Friday, 25 January 2019

தினம் ஒரு மாற்றம்

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்*  (24/01/2019)

பஞ்சபூதத்தில் காற்று நம்மிடையே எவ்வாறெல்லாம் இருப்பாக உள்ளது?
சுவாசமாகவும்... நீரிலும் உள்ளது (H2O).

பேசும் போது சப்தமாக காற்று தான் காது மூலம் கேட்பதற்கு ஒலியாக, ஓசையாக உள்ளது. கோயிலில் மணியடித்து ஓசையெழுப்பி காற்றை வணங்குகிறோம்.

உட்கொள்ளும் உணவு வகைகளில் பசுமையான காய்கறி பழங்களில், பிராண சக்தி  உள்ளதை அறிவோம். சுவாசம் என்பதை பிராண வாயுவாக உள்ளே சுவாசிக்கிறோம். கரியமில வாயுவாக நச்சுக் காற்றை கழிவாக  வெளியேற்றுகிறோம்.
நுரையீரல் காற்றுக்கு உரிய மையம்.

இரைப்பைக்கு காற்று பகை என்பார்கள். ஆகவே தான் உணவை உண்ணும் போது பேசக் கூடாது என்பார்கள். உணவு உட்கொள்ளும் போது Air pipe and food pipe, இவையிரண்டிலும் உண்ணும் போது உணவுத் துகள்கள் ஏதேனும் ஏர் பைப் (Airpipe) இல் நுழைவதால் புரையேறுகிறது. இருமல் வருகிறது. 

பேசும் வார்த்தைகளை,  விட்டமின்களாக பிறருக்கு ஆறுதலாக இருப்பது அவசியம். காற்று,  பேச்சின் சப்தமாக உள்ளது. மந்திர உச்சாடனமாக உள்ளது.

வேப்ப  மரம்,  அரச மரம் இவைகளின் காற்று நேரடியாக உடலுக்குள் , மூளைக்குள், கற்பப்பைக்குள் சென்று அங்கே இருக்கும் குற்றங்களை நீக்கி,  அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்.

துளசிச் செடி பூமி வெப்பமாதலை தடுக்கும் சக்தி அதிகம் உண்டு என்று அறிவோம்.

 மூலிகைகளாக செடி, கொடி, மரங்கள் உடல்நலத்துக்குப் பயன்படுவதையும் அறிவோம். நம் வீட்டில் மூலிகைச் செடிகளை வைத்து வளர்க்க நோய் அணுகாமல் காக்க முடியும்.

காற்று மாசுபாடு என்பது கார், வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோல் டீஸல்  பயன்படுத்துவதாலும், காற்று அசுத்தமாகிறது. கூடிய வரை அருகே இருக்கும் இடங்களுக்கு சைக்கிளை பயன்படுத்தலாம். நடந்து செல்லும் தூரம் என்றால் நடந்தே செல்லலாம். உடற்பயிற்சியாகும். 

புகை பிடிப்பதன் மூலம் காற்று மட்டும் அல்ல மனிதர்களின் நுரையீரல், கல்லீரல் பாதிக்கும் அபாயம் மிக அதிகம்.
தியானத்தில் மூச்சை கவனிக்க எண்ணம் சீர் படும். புகைபிடிப்பதை தவிர்க்கலாம்.

உடலில் தச வாயுக்கள் உள்ளது. ஆகவே அந்த வாயுக்களை காற்றை மதிக்கும் போது காற்று நமக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கும்.  ரத்ததில் காற்று புகுவதால் மரத்துவிடுத்து.. ஆங்காங்கே காற்று உடலில் சுழன்றோடி வலி, மூச்சுப்பிடிப்பு,  துன்பம் ஏற்படுகிறது.  உணவை குக்கரில் காற்றழுத்தி சமைப்பதும் காற்றை தவறாக பயன்படுத்துகிறோம்.   விளைவு Gastric ulcer.. Gas trouble..மன அழுத்தம் சுவாசத்தில் பிரச்சினை.. மூச்சு விட சிரமம். 

இயற்கையை மதியாமல் இருந்த காரணத்தால், செயற்கை வழியில் ஆக்ஸிஜன் தேவைப் படும் நிலைமை வருகிறது. பிறர் மனம் நோக மூச்சு அடைக்க திட்டுவதும், பயனில்லாமல் பேசிவதும், மூச்சு முட்ட உணவு உண்பதும் காற்றை மதிக்கும் சிந்தனை எழுகிறது. 

நேரடியாக பாத்திரத்தில் வடித்து சோறு பொங்குவது நலம். காஸ் அடுப்பை பயன்படுத்துவதும் கூட சிந்திக்க வேண்டி வருகிறது.

புயல், சூறாவளி..இப்படி இயற்கையாக நடக்கும் சீரழிவுச் சூழல்....  காற்றை மதிக்காததே காரணம்.

காற்றை ஓசையாக, ஸ்பரிசமாக, வருடும் உணர்வை உணர முடியும். காற்று இல்லாத இடம் இல்லை. மதித்து முறைபடுத்தி பயன்படுத்தி வாழ்வோம்.

அன்புடன் ஜே.கே

Thursday, 10 January 2019

அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்....

*அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்...*

*இன்பம் எனக்கு ! துன்பம் உனக்கு !*

ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

'நமக்கு கஷ்டம் வரும்போது தானே கடவுளை நினைக்கிறோம். மற்ற நேரங்களில் அதைப் பற்றி நினைக்கிறதே இல்லையே......?

இதற்கான பதில் என்னவாக இருக்கும்?

அது ஒரு வியாபாரம்' என்றார் மகரிஷி.

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

'துன்பம் வரும்போது அதை அவன்கிட்டே கொடுத்து விடலாம், இன்பம் வரும்போது அதை நாமே வைத்துக் கொள்ளலாம்.

நன்றி கூட சொல்ல வேண்டியதில்லை.'
( சிரிப்பலை)
 - அருட்தந்தை

தத்துவார்த்தமான அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு ரசித்து, கற்றுக்கொள்ள வேண்டும்.

துன்பம் வரும்போது, தேங்காய் உடைக்கிறேன்.. பணம் உண்டியலில் போடுகிறேன், மொட்டை அடித்துக் கொள்கிறேன் போன்று வேண்டுவதால் எந்த பலனும் கிடைக்காது. அவரவர் கர்மவினைக்குத் தகுந்த படியே பலனை அனுபவிக்கிறோம் என உணர்ந்து கொள்ள வேண்டும்.

'விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை'

அழுத்தம் பொதிந்த வரிகள்.

'எந்த சீவனுக்கும் அறிவிற்கும் உடலுக்கும்
அந்தச் சமயத்தில் தேவையாய், பொருத்தமாய்,
வந்த அனுபோகம் இன்பமாம்; பின் விளைவைச்
சிந்திக்க, தீங்கு அற்றது எனில் அதுஉயர்வு ஆம்!'

'இன்பமே அளவுமுறை மீற மாறத்
துன்பமாய் மாறிவிடும். இயற்கை உண்மை!
இன்பமே துய்க்க வெனில், தோன்றுகின்ற
துன்பத்தை ஒழுக்கமுடன் தீர்த்தால் போதும்.'

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

*அயராத விழிப்பு நிலையில் செயல்களாற்ற துன்பமே வாரா.*

அருட்தந்தை அமுதமொழிகளை அறிவையறிந்த தெளிவில் உணர்ந்து, அதன்படி வாழ்ந்து அமைதி பெறுவோம்!!

குருவே துணை!!

அன்புடன் ரேவதி சிவகுமார்

Tuesday, 8 January 2019

அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்

வாழ்க வளமுடன்

*அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்...*

*அதுவும் ஒரு பயிற்சியா?*

1983-ல் உடற்பயிற்சிகளைச் செய்து காண்பித்தேன். அந்தச் சமயத்தில் ஒரு ஈ வந்து என் மூக்கின் மீது உட்கார்ந்தது. நான் ஒரு கைநால் அதைத் தள்ளிவிட்டு மறுமடியும் பயிற்சி செய்து காண்பித்தேன்.

அன்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அவர்கள் பயிற்சி செய்யும்போது... எல்லோரும் கைகளை இறக்கும்போது மூக்குக்கு அருகில் கொண்டு போய் இப்படி ஆட்டிவிட்டு (செய்து காண்பிக்கிறார்) கீழே கோண்டு வருகிறார்கள்...
(கூட்டத்தில் சிரிப்பு)
- அருட்தந்தை

அருட்தந்தையின் நகைச்சுவையான நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றிலும் தத்துவம் இழையோடி இருக்கிறது.

மேல் கூறிய குருபிரானின் அனுபவத்தில் தெளிந்த நல்லறிவோடு புரிந்து பயிற்சிகள் செய்யவேண்டும் என உணர்த்துகிறார்.

தான் பெற்ற இறை அனுபவங்களைப் பகிர்ந்த போதும் அதையேப் பின்பற்றாமல்,

*"சொல்லால் மட்டும் நம்பாதே*
*சுயமாய் சிந்தித்தே தெளிவாய்"*

*"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்*
*பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு"*

என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

திருவேதாத்திரியத் தத்துவங்களை அனுபவத்தால் உணர்ந்து மேன்மை அடைவோம்.

அன்புடன் ரேவதி சிவகுமார்
சென்னை.