Saturday, 2 September 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் / Benefits of simplified kundalini yoga phisycal exercises

                                      எளியமுறை உடற்பயிற்சி

கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 1




  • கைப்பயிற்சியின் முதல் நிலையில் கால் பலம் பெறுகிறது.

  • ½ அடி இடைவெளியில் கால்களை வைக்கும்போது முதுகெலும்பு பலப்படுகிறது

  • இது கணுக்கால், தொடைகள் மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இடுப்பு மற்றும் அடிவயிற்று தசை அசைவுகளின் கட்டுப்பாட்டைப் பெற உதவுகிறது.

  • இரு கைகளையும் தலைக்கு மேல் குவிந்து, காதோடு ஒட்டி வைக்கும்போது கழுத்து தசைகள் பலம் பெறுகின்றன.

  • தலைக்கு மேல் கைகள் குவித்து 4 மூச்சுகள் இழுத்து விடும்போது நுரையீரல் திறன் கூடுகிறது.

  • வலது மூளை, இடது மூளை இணைப்பதற்கான பயிற்சியாக உள்ளது.

  • கைகளை மேல்நோக்கி குவிக்கும்போது தலை முதல் இதயம் வரையிலும், கைகளை கீழ்நோக்கி தொடை ஒட்டி வைக்கும்போது இதயம் முதல் பாதம் வரை இரத்த ஓட்டம் சீராகிறது.

  • பஞ்சபூத ஆற்றல் சமன்படுகிறது.




கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 2



  • வாத நோய்கள் கட்டுப்படுகிறது.

  • நுரையீரல் தோற்று வராமல் தடுக்கப்படுகிறது.



கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 3,4,5


  • வாதம், பித்தம், கபம் சரியாக இயங்குகிறது.

  • பிரண சக்தி சீராகும்.

  • சிறுநீர், மலம், விந்து சரியான முறையில் வெளியேறும்.

  • சிறுநீரகம், கணயம் செயல்பாடு சமன்படும்.

  • உடல் சூடு சமன்படும்.

  • உணவு சப்த தாதுக்களாக மாற உதவுகிறது.

  • வலிப்பு கட்டுக்குள் வரும்.

  • உடலில் உள்ள இராஜ உறுப்புகள் சீரான இயக்கத்திற்கு வரும்.

  • மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது.

  • கை மரத்துப் போதல், உறைந்த தோள்பட்டை குணமாகிறது.

  • மனஅழுத்தம் குறைகிறது.







  • வலது கால் 1 அடி முன்னும் இடது கால் பின்னும் வைக்கும்போது பிரமிட் வடிவம் கிடைக்கிறது. முழுமையான சீவகாந்தத்தை ஈர்த்து தரும். உடலுக்கு ஆற்றல் கூடுகிறது.




கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 6



  • பாதம் ½ அடி இடைவெளி விடுவதால் அபரிமிதமான சீவகாந்தம் உள்ளிழுக்கப்படும்.

  • இரு கட்டை விரல்களை இணைக்கும்போழுது வான்காந்த ஆற்றல் இழுக்கப்படுகிறது.

  • கண் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

  • கழுத்து சார்ந்த பிரச்சினை மற்றும் முதுகெலும்பு (Disc) சார்ந்த பிரிச்சினைகள் சரியாகிறது.

  • உடலில் முதுகுப் பகுதியில் உள்ள தசைதான் பெரியது. அதுவே முதுகுத் தண்டைப் பிடித்து வைத்துள்ளது. அந்த முதுகுப் பகுதியில் உள்ள தசைகளை இயக்குகிறது.





  • உள்ளங்கை முட்டியில் அமர்த்தி கால்களை சுழற்றும்போது மூட்டுப் பகுதியில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறும்.

  • மூட்டில் வீக்கம் இருந்தால் நீங்கும்.

  • மூட்டுகளுக்கு இடையே எண்ணெய்ப் பசை இருப்பை அதிகரிக்கும்.

  • மூட்டுத் தேய்மானம் வராமல் காக்கப்படுகிறது.














No comments: