*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(11/06/2019)*
குடும்பத்தில் உறவுகளிடையே பிணக்கு தவிர்க்க முற்படும்போது.. தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் போது, தற்சோதனையில் இருப்பவர்களுக்கு சவால்கள் வருவது இயல்பு தான். தனது கருமையத் தூய்மை நிகழும் போது இவ்வாறான சில நிகழ்வுகளை தவிர்க்கவோ அல்லது விலகிப் போகவும் முடியாது தான். அதற்கு சூழ்நிலையை ஏற்கும் திறன் வேண்டும்.
ஒன்று செய்யலாம். எந்த இருவரிடையே பிணக்கோ, அவர்களை மனதால் நினைத்து வாழ்த்தும் போது அதி வேகமாக... அது செயல்பட ஆரம்பிக்கும். இருவரிடையே சமாதானப்பேச்சு வர ஆரம்பிப்பதை உணர முடியும்.
தன்னிடம் கோபமோ அல்லது கவலையோ வருத்தமோ ஏற்படும் போது அந்த சீவகாந்த இழப்பை சமன்படுத்த மூலாதாரத்தில் மனதை வைக்கும் போது தனக்குள் அமைதி நிலவுவதை உணர முடியும். மூச்சை கவனிக்கும் போதும் அமைதி நிலவும்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கும் போது பொறுமைக்கு சவால்கள் வரும். அங்கே தான் நம் பயிற்சி பழக்கத்தில் இருக்கும் போது சாந்தி தவம் கைகொடுத்து உதவுகிறது. பொறுமையும் சாத்தியமாகிறது. பொறுமை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் விட்டுக்கொடுத்தல் பழக வேண்டும். அன்பை வளர்க்க வேண்டும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment