வஜ்ராசனத்தில் அமர்ந்து பயிற்சிகள் செய்யும்போது கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்
இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதி பலப்படுத்தப்படுகிறது.
இடுப்பு மற்றும் 8 கீழ் முதுகு தசைகள் பலப்படுத்துகிறது.
இதை உணவு உண்ட பிறகும் செய்யலாம்.
தவத்தில் ஆழ்ந்து செல்ல உதவுகிறது.
காந்த ஓட்டம் சீராகும்.
கால்களின் அடிப்பகுதியிலிருந்து இதயம் வரை இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்கிறது.
செரிமான சுரப்பிகளின் திறன், செரிமான சக்தியின் செயல்திறனை அதிகரிக்கும்.
முக்கிய தமணி ஓட்டத்தை அதிகரிக்கும். இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கும்.
உடலின் ஏழு சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கப்படுகின்றன.
வஜ்ராசனத்திற்கு பிறகு உடல் வைரத்தைப் போல் வலுவாக மாறுகிறது.
சமமாகவும் / ஒத்ததாகவும், ஆக்கினை / அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது.
நிணநீர் ஓட்டத்தைத் தூண்டுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.
தசைகளில் உள்ள பதட்டம் போய் தளர்வாகிறது.
வலியைக் குறைத்து சரிசெய்கிறது.