Thursday, 3 February 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பிரிதிவி முத்திரை*

பஞ்சபூதத்தில் நிலம் அல்லது மண் என்பதை பிரிதிவி என்று
அழைக்கிறோம். நிலமானது சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம்
என்ற ஐந்து குணங்களைக் கொண்டது. பூமியைத் தாயாகவும்,
பூமாதேவி எனவும் குறிப்பிடுகிறோம். பூமியில் மட்டுமே, அதாவது
மண்ணில் மட்டுமே விதைக்கும் விதை 'செடியாக வளருகிறது. நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற மற்ற நான்கு பூதங்களுக்கும் அடிப்
படையாக விளங்குவது பூமியே. இந்த நிலம் என்ற பூதம், உடலில்
சம அளவில் இருந்தால், சிறந்த குணங்களும் உயர்ந்த பண்புகளும்
காணப்படும். அவ்வாறு இல்லாத நிலையில் மனம் அலைபாயும்.
எதிலும் ஒரு பிடிப்பில்லாத நிலை காணப்படும். முழு ஈடுபாட்டோடு
எந்தச் செயலையும் செய்ய முடியாது. குற்றம் குறைகள் ஏற்பட
வாய்ப்பு உண்டு.
அதே நேரத்தில், இந்த நிலம் என்ற பூதம் அளவுக்கு அதிகமாகவும்
இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் மந்த புத்தி காணப்படும்.
மேலும், ஆசை அதிகரிக்கும். தகுதி இல்லாதவற்றையும் அடைய
முயற்சி மேற்கொள்ளச் செய்யும். இதனால், பல சிக்கல்கள்
உருவாகும். இவ்வாறு நிகழாமல் இருக்க, பிரிதிவி முத்திரையை
முறையாகச் செய்து வர வேண்டும்.

*செய்முறை*

மோதிர விரல் நுனியை பெரு விரல் நுனியுடன் சேர்த்து வைத்தால்
அதுதான் பிரிதிவி முத்திரை. இரு விரல்களையும் மெதுவாக
அழுத்தினால் போதுமானது. பிரிதிவி முத்திரையை செய்ய பத்மாசனம் அல்லது சுகாசனம் ஏற்றது.
இவ்வாறு செய்யும் போது, உடல் அளவிலும், மனத்தளவிலும்
உண்டாகும் குறைகள் நீங்குகின்றன. இதைச் செய்யப குறிப்பிட்ட கால
அளவுகள் எதுவும் இல்லை. முதலில் 5 நிமிடத்தில் தொடங்கி, பிறகு
படிப்படியாக அதிகரித்து 25 நிமிடங்கள் வரை செய்யலாம்.
மோதிர விரல், நிலம் என்ற பூதத்துக்கு உரியது. பெரு விரல், நெருப்பு
என்ற பூதத்துக்கு உரியது. இவை இரண்டும் இணையும்போது
‘அழுக்குகள் நீங்கி மனசு சுத்தமாகிறது.

*பலன்கள்*

1. உடல் சோர்வு, மனச் சோர்வு நீங்கும்.

2. உடல் பலகீனமாய் இருப்பவர்களின் உடல் எடையை அதிகரிக்கச்
செய்யும்.

3. தோலின் பளபளப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

4. உடலின் செயல் திறமை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியமாக
இருக்க உதவுகிறது.

5. உலகில் பற்று குறையும்.

6. நடக்கும் போது தள்ளாட்டம் இருக்காது.

7. உலக வாழ்க்கை குறித்த தெளிவான சிந்தனை உருவாகும்.

8. அலைபாயும் மனம் அமைதி பெறும்.

9. சைனஸ் போன்ற நோய்கள் அகலும்.

10. உணவு எளிதில் ஜீரணமாகும்.

11. பொறுமை, தன்னம்பிக்கை ஆகியவை ஏற்படும்.

12. உடலின் வெப்பம் அதிகரிக்ககாமல் சமநிலையில் இருக்கும்.

13. மூட்டு வாதம் குணமாகும்.

14. கழுத்து முதுகெலும்பு அழற்சி, முக நரம்பு இழப்பு குணமாகும்.

15. வாயுத் தொல்லை நீங்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

No comments: