Sunday, 14 June 2020

உலக சமாதான பாடல் :25 ' மாற்ற வேண்டிய சூழ்நிலைகள்'

உலக சமாதான பாடல்
~~~~~~~~~~~~~~~~
25. மாற்றவேண்டிய சூழ்நிலைகள்'


தொல்லையற்று வாழவென்றால் மனிதனுக்கு

சூழ்நிலைகளில் பலது மாற வேண்டும் .

அல்லல் தரும் பணம் , உற்றார் , சந்தர்ப்பங்கள்

அறிவு எனும் இவை நாலும் அனைவருக்கும்

நல்ல முறையில் அமைக்க மனிதர் சக்தி

நட்புறவாய் ஒன்றுபட்டால் முடித்தேபோகும் .

மெல்லமெல்ல பணம் என்ற நச்சை முன்னே

முறிந்து விட்டால் , சிக்கல் பல தீர்த்தே போகும் .

மனித இனம் தொல்லையில்லாமல் வாழ வேண்டுமானால் , இன்று உலகில் உள்ள சூழ்நிலைகளில் பலவற்றை மாற்றியமைக்க வேண்டும் .

செல்லம் , உற்றார் என்ற இந்த இரண்டு வகைகளும் இல்லாமலே செய்து கொள்ளலாம் . இன்று மனிதர் வாழ்வில் குறுக்கிடும் பல சந்தர்ப்பங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் .

ஞாபக நிலையைப் பரந்த மனப்பான்மையில் , சமூக நலனே தன்னலன் என்ற முறையில் கடமை உணர்ந்து செயலாற்றும் வேகமாக மாற்றிக் கொள்ளலாம் .

இவ்வகை மாறுதல்களைச் செய்ய வேண்டுமானால் , உலகில் பல அறிவாளிகள் ஒன்றுபட்டு முயற்சித்தால் , முடியாதது அல்ல , இந்த நாலு வகை சூழ்நிலைகளையும் மாற்றியமைத்து விட்டால் , வாழ்க்கைத் தொல்லை அறவே மறைந்து விடும் .

மனிதன் உற்பத்தி செய்துகொண்டவற்றில் பணம் ஒன்றுதான் நச்சுக்கு ஒப்பானது. அதை முதலில் முறித்து விட்டால், மற்றும் உள்ள எத்தனையோ சிக்கல்கள் அத்துடன் மறைந்து போகும்.

உலக சமாதான பாடல்..26..தொடரும்.....

No comments: