*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(03/06/2019)*
ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் விஷயங்கள்.. யாவும் ஒருவரது புண்ணியப்பதிவுகளை அதிகரிப்பதற்கும், பாவப்பதிவுகளை குறைப்பதற்கும் தான். கருமையத் தூய்மை பெறும் போது விழிப்புணர்வுடன் கடக்க வேண்டும்.
தவம் தற்சோதனையில் நாம் இருக்கும் போது... பொறுமையை.... மிகப் பொறுமையாக கையாள வேண்டும்.. ஏனென்றால் நம்மிடம் இருக்கும் பாவங்கள் குறையும் போது.. பிறரிடம் கோபம் கூட தலைகாட்டும்... தவத்தின் பலன் பொறுமையை கையாள்வதில் தான் உள்ளதே தவிர கோபப்பட்டு மேலும் பாவங்களை சேர்ப்பதற்கு தவம் செய்வதில்லை யாரும்.
தன்னை மென்மேலும், தனது குறைகளை, தவறுகளை, குற்றங்களை, கண்டுணர்ந்து திருத்தித் தூய்மைபடுத்தி, பிறருக்கு நன்மைகளை தொண்டாக செய்யும் போது அன்பு சுரக்க ஆரம்பிக்கும்.
எப்படி கிணற்றில் தூர் வாரிய பிறகு அதிகம் நீர் சுரக்குமோ.. அது போல் நம் மனதில் அழுக்குகளை அகற்றும் போது அதிகம் அன்பு ஊறும்... அன்பு சுரக்கும். உள்ளுணர்வாக அதை உணர முடியும்.
மனக் கழிவுகள் நீங்கும் போது, மனம் தூய்மை பெறும். ஆகாம்ய தீவினையிலிருந்து காப்பாற்றப் படுவோம். நல்வினை ஓங்கும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment