Monday, 22 June 2020

உலக சமாதான பாடல் 28 'தேவையற்ற சடங்கு முறைகளும் அவற்றின் விளைவுகளும்

*உலக சமாதான பாடல் 28*

*தேவையற்ற சடங்கு முறைகளும்
அவற்றின் விளைவுகளும்*

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்றென்றோ,

சர்வ தேசங்களிலும் மனிதர் கொண்ட

எந்தெந்த செயல்களோ, காரணமே இன்றி

இன்று பல சடங்குககளாய் வழக்கமாகி,

வந்துள்ளவைகளிலே பலநம் வாழ்வின்

வளமிழக்கும் நச்சாகி இருக்கக்கண்டோம்,

சிந்தித்தோர் முறை வகுப்போம், தேவையற்ற

தொல்லைதரும் சடங்குகளை ஒழித்துக்கட்ட


சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் எந்த எந்த காலத்திலோ எல்லா தேசங்களிலும் மனிதர்கள் கையாண்ட செயல்கள், பழக்கவழக்கங்கள், காரணமில்லாமல் மற்றவர்களால், தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வந்து, பலவிதமான சடங்கு முறைகளாய் அமைந்துவிட்டன.

இத்தகைய அவசியமற்ற- அர்த்தமற்ற சடங்கு முறைகளில் பல, நமது வாழ்வின் வளத்தையே குறைக்கும் ,அழிக்கும் நச்சாக பரவி விட்டன.

மிக விரிவாக ஆராய்ந்து,இத்தகைய கேடு தரும் வழக்க பழக்கங்களை, அடியோடு ஒழிக்கத் தகுந்த ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.

🙏 வாழ்க வளமுடன்🙏

உலக சமாதான பாடல் 29 தொடரும்....

No comments: