந்திர வாழ்க்கை வாழ்பவர்களை, அதிையாக இருக்கவும்,
நோய்களில் இருந்து விடுபடவும் வைக்கிறது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Saturday, 12 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சமான வாயு முத்திரை*

சரி சமானம் என்றால் சரிநிகர் என்று பொருள். சமானம் என்றால்
சமமாக இருத்தல். அதாவது, சமன்படுத்துதல். நமது உடல் பஞ்சபூதங்
களால் ஆனது. நமது விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை
பூதத்துடன் தொடர்புடையவை.
இந்த பஞ்ச பூதங்களையும் ஒருங்கிணைத்தால் சமநிலை உண்டாகும்.
ஐந்து விரல்களும் இணையும்போது நீர், நிலம், காற்று, ஆகாயம்,
நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களும் இணைகின்றன. அதனால்,
பஞ்சபூதங்களின் சக்தியும் ஒருசேரக் கிடைக்கிறது.
இந்த முத்திரைக்கு சங்கல்ப முத்திரை என்ற பெயரும் உண்டு.
அதாவது, உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல். 'தெய்வ சங்கல்பம்.
என்ற சொல் அடிக்கடி பேச்சு வழக்கில் காணப்படுகிறது. அதாவது,
இறைவனின் முடிவு என்று பொருள். எனவே முடிவு, உறுதி
ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும் பயன்படும் முத்திரை இது.
அதனால், இதை சங்கல்ப முத்திரை என்றும் அழைக்கலாம்.

*செய்முறை*

கட்டை விரலுடன் மற்ற நான்கு விரல்களையும் குவித்தபடி இணைக்க
வேண்டும். விரல்களுக்கு இடையே ஒரு வெற்றிடம் உண்டாக
வேண்டும். இந்த அமைப்பு ஒரு தாமரை மொட்டைப்போல காட்சி
தரும். இந்த முத்திரையை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
செய்யலாம்.
நேர அளவு
தொடக்கத்தில் எட்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். முத்திரையை வைத்த
பிறகே சங்கல்பம், மந்திரம் ஆகியவற்றைக் கூற வேண்டும். நாம்
எடுக்கும் உறுதிமொழி மூளைக்குச் செல்று பதிவாகிவிடுகிறது.
இதனால் துணிவு, விடாமுயற்சி ஆகியவை ஏற்படும்.

*பலன்கள்*

1. மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

2. உடலுக்கு பஞ்சபூத சக்திகள் கிடைக்கின்றன.

3. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

4. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

5. தீய சக்திகள் அண்டாது.

6. அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படும்.

இந்த முத்திரையை அதிக நேரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை:

15 நிமிடங்கள் செய்தாலே போதும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Wednesday, 9 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பிராண முத்திரை*

ஆக்ஸிஜனை பிராண வாயு என்பார்கள். நாம் உயிர் வாழ இந்த
ஆக்ஸிஜன் அவசியம். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய்
விட்டது என்பார்கள். அதனால்தான் ஆக்ஸிஜனை, பிராண வாயு என்று
சொல்கிறோம். ஒருவர் இறக்கும் தருவாயில் படும் அவஸ்தையை
பிராண அவஸ்தை என்பார்கள். எனவே, பிராணன் என்பது வாயு
அல்லது காற்று என்று கொள்ளலாம்.
நமது உடலில் ஐந்து விதமான வாயுக்கள் இருப்பதாக பாரம்பரிய
வைத்திய முறைகள் சொல்கின்றன. அவை: பிராணன், அபானன்,
சமானள், உதானன், வியானன் என்பதாகும். இந்த ஐந்து வாயுக்களும்
நல்ல முறையில் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்கினால்
மட்டுமே உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இந்த ஐந்தில் முக்கியமான வாயு ‘பிராணன்' என்ற வாயு. இந்த
வாயுவை வளர்த்துக்கொள்ளவும், சக்தி உள்ளதாகச் செய்யவும் உதவும்
முத்திரையே பிராண முத்திரை.

*செய்முறை*

பெரு விரல் நுனியை, சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளைத்
தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்களான
ஆள்காட்டி விரலும் நடு விரலும் நேராக இருக்க வேண்டும்.
பிராண முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்.
முதுகை வளைக்காமல் நேராக அமர வேண்டும். இதனால், பிராணன்மேல் நோக்கி எழ முடியும். நேராக அமர முடியாதவர்கள் நேராகப்
படுத்துக்கொண்டு செய்யலாம்.

*நேர அளவு*

கால நேரமின்றி எவ்வளவு நேரமும் செய்யலாம். இருப்பினும்
தினமும் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். சிரமமாக
இருந்தால், முதலில் 15 நிமிடங்கள் செய்து படிப்படியாக அதிகரித்துக்
கொண்டு போகலாம். நேரம் இல்லாதவர்கள், 45 நிமிடங்களை மூன்று
பகுதிகளாகப் பிரித்து காலை, மதியம், இரவு நேரங்களில் செய்யலாம்.
பெரு விரல் - நெருப்பு, மோதிர விரல் - நிலம், கண்டு விரல் - நீர்.
இந்த மூன்று பூதங்களின் சேர்க்கையால் உடலில் உள்ள அசுத்தங்கள்
அகன்று, மனம் தூய்மையாகி, பிராணன் புதிதாக உருவாகும்.

*பலன்கள்*

1. உடல் வலுவாகும்.

2. ரத்தக் குழாய் அடைப்புகள் சரியாகும்.

3. உற்சாகம் உண்டாகும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

5. கண் பார்வை குணமாகும். கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.

6. களைப்பு நீங்கும்.

7. நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

8, பக்கவாத நோய்கள் குணமாகும்.

9. நினைவாற்றல் அதிகரிக்கும்.

10. சுவாச உறுப்புகள் உறுதியாகும். சுவாசம் சீரடையும். ஆஸ்துமா
நோய் குணமாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Monday, 7 February 2022

பஞ்சமுட்டி கஞ்சி

*பஞ்சமுட்டிக் கஞ்சி:*

தென் தமிழகத்திலும், இலங்கை தமிழர்களிடமும் வழக்கத்தில் உள்ள பஞ்சமுட்டிக் கஞ்சி, உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடியது. மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறு பயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிந்துகொண்டு, மண்பானையில் போட்டு, ஒரு லிட்டர் நீர் சேர்த்து, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மி.லி அளவு) வரும் வரை காய்ச்சவும். பின்னர் துணி முடிப்பை எடுத்துவிட்டு, கஞ்சியைப் பருகலாம். பருப்புசேர்ந்திருப்பதால் வகைகளும், பயறு வகைகளும் சேர்ந்திருப்பதால் இதில் புரதக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை. சிலர் முளைகட்டிய பயறு வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். இதைத் தயாரித்த பிறகு சிறிது மிளகுத் தூள் தூவி பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கினால், எளிதில் சீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். நோயாளியைச் சந்திக்கச் செல்லும்போது, விளம்பர உத்திகளின்ஏ மூலம் பிரபலமடைந்த ஊட்டச்சத்துக்செல்வதற்குப் கலவைகளை வாங்கிச் செல்வதற்குப் பதிலாக, பஞ்சமுட்டிக் கலவையைத் தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். நோயாளியின் உடல்நிலை விரைவில் சமநிலை அடையும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ஞான முத்திரை*

ஞான முத்திரையை தியான முத்திரை என்றும் சொல்வார்கள்.
ஞானம் என்றால் அறிவு. அறிவைக் கொடுப்பதால், அறிவு முத்திரை
என்றும் சொல்லலாம். ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று,
'பரோக்ஷ ஞானம்'; இன்னொன்று, 'அபரோக்ஷ ஞானம்', பரோக்ஷ
ஞானம் என்பது தியரி, அபரோக்ஷ ஞானம் என்பது செய்முறை
(பிராக்டிகல்). அதாவது, ஒன்று படித்து அறிந்து கொள்ளுதல்,
இன்னொன்று நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்தல். இந்த
இரண்டில், அபரோக்ஷ ஞானம்தான் உயர்ந்தது.
ஆத்ம ஞானம்
மனிதன் தனது உண்மையான நிலையை உண்மையாகவே
அறிந்துகொள்வதுதான் ஆத்ம ஞானம். முயற்சி, பெரு முயற்சி,
இமாலய முயற்சி மேற்கொள்பவர்களுக்குத்தான் ஆத்ம ஞானம்
கிட்டும். ஞான நிலையை அடைய உதவக்கூடியது.

 முத்திரைகளில்
முக்கியமானது ஞான முத்திரை. இதை, சின் முத்திரை என்றும்
சொல்லலாம்.

*செய்முறை*

பெரு விரல் (கட்டை விரல்) நுனிப்பகுதியால் ஆள்காட்டி விரலின்
நுனிப் பாகத்தை மெதுவாகத் தொட வேண்டும். மற்ற மூன்று
விரல்களும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். இதை நின்றுகொண்டோ, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலோ
செய்யலாம். ஆனால், அமைதியான சூழ்நிலையில் செய்ய வேண்டும்.
நேர அளவு
இதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். நடந்து
கொண்டோ, படுத்துக்கொண்டோ செய்யக் கூடாது. தியானத்தில்
இருப்பவர்கள், தியானம் முடியும் வரை செய்யலாம்.
நமது கையில் உள்ள பெரு விரல், நெருப்பு என்ற பஞ்சபூதமாகும்.
ஆள்காட்டி விரல், காற்று என்ற பஞ்சபூதமாகும். இதனால் நெருப்பு
உண்டாகிறது. இந்த நெருப்பால், தீய சிந்தனைகள் போன்ற
அழுக்குகள் எரிக்கப்படுகின்றன.
கட்டை விரலில் அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கட்டை விரலைச்
சுட்டு விரலால் அழுத்தும்போது மூளை நரம்புகள், பிட்யூட்டரி,
நாளமில்லா சுரப்பிகள் ஆகியவை தூண்டப்பட்டு மனத் தெளிவு,
நல்ல உணர்வு, நினைவாற்றல் ஆகியவை உண்டாகின்றன.

*பலன்கள்* 

1. தூக்கமின்மை, சோம்பேறித்தனம், கோபம், மனசஞ்சலம் நீங்கும்.

2. குடிப்பழக்கம் குறையும்.

3. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

4. மூளை கூர்மை அடையும்.

5. எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

6. தூக்கமின்மை குணமாகும்.

7. மனநோய், ஹிஸ்டீரியா, மன எரிச்சல் நீங்கும்.

8. தன்னம்பிக்கை உண்டாகும்.

9. தலைவலி நீங்கும்.

10. மனம் ஒருமுகப்படும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Friday, 4 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*அஞ்சலி முத்திரை*

தமிழில் யாரையாவது பார்க்கும்போது, இரு கரம் கூப்பி வணக்கம்
என்கிறோம். இதையே, வடமொழியில் 'நமஸ்காரம்' அல்லது
'நமஸ்தே' என்கிறோம். நமஸ்தே என்றால், நான் உங்களை
வணங்குகிறேன் என்று பொருள்.
இரு கரம் கூப்பி வணங்குவதில் மூன்று முறைகள் உள்ளன.

1. கைகள் மார்புக்கு நேராக வைத்து வணங்குதல்.

2. கைகளை முகத்துக்கு நேராக வைத்து வணங்குதல்.

3. கைகளைத் தலைக்கு மேலாக வைத்து வணங்குதல்.

முதலாவது முறையில் பெற்றோர், பெரியோர் ஆகியோரை வணங்க
வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கிறது. மார்புப் பகுதியில் அனா
ஹதச் சக்கரம் உள்ளது. அன்புக்கு உறைவிடமாக இது திகழ்கிறது.
எனவேதான், மார்புக்கு நேராக கையை வைத்து வணங்குகிறோம்.
இரண்டாவது முறையில் குரு, ஆசிரியர் ஆகியோரை வணங்க
வேண்டும். அறிவைக் கொடுத்து ஞானம் ஏற்படச் செய்பவர் ஆசிரியர்.
இறைவனை அடைய வழிகாட்டுபவர் குரு அல்லது ஆச்சாரியார்.
மேலும், இரு புருவங்களுக்கு மத்தியில் இருப்பது ஆக்ஞா சக்கரம்.
இது மூன்றாவது கண்ணாகும். ஞானம் இங்கிருந்துதான் பிறக்கிறது.
மூன்றாவது முறையில் இறைவனை வணங்க வேண்டும். இது
சரணாகதி தத்துவத்தை விளக்குகிறது. திரௌபதி துகிலுறியப்பட்ட
போது, வேறு வழியில்லாமல் கிருஷ்ணனை துதித்து தன் இரு கைகளையும், மேலே தூக்கி வணங்கி சரணாகதி அடைந்தாள்.
இறைவன் அவளது மானத்தைக் காத்தருளினார். தலையின்
மேற்பகுதியில் சகஸ்ராரச் சக்கரம் உள்ளது. நம்மை தெய்வ சக்தியோடு
இணைப்பது இந்தச் சக்கரம்தான்.

*செய்முறை*

இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்துக்
கொள்ள வேண்டும். இரண்டு பெரு விரல்களும் மார்புப் பகுதியைத்
தொட வேண்டும். இரண்டு கைகளும், விரல்களும் இடை
வெளியின்றி ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும். வலது
கை விரல்கள், இடது கை விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்க
வேண்டும். தலையைச் சிறிது தாழ்த்தி கண்களை மூடியபடி இருக்க
வேண்டும்.

*வேலை செய்யும் விதம்*

ஆதி காலத்தில், சீனர்கள் சக்தியை (Energy) 'யின்' மற்றும் 'யாங்'
என்று இரண்டு பிரிவாகப் பிரித்தார்கள். இந்த இரண்டு சக்திகளும் நேர்
எதிரானவை. இந்த இரண்டு உயிர் சக்தியைப் பொறுத்துத்தான் உடல்
ஆரோக்கியம் அமைந்துள்ளது. இவற்றின் ஏற்ற இறக்கத்தின்
காரணமாகவே நோய்கள் ஏற்படுகின்றன. இந்த இரண்டும், ஒன்றை
ஒன்று சார்ந்தே இருக்கும், தனித் தனியாக இயங்க முடியாது.
நம் ஹிந்து மதத்தில், சிவன் அர்த்தநாரியாகக் காட்சி தருகிறார்.
சிவனின் உடலில் இடப்பக்கத்தில் பார்வதி இருக்கிறார். சிவன்,
பாசிடிவ் சக்தி; பார்வதி, நெகடிவ் சக்தி. இருவரும் சேர்ந்து
இயங்கினால்தான், இந்த உலகமே இயங்க முடியும்.
நமது வலது கை நேர் சக்தி, இடது கை எதிர் சக்தி. இரண்டும்
இணையும்போது சக்தி ஓட்டம் ஏற்பட்டு நிறைவு பெறுகிறது.
இதனால், உடலில் உள்ள பிராண சக்தி நிலையாக இருக்கும். நமது
சக்தியை மற்றவர்களால் ஈர்க்க முடியாது. அவர்களின் தவறான
செயல்களும், எண்ணங்களும் நம்மை அண்டாது, நம்மை எதுவும்
செய்யாது.
அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இரு கரம் கூப்பி
வணங்குதல் நல்லது. இதனால், அடக்கமும் அமைதியும் உண்டாகும்.
பணிவு ஏற்படும். நன்றியின் அடையாளமாகவும் இதைக்
கொள்ளலாம்.

*பலன்கள்*

1. மன அழுத்தம் குறையும்.

2. மூளை அமைதி அடையும்.

3. நமது தலையில் உள்ள இரு பக்க மூளைகளும் இணைந்து
செயல்படும். இதனால், உடலின் செயல் திறன், கற்பனைத் திறன்,
புதிய படைப்புகளைப் படைக்கும் ஆற்றல் உண்டாகும்.

4. நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Thursday, 3 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பிரிதிவி முத்திரை*

பஞ்சபூதத்தில் நிலம் அல்லது மண் என்பதை பிரிதிவி என்று
அழைக்கிறோம். நிலமானது சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம்
என்ற ஐந்து குணங்களைக் கொண்டது. பூமியைத் தாயாகவும்,
பூமாதேவி எனவும் குறிப்பிடுகிறோம். பூமியில் மட்டுமே, அதாவது
மண்ணில் மட்டுமே விதைக்கும் விதை 'செடியாக வளருகிறது. நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற மற்ற நான்கு பூதங்களுக்கும் அடிப்
படையாக விளங்குவது பூமியே. இந்த நிலம் என்ற பூதம், உடலில்
சம அளவில் இருந்தால், சிறந்த குணங்களும் உயர்ந்த பண்புகளும்
காணப்படும். அவ்வாறு இல்லாத நிலையில் மனம் அலைபாயும்.
எதிலும் ஒரு பிடிப்பில்லாத நிலை காணப்படும். முழு ஈடுபாட்டோடு
எந்தச் செயலையும் செய்ய முடியாது. குற்றம் குறைகள் ஏற்பட
வாய்ப்பு உண்டு.
அதே நேரத்தில், இந்த நிலம் என்ற பூதம் அளவுக்கு அதிகமாகவும்
இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் மந்த புத்தி காணப்படும்.
மேலும், ஆசை அதிகரிக்கும். தகுதி இல்லாதவற்றையும் அடைய
முயற்சி மேற்கொள்ளச் செய்யும். இதனால், பல சிக்கல்கள்
உருவாகும். இவ்வாறு நிகழாமல் இருக்க, பிரிதிவி முத்திரையை
முறையாகச் செய்து வர வேண்டும்.

*செய்முறை*

மோதிர விரல் நுனியை பெரு விரல் நுனியுடன் சேர்த்து வைத்தால்
அதுதான் பிரிதிவி முத்திரை. இரு விரல்களையும் மெதுவாக
அழுத்தினால் போதுமானது. பிரிதிவி முத்திரையை செய்ய பத்மாசனம் அல்லது சுகாசனம் ஏற்றது.
இவ்வாறு செய்யும் போது, உடல் அளவிலும், மனத்தளவிலும்
உண்டாகும் குறைகள் நீங்குகின்றன. இதைச் செய்யப குறிப்பிட்ட கால
அளவுகள் எதுவும் இல்லை. முதலில் 5 நிமிடத்தில் தொடங்கி, பிறகு
படிப்படியாக அதிகரித்து 25 நிமிடங்கள் வரை செய்யலாம்.
மோதிர விரல், நிலம் என்ற பூதத்துக்கு உரியது. பெரு விரல், நெருப்பு
என்ற பூதத்துக்கு உரியது. இவை இரண்டும் இணையும்போது
‘அழுக்குகள் நீங்கி மனசு சுத்தமாகிறது.

*பலன்கள்*

1. உடல் சோர்வு, மனச் சோர்வு நீங்கும்.

2. உடல் பலகீனமாய் இருப்பவர்களின் உடல் எடையை அதிகரிக்கச்
செய்யும்.

3. தோலின் பளபளப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

4. உடலின் செயல் திறமை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியமாக
இருக்க உதவுகிறது.

5. உலகில் பற்று குறையும்.

6. நடக்கும் போது தள்ளாட்டம் இருக்காது.

7. உலக வாழ்க்கை குறித்த தெளிவான சிந்தனை உருவாகும்.

8. அலைபாயும் மனம் அமைதி பெறும்.

9. சைனஸ் போன்ற நோய்கள் அகலும்.

10. உணவு எளிதில் ஜீரணமாகும்.

11. பொறுமை, தன்னம்பிக்கை ஆகியவை ஏற்படும்.

12. உடலின் வெப்பம் அதிகரிக்ககாமல் சமநிலையில் இருக்கும்.

13. மூட்டு வாதம் குணமாகும்.

14. கழுத்து முதுகெலும்பு அழற்சி, முக நரம்பு இழப்பு குணமாகும்.

15. வாயுத் தொல்லை நீங்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Wednesday, 2 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ஆகாய முத்திரை*

ஆகாயத்துக்கு பிரபஞ்ச சக்தி, அண்டவெளி, சப்தம் என்று பல
பெயர்கள் உண்டு. நமது உடலில், தொண்டைக்குழியை ஆகாயத்
தோடு தொடர்புபடுத்திச் சொல்வாார்கள். பஞ்சபூதங்களில் ஒன்றான
ஆகாயத்தின் நிறம் கறுப்பு. அதிதேவதை, சதாசிவன். வாயு சப்தம்,
ஸ்பரிசம் என்ற குணங்களைக் கொண்ட ஆகாயம்தான், நாம் காதால்
கேட்கும் ஓசைக்குக் காரணமாக இருக்கிறது.
ஆகாயத்தில் ஒன்றும் இல்லை. இது, சூன்யம் என்ற தத்துவத்தை
விளக்குகிறது. தியானத்தின் முடிவில் மனம் வெற்றிடமாக, அதாவது
சூன்யமான நிலையை அடையும். இந்த நிலையை அடைய ஆகாய
முத்திரை உதவுகிறது.

*செய்முறை*

நடுவிரல் எனப்படும் பாம்பு விரலின் முன் பகுதியால், பெரு விரல்
என்ற கட்டை விரலின் தலைப் பகுதியைத் தொட வேண்டும். மற்ற
மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். பத்மாசனத்தில்
அமர்ந்த நிலையில் இதைச் செய்ய வேண்டும்.
ஆகாயமான நடு விரலும், அக்னியான பெரு விரலும் இணையும்போது
அகம்பாவம் அகன்று அடக்கம் உண்டாகும். ஞானம் பிறக்கும். இந்த
இரண்டு விரல்களும் சேரும்போது, அவற்றில் உள்ள சக்தி
தூண்டப்படுகிறது. சப்தத்தை உணரக்கூடிய காது தூண்டப்படுகிறது.
அதனால், உள்ளே இருக்கும் ஆன்மாவின் சப்தத்தையும், வெளியில்
இருக்கும் அண்டவெளி சப்தத்தையும் அறிய முடிகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு எலும்புகளில் சிறிய
துவாரங்கள் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படலாம். மற்றும்
எலும்புகள் மெலிந்து உடையலாம். இந்த நோய் நீங்க இந்த முத்திரை
உதவும்.

*பலன்கள்*

1. காதில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

2. கேட்கும் சக்தி அதிகரிக்கும்.

3. காதில் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

4. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

5. மன அமைதி உண்டாகும்.

6. மனத்தில் தெளிவு பிறக்கும்.

7. எலும்புகள் வலுப்பெறும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐