*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(29/05/2019)*
எப்பொழுதும் நம் மனதின் எண்ண ஓட்டங்களை ஆராய்ச்சியில் வைத்திருத்தல் நலம். எது நல்லது, தூய்மையானது எது தேவையில்லாதது, தீங்கானது என்று பிரித்து பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டே இருந்தால் ..அல்லது என்பது விலகும்.
நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே சிறப்பு.. அது செலவழிப்பது ஆகாது.
நல்ல விஷயம், நல்ல தெய்வீக எண்ணம், நம் ஆற்றலை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. தேவையில்லாத சிந்தனை ஆற்றலை விரயப்படுத்தும்.
தொடர்ந்து மனதில் நற்சிந்தனைகளை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் குறைகள், வம்பு, கிண்டல் கேலி, பிறரைப் பற்றி என்னவென்று தெரியாமலே கற்பனையாக வதந்திகள் பேசுவது, பிறரை வருந்தச் செய்வதும், தன்னை வருந்தச் செய்யும் வாய்ப்பையும்... தவிர்த்து, பிறருக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல் இருந்தாலே நலம் உண்டாகும்.
ஏனென்றால் இன்றைய உலக செயல்களுக்கு நாம் விதைக்கும் எண்ணங்களே காரணம் என்பதை புரிந்து கொண்டால்... வீணாக நேரத்தை விரயம் செய்வதை விட்டு ஆற்றலை சேமிக்கும் நல் வழியில் ஈடுபட்டு தொண்டாற்றி இன்பம் காண்பர். தொண்டு செய்வதே நிறைவை அளிக்கும். மனம் அமைதி பெறும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment