*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(24/05/2019)*
*வாழ்க வளமுடன்* வாழ்த்து அனைத்தையும் அனைவரையும் கூறிப் பார்த்துக் கொண்டே இருக்க இருக்க அதனின் Magic புரிய வரும். நம்முடன் அவை அனைத்துடனும் நல்லிணக்கம் காண முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.
இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். யாராக இருந்தாலும், எந்த பொருளாக இருந்தாலும், அதை நினைக்கும் போது அன்பு பூரித்து அதனுடன் தொடர்பு கொள்ளும் போது அது ஒரு பொருளோ, நபரோ அல்லது உயிரினமோ... நமக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கும்.
நாம் பிறவற்றை நேசிக்கும் போதும், அன்பு பாராட்டும் போதும், அது நம்மிடம் தானாக அதன் காந்தத் தன்மையால் நம்மை ஈர்ப்பதை உணர முடியும். உதாரணத்திற்கு நமது அலைபேசி, ஆடை, உணவுப்பொருள், நமது கண்களைக் கவரும்.. ஈர்க்கும். ஆனால் நமது பயிற்சி மூலம் அளவுமுறை கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வும் கூடவே வந்து நம்மை அளவு மீறாமல் நிற்க வைக்கும். வாழ்க வளமுடன் பலன் அளப்பரியது.
இது தான் நமது ஆசான் அவர்கள் கூறிய *உறவிலே கண்ட உண்மைநிலைத் தெளிவே துறவு*. ஆக.. நாம் நம் அகநோக்குப் பயிற்சி அளக்க அளிக்க.. அது நம்மை வெளி விஷயங்களில் எது தேவை ? எது தேவையில்லை? எந்த இடத்தில் விழிப்புநிலையோடு இருக்க வேண்டும்? எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்பதை இயல்பாக அறிவுறுத்தும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment