Tuesday, 8 January 2019

அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்

வாழ்க வளமுடன்

*அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்...*

*அதுவும் ஒரு பயிற்சியா?*

1983-ல் உடற்பயிற்சிகளைச் செய்து காண்பித்தேன். அந்தச் சமயத்தில் ஒரு ஈ வந்து என் மூக்கின் மீது உட்கார்ந்தது. நான் ஒரு கைநால் அதைத் தள்ளிவிட்டு மறுமடியும் பயிற்சி செய்து காண்பித்தேன்.

அன்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அவர்கள் பயிற்சி செய்யும்போது... எல்லோரும் கைகளை இறக்கும்போது மூக்குக்கு அருகில் கொண்டு போய் இப்படி ஆட்டிவிட்டு (செய்து காண்பிக்கிறார்) கீழே கோண்டு வருகிறார்கள்...
(கூட்டத்தில் சிரிப்பு)
- அருட்தந்தை

அருட்தந்தையின் நகைச்சுவையான நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றிலும் தத்துவம் இழையோடி இருக்கிறது.

மேல் கூறிய குருபிரானின் அனுபவத்தில் தெளிந்த நல்லறிவோடு புரிந்து பயிற்சிகள் செய்யவேண்டும் என உணர்த்துகிறார்.

தான் பெற்ற இறை அனுபவங்களைப் பகிர்ந்த போதும் அதையேப் பின்பற்றாமல்,

*"சொல்லால் மட்டும் நம்பாதே*
*சுயமாய் சிந்தித்தே தெளிவாய்"*

*"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்*
*பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு"*

என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

திருவேதாத்திரியத் தத்துவங்களை அனுபவத்தால் உணர்ந்து மேன்மை அடைவோம்.

அன்புடன் ரேவதி சிவகுமார்
சென்னை.

No comments: