Thursday, 5 October 2023

எளியமுறை உடற்பயிற்சி - சின் முத்திரையின் பயன்கள்

எளியமுறை உடற்பயிற்சி


தசைநார் மூச்சுப் பயிற்சி : நிலை - 1


தசைநார் மூச்சுப் பயிற்சியில் முதல் இரு நிலைகளில் வரும் முத்திரைகளின் பலன்கள் பார்ப்போம்.



சின் முத்திரை ஞான முத்திரை

கட்டை விரலின் நுனியின் மேல் ஆள்காட்டி விரலை வைப்பது சின் முத்திரை எனப்படும் . முனிவர்கள் ஞானிகள் அனைவரும் கைகளில் வைத்திருப்பது இந்த ”சின் முத்திரை” தான் . இதை ஞான முத்திரை என்றும் , தியானம் செய்யும்போது உபயோகிப்பதால் தியான முத்திரை என்றும் அறிவை தூன்டுவதால் அறிவுமுத்திரை என்றும் கூறுவர் .

கட்டை விரல் நெருப்பைக் குறிக்கும் . ஆள்காட்டி விரல் வாயுவைக் குறிக்கும் . இந்த முத்திரையில் காற்றின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் இருப்பதால் சக்தி குறைவான சிறிய அளவிலான நெருப்பு அணைந்து விடுகிறது  எனவே ஒருநிலைப்பட்ட மனம் அமைகிறது .

சின்முத்திரையின் பயன்கள் :-    

  • நினைவாற்றலை அதிகரித்து மூளையை கூர்மையாக்குகிறது . மாணவர்களுக்குச் சிறந்தது .

  • காற்றின் சக்தி அதிகரிப்பதால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாகிறது . சோம்பேறித்தனமாக மந்தமாக இருக்கும் நிலையில் இம்முத்திரையை வைத்துக்கொண்டால் உடல் சுறுசுறுப்படைகிறது .

  • மனம் சோர்வடையும் போது இம்முத்திரையை வைத்தால் மனம் சுறுசுறுப்படைகிறது . புத்துணர்ச்சி கிடைக்கிறது . மனம் ஒருமைப்பாடு அடைகிறது . புதுப்புது சிந்தனைகள் தோன்றுகின்றன.

  • அளவுக்கதிகமான தூக்கத்தை குறைக்க உதவுகிறது . தூக்கமின்மை போக்கவும் உதவுகிறது .

  • வேலை செய்ய உற்சாகம் பிறக்கிறது . உடல் மனம் இரண்டின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

  • மனம் சம்பந்தப்பட்ட இஸ்டீரியா மனச்சோர்வு மனம் சிதைவு அதிகமான கோபம் இவற்றை சரி செய்ய உதவுகிறது . 

  • நரம்புகளை உற்சாகப்படுத்துகிறது . நரம்பு சம்பந்தமான குறைகளைத் தீர்க்க உதவுகிறது . நரம்புத் தளர்ச்சி செரிபரல் பால்சி ( CEREBERAL PALSY ) , MULTIPLE SCLEROSIS  போன்ற நரம்பு மண்டலக் குறைபாடுகளைத் தீர்க்க உதவுகிறது 

  • பிட்யூட்டரி தைராய்டு கணையம் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு சுரக்க உதவுகிறது 

  • விழித்திரையில் ஏற்படும் நோய்களைச் சரி செய்ய உதவுகிறது .

  • பக்கவாதம் முகவாதம் போன்ற நோய்களுக்கும் தசை குறைபாடுகளுக்கும் சின்முத்திரை நல்லது . தசைகளுக்கு பலமளிக்கிறது .

  • இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது . குரல் பேச்சு இவை குறைவதுபோல் தோன்றினால் இம் முத்திரையை உபயோகிக்கலாம் . 

  • மெதுவான இதயத் துடிப்பை சீராக்குகிறது .

  • நுரையீரலில் ஏற்படும் அதிகமான சளியை குறைக்க உதவுகிறது.

  • மூட்டுகளை சுலபமாக அசைய வைக்கிறது . இம்முத்திரை மூட்டு வலியை குறைக்கிறது .

  • வாதம் அல்லது வாயுவை அதிகரிக்கிறது . உடலில் அதிகமான வாதம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது .

  • நீண்ட காலம் இம் முத்திரையை செய்யும் போது நமது மனக்கண் திறக்கப்படுகிறது .அதாவது மூண்றாவது கண் எனும் நெற்றிக்கண் திறக்கிறது .

  • இம் முத்திரையை நீண்ட நாட்கள் செய்யும் போது புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் தன்னால் விலகி விடும் .

No comments: