உலக சமாதான பாடல்
26. பொது உடமைகள்உணவு, தொழில், உடை, வீடு, குழந்தை எல்லாம்
உலகப் பொது ஆட்சியின்கீழ் பொதுவாய்ச் செய்து
மணம் கொண்டு தம்பதிகள் ஒழுக்கத்தோடு,
மதி, உடலின் ஆற்றல்களை சமூகத்திற்கு
குணமளிக்கும் வழிகளிலே பயன்படுத்தி,
கொடிய நோய்கள் வறுமை இவையொழித்து,
பணம் என்ற நச்சை முறித்தென்றும் எங்கும்,
பாசபந்தம் அற்ற சமுதாயம் காண்போம்.
உணவு, தொழில், ஆடைகள் - இவைகள் உலக மக்கள் யாவருக்கும்
சரியாகத் தேவைக்குத் தக்கபடி கிடைக்கும்படியான
திட்டத்தின்கீழ், உலகப் பொது நிர்வாகப் பொறுப்பினை
வைத்துக் கொள்ள வேண்டும் பேதமற்று, சம அந்தஸ்துடன்'
குழந்தைகள் வளர நல்ல எதிர்காலப் பிரஜைகளாக எல்லாக் குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பையும் உலகப் பொது ஆட்சியே ஏற்றுக்கொள்ள வேண்டும்
1) ஆண் பெண் வாழ்க்கை ஒப்பந்தம் என்னும் முறைப்படி
திருமணம் புரிந்து கொண்டு தம்பதிகளாக வாழவும்,
2) மனிதர்கள், தங்கள் உடல் சக்தி அறிவின் ஆற்றல் என்ற இவைகளைச் சமுதாய நன்மைக்காகவே பயன்படுத்தவும்,
3) மனிதனுக்கு அதிக துன்பத்தைக் கொடுக்கக்கூடிய நோய்கள் வறுமை என்ற இவை இரண்டையும் ஒழிக்கவும்,
4) பணம் என்ற செயற்கை நச்சை முறிக்கவும்,
5) என்றைக்கும், எங்கும் பாசம், பந்தம் என்னும் அறிவின் மயக்க
மற்று மனிதர்கள் வாழவும் தகுந்தீ ஒரு புது சமுதாயத்தை உருவாக்குவோம்.
உலகில் பிறந்துவிட்ட மனிதன் வாழ்வதற்கு உணவு. ஆடைகள்
வீடு என்பன அவசியமான தேவையாகும். இவைகளைப் பொது கூட்டுறவு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால்தான், எல்லோருக்கும் இவைகள் சமமாகக் கிடைக்கும். இவைகளை உற்பத்தி செய்யப் பலவிதமான தொழிற்சாலைகள் தேவை. விநியோகப் பொறுப்பைக் கூட்டுறவுக் கழகம் ஏற்பதால், உற்பத்திப் பொறுப்பையும்
அதுவே மேற்கொள்ள வேண்டும்
சுலபமாகப் பண்டங்களை மாற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திய
பணம், இன்று உலக மக்கள் லாழ்வில் எல்லாத் துறைகளிலும்
இன்னலே தருகிறது. ஆதலால் அதை நச்சுக்கு ஒப்பாகக் கருதி, உலக மக்களுடைய நினைவிலிருந்து ஒழித்துவிட வேண்டுமென்று இங்குக்
குறிப்பிடப்படுகிறது.
உலக சமாதான பாடல் 27..தொடரும்.......
No comments:
Post a Comment