Thursday, 13 June 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(24/05/2019)*

*வாழ்க வளமுடன்* வாழ்த்து அனைத்தையும் அனைவரையும் கூறிப் பார்த்துக் கொண்டே இருக்க இருக்க அதனின் Magic புரிய வரும். நம்முடன் அவை அனைத்துடனும் நல்லிணக்கம் காண முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.

இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். யாராக இருந்தாலும், எந்த பொருளாக இருந்தாலும், அதை நினைக்கும் போது அன்பு பூரித்து அதனுடன் தொடர்பு கொள்ளும் போது அது ஒரு பொருளோ, நபரோ அல்லது உயிரினமோ... நமக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கும்.

நாம் பிறவற்றை நேசிக்கும் போதும்,  அன்பு பாராட்டும் போதும்,  அது நம்மிடம் தானாக அதன் காந்தத் தன்மையால் நம்மை ஈர்ப்பதை உணர முடியும். உதாரணத்திற்கு நமது அலைபேசி,     ஆடை,  உணவுப்பொருள்,  நமது கண்களைக் கவரும்.. ஈர்க்கும். ஆனால் நமது பயிற்சி மூலம் அளவுமுறை கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வும் கூடவே வந்து நம்மை அளவு மீறாமல் நிற்க வைக்கும். வாழ்க வளமுடன் பலன் அளப்பரியது.

இது தான் நமது ஆசான் அவர்கள் கூறிய *உறவிலே கண்ட உண்மைநிலைத் தெளிவே துறவு*. ஆக.. நாம் நம் அகநோக்குப் பயிற்சி அளக்க அளிக்க.. அது நம்மை வெளி விஷயங்களில் எது  தேவை ? எது தேவையில்லை?  எந்த இடத்தில்  விழிப்புநிலையோடு இருக்க வேண்டும்?  எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்பதை இயல்பாக அறிவுறுத்தும்.

அன்புடன் ஜே.கே

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(03/06/2019)*

ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்  விஷயங்கள்.. யாவும் ஒருவரது புண்ணியப்பதிவுகளை அதிகரிப்பதற்கும், பாவப்பதிவுகளை குறைப்பதற்கும் தான்.  கருமையத் தூய்மை பெறும் போது விழிப்புணர்வுடன் கடக்க வேண்டும்.

தவம் தற்சோதனையில் நாம் இருக்கும் போது...  பொறுமையை.... மிகப் பொறுமையாக கையாள வேண்டும்.. ஏனென்றால் நம்மிடம் இருக்கும் பாவங்கள் குறையும் போது.. பிறரிடம் கோபம் கூட தலைகாட்டும்... தவத்தின் பலன் பொறுமையை கையாள்வதில் தான் உள்ளதே தவிர கோபப்பட்டு மேலும் பாவங்களை சேர்ப்பதற்கு தவம் செய்வதில்லை யாரும்.

தன்னை மென்மேலும், தனது குறைகளை, தவறுகளை, குற்றங்களை, கண்டுணர்ந்து திருத்தித் தூய்மைபடுத்தி, பிறருக்கு நன்மைகளை தொண்டாக செய்யும் போது அன்பு சுரக்க ஆரம்பிக்கும்.

எப்படி கிணற்றில் தூர் வாரிய பிறகு அதிகம் நீர் சுரக்குமோ.. அது போல் நம் மனதில் அழுக்குகளை அகற்றும் போது அதிகம் அன்பு ஊறும்... அன்பு  சுரக்கும்.  உள்ளுணர்வாக அதை உணர முடியும்.

மனக் கழிவுகள் நீங்கும் போது, மனம் தூய்மை பெறும்.  ஆகாம்ய தீவினையிலிருந்து காப்பாற்றப் படுவோம். நல்வினை ஓங்கும்.

அன்புடன் ஜே.கே

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(29/05/2019)*

எப்பொழுதும் நம் மனதின் எண்ண ஓட்டங்களை ஆராய்ச்சியில் வைத்திருத்தல் நலம். எது நல்லது, தூய்மையானது எது தேவையில்லாதது, தீங்கானது என்று பிரித்து பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டே இருந்தால் ..அல்லது என்பது விலகும்.

நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே சிறப்பு.. அது செலவழிப்பது ஆகாது.

நல்ல விஷயம், நல்ல தெய்வீக எண்ணம், நம் ஆற்றலை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. தேவையில்லாத சிந்தனை ஆற்றலை விரயப்படுத்தும்.

தொடர்ந்து மனதில் நற்சிந்தனைகளை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் குறைகள், வம்பு, கிண்டல் கேலி, பிறரைப் பற்றி என்னவென்று தெரியாமலே கற்பனையாக வதந்திகள்  பேசுவது, பிறரை வருந்தச் செய்வதும், தன்னை வருந்தச் செய்யும் வாய்ப்பையும்... தவிர்த்து, பிறருக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல் இருந்தாலே நலம் உண்டாகும்.

ஏனென்றால் இன்றைய உலக செயல்களுக்கு நாம் விதைக்கும் எண்ணங்களே காரணம் என்பதை புரிந்து கொண்டால்... வீணாக நேரத்தை விரயம் செய்வதை விட்டு ஆற்றலை சேமிக்கும் நல் வழியில் ஈடுபட்டு தொண்டாற்றி இன்பம் காண்பர். தொண்டு செய்வதே நிறைவை அளிக்கும். மனம் அமைதி பெறும்.

அன்புடன் ஜே.கே

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(11/06/2019)*

குடும்பத்தில் உறவுகளிடையே பிணக்கு தவிர்க்க முற்படும்போது.. தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் போது,  தற்சோதனையில் இருப்பவர்களுக்கு சவால்கள் வருவது இயல்பு தான். தனது கருமையத் தூய்மை நிகழும் போது இவ்வாறான சில நிகழ்வுகளை தவிர்க்கவோ அல்லது விலகிப் போகவும் முடியாது தான். அதற்கு சூழ்நிலையை ஏற்கும் திறன் வேண்டும்.

ஒன்று செய்யலாம். எந்த இருவரிடையே பிணக்கோ, அவர்களை மனதால் நினைத்து வாழ்த்தும் போது அதி வேகமாக... அது செயல்பட ஆரம்பிக்கும். இருவரிடையே சமாதானப்பேச்சு வர ஆரம்பிப்பதை உணர முடியும்.

தன்னிடம் கோபமோ அல்லது கவலையோ வருத்தமோ ஏற்படும் போது அந்த சீவகாந்த இழப்பை சமன்படுத்த மூலாதாரத்தில் மனதை வைக்கும் போது தனக்குள் அமைதி நிலவுவதை உணர முடியும். மூச்சை கவனிக்கும் போதும் அமைதி நிலவும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கும் போது பொறுமைக்கு சவால்கள் வரும். அங்கே தான் நம் பயிற்சி பழக்கத்தில் இருக்கும் போது   சாந்தி தவம் கைகொடுத்து உதவுகிறது. பொறுமையும் சாத்தியமாகிறது. பொறுமை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் விட்டுக்கொடுத்தல் பழக வேண்டும். அன்பை வளர்க்க வேண்டும்.

அன்புடன் ஜே.கே