Sunday, 30 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வாயு முத்திரை*

நாம் உணவின்றி சில நாள்கள் வாழ முடியும். தண்ணீர் இல்லாமல்
ஒரிரு நாள்கள் வாழலாம். ஆனால், காற்று இல்லாமல் வாழ முடியாது.
ஏன், சில நிமிடங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாது. அந்தவகையில்,
ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு நாம் சுவாசிக்க மிகவும்
அவசியமாகிறது.
வாயு முத்திரையை நாம் தொடர்ச்சியாகச் செய்துவந்தால், நம் உடலில்
உள்ள காற்று சமநிலையில் இருக்கும். இந்த முத்திரையை
வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது அதிக பலனைத் தரும்.

*செய்முறை*

சுட்டு விரல் எனப்படும் ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மேல்
பெரு விரலை வைத்து அழுத்தும்போது, வாயு முத்திரை கிடைக்கும்.
மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
நேர அளவு
இந்த முத்திரையை முதலில் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பிறகு, படிப்படியாக நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதிகபபு மாக
45 நிமிடங்கள் செய்யலாம்.
வாயு முத்திரை
ைெரயைச் செய்யும்போது,ம நம் உடலில் உள்ள சுழுமுளை
நாடியில் பிராண சக்தி பாயத் தொடங்குகிறது. இதனால் மன அமைதி,
சுறுசுறுப்பு உண்டாகும். காற்று சமநிலையில் இருக்கும். எல்லாவித
நோய்களும் குணமாகும்.

*பலன்கள்*

1. பக்க வாதம் குணமாகும்.

2. உடல் வலிகள் நீங்கும்.

3. முதுகுத் தண்டுவட வலிகள் நீங்கும்.

4. மூட்டு வலிகள் நீங்கும்.

5. வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லை நீங்கும்.

6, முகத்தில் உண்டாகும் வாத நோய்கள் குணமாகும்.

7. படபடப்பு நீங்கும்.

8. அஜீரணம், வாயுத் தொல்லை, பசியின்மை அகலும்.

9. மன இருக்கம் நீங்கும்.

10. தெம்பு உண்டாகும்.

11. தொண்டையில் ஏற்படும் அடைப்புகள் நீங்கும்.

*இந்த முத்திரையை எல்லாக் காலங்களிலு செய்ய வேண்டியதில்லை. நோய்கள் குணமானதும் நிறுத்திவிடலாம்.*

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Friday, 28 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சூரிய முத்திரை*

முதலாவதாக வருவது சூரிய முத்திரை.
கிரகங்களில் முதன்மையாக வைத்துப்
போற்றப்படுவது நவக்கிரகங்கள். நவக்
கிரகங்களில் முதலாவதாக வருவது
சூரியன்.
வானில் பல அண்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு அண்டத்தின் நடுவிலும்
சூரியன் ஒருவன்தான் நடுநிலையாக
இருந்து கொண்டு ஒளி வீசுகிறான்.
ஆங்கிலத்தில் சோலார் சிஸ்டம்: (Solar System) என்றும் ஜோதிட
சாஸ்திரத்தில் சூரிய சித்தாந்தம் என்றும் குறிப்பிடப்படுகிறது,
நம் தமிழ்ப் பாரம்பரியப்படி, நம் முன்னோர்களை அடியோட்டி,
சூரியனை தந்தையாகவும், பூமியைத் தாயாகவும் குறிப்பிட்டு
வழிபட்டு வருகிறோம். சூரியனை மையமாக வைத்தே எல்லாக்
கோள்களும் இயங்குகின்றன. இந்த அடிப்படையில், மோதிர விரலை
பஞ்ச பூதங்களில் பூமியாகவும், கட்டை விரலை சூரியன், அதாவது
நெருப்பாகவும் கொள்ள வேண்டும்.
நமது உடலுக்கு வெப்பம் தேவை. அந்த வெப்பத்தை இந்த சூரிய
முத்திரை அளிக்கிறது.

*செய்முறை*

முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். முடியாதவர்கள்
சாதாரணமாக அமர்ந்து செய்யலாம். முதலில், மோதிர விரலைப்
பெருவிரலின் (கட்டை விரலின்) கீழ்ப் பகுதியில் வைத்து,
பெருவிரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும்
நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் இந்த
முத்திரையைச் செய்யலாம். இயலாதவர்கள், முதலில் வலது
கையிலும், பிறகு இடது கையிலும் செய்யலாம். இந்த முத்திரையை
10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை செய்யலாம் அல்லது முதலில்
ஐந்து நிமிடங்களில் ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக நேரத்தை
அதிகரித்துக்கொண்டே போகலாம்.

*பலன்கள்*

1. தொப்பை குறையும்.

2. கொழுப்பு குறையும்.

3. உடலின் வெப்பம் அதிகரிக்கும்.

4. மன அமைதி ஏற்படும்.

5. உடல் பருமன் குறையும்.

6. தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும்.

7. ஜீரணக் கோளாறுகள் அகலும்.

8. உயிரின் சக்தியைப் பெருக்கும்.

9. ரத்தக் குழாய் அடைப்பு நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

10. நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

11. கண் பார்வைத் திறன் அதகரிக்கும்.

12. களைப்பு நீங்கும்.

*_உடல்நலம் இல்லாமல் இருக்கும்போதோ, தூக்கமின்றி வேலை செய்து களைப்பாக இருக்கும்போதோ இந்த முத்திரையைச் செய்யக் கூடாது_*

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Thursday, 27 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சிமுத்திரை*

சி முத்திரை மனச் சோர்வை நீக்கவல்ல ஒரு சிறந்த முத்திரையாகும்.
இந்த முத்திரைப் பயிற்சி, மூன்றுவித ரகசியங்களை உள்ளடக்கியது.

1 இந்த முத்திரையை முறையாகப் பயிற்சி செய்தால் கவலை, பயம்,
மகிழ்ச்சியின்மை ஆகியவை அகலும்.

2 நமது கெட்ட நேரம், அதிர்ஷ்டமின்மையை மாற்றக்கூடியது.

3 இந்த முத்திரை உடலுக்கு காந்த சக்தியை அளிப்பதுடன், நமது
உள்ளுணர்வைத் தூண்டி, மனச் சோர்வை நீக்கி சக்தியை
அளிக்கிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் ஏற்படும் குறைபாடுகளை இந்த
முத்திரை நீக்குகிறது. 

இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால்
அற்புதங்கள் நிகழ்வது உறுதி.

*செய்முறை*

நமது இரண்டு கைகளையும், இரண்டு தொடைகளின் மீது வைக்க
வேண்டும். கட்டை விரலை, சுண்டு விரலின் அடிப் பகுதியில் வைக்க
வேண்டும். கட்டை விரலைச் சுற்றி மற்ற நான்கு விரல்களால் மூட
வேண்டும். இப்போது மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க
வேண்டும். இப்போது 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஏழு முறை
சொல்ல வேண்டும். அந்த ஒலி, வலதுண காதில் ஒலிக்கும் போது தலைப்
பகுதியை அடையும். பத்மாசனத்தில் அமர்ந்தபடி இதனைச் செய்யலாம். இப்போது
உள்ளிழுத்த காற்றை மெல்ல வெளியே விடும்போது, கைகளை விரிக்க
வேண்டும். நம்முடைய கவலை, பயம், மகிழ்ச்சியின்மை ஆகியவை
நீங்கிவிட்டதாக நினைக்க வேண்டும். மீண்டும் இந்த முத்திரையை
குறைந்த அளவு ஏழு முறையும், அதிக அளவாக 48 முறையும்
செய்யலாம்.

*பலன்கள்*

1, கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

2. பயம் நீங்கும்.

3. துரதிருஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.

4. மனச் சோர்வு நீங்கும்.

5. உடலின் ஆதாரப் பொருளான நீர்ச்சத்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

5. உடலுக்கு காந்த சக்தியை அளிக்கும்.

7. அதிசய நிகழ்வுகள் ஏற்படும்

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Tuesday, 25 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*கருட முத்திரை*

கருடன், மகாவிஷ்ணுவின் வாகனமாகும். கருடன், பறவைகளின்
அரசன். கருட முத்திரை, உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்களைக்
குணப்படுத்துகிறது. இந்த முத்திரை, உடலில் எல்லாப் பாகங்களுக்
கும் ரத்தம் சீராக தடையின்றிச் செல்ல உதவுகிறது.
இது எளிமையாகச் செய்யக்கூடிய முத்திரை, ஆனால், அதிக பலனைத்
தரக்கூடியது.

*செய்முறை*

இரண்டு கை கட்டை விரல்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
உள்ளங்கைகள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். மற்ற நான்கு
விரல்களும் நேராகவும், விரிந்தும் இருக்க வேண்டும். இடது கையின்
மேல் வலது கை இருக்க வேண்டும். இந்தத் தோற்றம், கருடன்
சிறகடித்துப் பறப்பதைப்போல் காணப்படுவதால்தான், இதற்கு கருட
முத்திரை என்று பெயர்.

உடலில் நான்கு இடங்களில் இந்த முத்திரையைப் படும்படி செய்ய
வேண்டும்.

 முதலாவதாக, கருட முத்திரையை அடிவயிற்றுப்
பகுதியில் வைக்க வேண்டும். இப்போது நமது சுவாசத்தை நன்கு
இழுத்து விட வேண்டும். இவ்வாறு பத்து முறை சுவாசிக்க வேண்டும்.

இரண்டாவதாக, கருட முத்திரையை நாபிப் (தொப்புள்) பகுதியில்
வைக்க வேண்டும். முன்பு போல் பத்து முறை சுவாசத்தை நன்கு
இழுத்து விட வேண்டும்.

மூன்றாவதாக, கைகளை மேல் வயிற்றில் நாபிக்கும் விலா எலும்புப்
பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, பத்து முறை சுவாசத்தை
இழுத்து விடன வேண்டும்.

நான்காவதாக, நெஞ்சுப் பகுதியில் வைத்து, பத்து முறை சுவாசத்தை
இழுத்து விட வேண்டும்.
இவ்வாறு உடலில் நான்கு முறை நான்கு வெவ்வேறு இடங்களில்
வைத்து சுவாசத்தை இழுத்து விட வேண்டும். இதற்கு சுமார் 5 அல்லது
6 நிமிடங்கள் ஆகும். தினமும் நான்கு முறை செய்யலாம். வெறும்
வயிற்றிலோ அல்லது உணவு உட்கொண்ட பிறகு சுமார் மூன்று மணி
நேரம் கழித்தோ செய்ய வேண்டும்.

*பலன்கள்*

1. ரத்த ஓட்டம் சீரடைகிறது.

2. நன்கு மூச்சை இழுத்துவிடுவதால் உடலுக்குப் பிராண வாயு
கிடைத்து, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.

4. அடிவயிற்றில் கருட முத்திரையை வைப்பதால், சுவாதிஸ்டான
சக்கரம் தூண்டப்படுகிறது.

5. தொப்புள் பகுதியில்ம வைப்பதால், நாபிச் சக்கரம் தூண்டப்படு
கிறது.

6, மேல் வயிற்றில் வைப்பதால், மணிபூரகச் சக்கரம் தூண்டப்படு
கிறது.

7, மார்புப் பகுதியில் வைப்பதால், அந அநாஹதச் சக்கரம்
தூண்டப்படுகிறது.

8. உடலின் உட்புறத்தில் ஏற்படும் நோய்கள் குணமாகின்றன.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Sunday, 23 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*மகா சிரசு முத்திரை*
'எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. 'சிரசு'
என்றால் தலை. உடலில் உள்ள அத்தனை அவயங்களும் தலையுடன்
தொடர்பு கொண்டுள்ளன.
'மகா' என்றால் எல்லாவற்றிலும் சிறப்புடைய, பெரிய என்றும்
பொருள் கொள்ளலாம். அந்த வகையில், 'பெரிய தலைசிறந்த
முத்திரை' இது. உடலில் பல நோய்கள் வருவதைப் போல, தலைப்
பகுதி, முகம், கன்னங்கள், கழுத்து போன்ற முக்கிய அவயங்களிலும்
நோய்கள் உண்டாகலாம்.
உதாரணமாக தலைவலி, தலைபாரம், கண்ணில் வலி, தாடை, நெற்றி,
கழுத்து ஆகிய பகுதிகளில் வலி ஏற்படலாம். இந்த வலிகளை நீக்கும்
நிவாரணியாக மகா சிரசு முத்திரை 
உள்ளது.
நிறைய பேருக்கு, தலைவலி என்பதே ஒரு தீராத வலியாக உள்ளது.
இந்த முத்திரையைச் செய்தால் தலைவலி உடனே நீங்கிவிடும்.
டென்சன் குறையும். சளியினால் ஏற்படும் ஜலதோஷம் நீங்கும். இந்த
முத்திரையைப் பயிற்சியின்போது விரல்களால் முகத்தை வருடினால்,
அந்த நேரம் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

*செய்முறை*

கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களின்
நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொட்டபடி இருக்கும்படி
வைக்க வேண்டும். சிறிதளவு அழுத்தம் கொடுத்தால் போதும். மோதிர
விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்க
வேண்டும். சுண்டு விரல் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
இரண்டு கைகளிலும் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த முத்திரையைப் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்த
நிலையில் இதைச் செய்ய வேண்டும்.
நேர அளவு
இந்த முத்திரையை, தினமும் மூன்று வேளைகளிலும், ஆறு
நிமிடங்கள் வீதம் செய்ய வேண்டும். சுவாசம் சீராக இருக்க
வேண்டும்.

*பலன்கள்*

1. டென்ஷன் குறையும்.

2. சுவாசத்தை வெளிவிடும் போது, தலையிலிருந்து கழுத்து,
பின்புறம், புஜங்கள், கால்கள் ஆகியவற்றுக்கு சக்தி அலைகள்
செல்கின்றன. பிறகு, கை, கால்கள் வழியாக இந்த சக்தி அலைகள்
வெளியேறுகின்றன.

3. தலைவலி குணமாகும்.

4. தலைப் பகுதியில் சக்தி ஓட்டம் சீராகும்.

5. கண்ணைச் சுற்றியோ அல்லது கண்ணுக்கு பின்புறமோ ஏற்படும்
வலிகள் குணமாகும்.

6. சளித் தொல்லைகள் நீங்கும்.

7. சுவாசம் சுத்தமாகும்.

8. கன்னம், தாடை, நெற்றி ஆகிய பகுதிகளில் இறுகிய தசைகள்
தளர்ச்சி அடையும்.

9. கழுத்து வலி நீங்கும்.

10. மன அமைதியும் சுறுசுறுப்பும் உண்டாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Saturday, 22 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பிரம்மர முத்திரை*

பிரம்மர என்பது ஒரு வடமொழிச் சொல். பிரம்மன் என்பவர்
படைப்புக் கடவுள். அவரது பெயரிலேயே இந்த முத்திரை அமைந்
துள்ளது. பிரம்மர என்றால் ஆண் தேனீ என்று பெயர். இந்திய நடனக்
கலையில், ஒரு அபிநயம் இந்த முத்திரையாக அமைந்துள்ளது. இந்த
முத்திரை, தேனி, கிளி, மிருகங்களின் கொம்பு, பாடும் பறவை ஆகிய
வற்றின் தோற்றங்களை ஒத்து அமைந்துள்ளது. முத்திரையைப் பல்
வேறு கோணங்களில் பார்த்தால், ஒவ்வொருவிதமாகக் காட்சி தரும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை நோயைக் குணப்படுத்தும் வரப்
பிரசாதமாக இந்த முத்திரை அமைந்துள்ளது. நோய்களால் பாதிக்கப்
பட்டு பலஹீனமாக உள்ள குடல் பகுதியைப் பலப்படுத்துகிறது.
மருந்துகளால், குடல் பகுதியில் அசுத்தங்களும் மூக்கில் சளியும்
தேங்குகிறது. இதனால், சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்தக்
கோளாறுகளையெல்லாம் பிரம்மர முத்திரை நீக்குகிறது.

*செய்முறை*

ஆள்காட்டி விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைக்க
வேண்டும். கட்டை விரலின் நுனிப் பகுதியை, நடு விரலின்
மேல்பகுதி ஓரத்தைத் தொடும்படி வைக்க வேண்டும். மோதிர
விரலும் சுண்டு விரலும் தளர்வாக நீட்டிய நிலையில் இருக்க
வேண்டும்.
கால அளவு
ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் வீதம் 4 அல்லது 5 முறை செய்ய
வேண்டும். அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, நடைப்பயிற்சியின்போதோ இந்த முத்திரையைச் செய்யலாம். இரண்டு
கைகளிலும் இந்த முத்திரையைச் செய்யலாம். சுவாசம் சீராக இருக்க
வேண்டும்.

*பலன்கள்*

1. குடலில் தேங்கியுள்ளன கழிவுகள் அகற்றப்படும்.

2. ஒவ்வாமைக்கான (அலர்ஜி) மூலக் காரணிகள் அகலும்.

3. புண், வீக்கம் ஆகியவை குணமாகும்.

4. சுரப்பிகள் நன்கு வேலை செய்யும்.

5. நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாசக் கோளாறுகள் நீங்கும்.

6. சளி அகலும்.

7. மலச்சிக்கல் தீரும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Friday, 21 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*கணேஷ் முத்திரை*

விநாயகரின் பெயரைக் கொண்ட முத்திரை இது. யானை முகம்
கொண்ட முழுமுதற் கடவுள் விநாயகர். எல்லாவிதத் தடைகளை,
இடையூறுகளை நீக்குபவர். இந்த கணேஷ் முத்திரை, இதயம் நன்கு
செயல்படத் தூண்டுகோலாக இருக்கிறது. இதயத் தசைகள், நுரையீரல்
குழாய்கள் ஆகியவற்றில் உள்ள குறைகளைன நீக்கி, அவற்றில் ஏற்படும்
பிரச்னைகளைத் தீர்க்கிறது.
இது, மற்றவர்களுடன் நல்ல முறையில் பழகவும், நம்பிக்கையை
ஏற்படுத்தவும் செய்கிறது. இது, நமது உடலில் உள்ள நான்காவது
சக்கரமான அநாகதச் சக்கரம் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.
இதனால், சுவாசம் சீரடைகிறது. ரத்தம் சுத்தமாகிறது. உடலில்
எல்லாப் பாகங்களுக்கும் ரத்தம் தடையின்றிச் செல்ல முடிகிறது.
நரம்பு மண்டலம் நன்கு இயங்குகிறது. ரத்த அழுத்தம் ஒரே சீராக
இருக்கும். ஹார்மோன்கள் நன்கு சுரக்கும்.
செய்முறை
வலது உள்ளங்கை, நமது மார்புப் பகுதியைப்ன பார்த்தவாறு இருக்க
வேண்டும். இதை, இடது கை விரல்களால் இறுகப் பற்றிக்கொள்ள
வேண்டும்.
இப்போது கைகளின் பிடிப்பைவிடாமல் சுவாசத்தை வெளியே விட
வேண்டும். இதனால் தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள
தசைகள் விரிவடையும். பிறகு, சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும்.
இப்போது டென்ஷன் குறைவதுபோல் இருக்கும். ஆறு முறை
இவ்வாறு சுவாசத்தைஅதாவது வெளிவிட்டு பின் உள்ளிழுக்க வேண்டும்.
பிறகு, கைகளை மாற்றி, அதாவது இடது உள்ளங்கையை மார்பைப்
பார்த்தவாறு வைத்து, வலது கையை இணைக்க வேண்டும். பின்னர்மேற்கண்டவாறு சுவாசத்தை வெளியிட்டுப் பின் உள்ளிழுக்க
வேண்டும்.
கால அளவு
தினமும் ஆறு முறை செய்ய வேண்டும். சுவாசத்தை
இழுத்துவிடுவதும் ஆறு முறை இருக்க வேண்டும்.

*பலன்கள்*

1. தடைகள் நீங்கும்.

2. ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகி, எல்லா பாகங்களுக்கும்
தடையின்றிச் செல்லும்.

3. இதயம் நன்கு செயல்படும். இதயத் தசைகள் நன்கு சுருங்கி
விரியும். ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.நி

4. நுரையீரல் குழாய்களும் தடையின்றிச் செயல்படும்.

5. நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Wednesday, 19 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*புஷன் முத்திரை*

சூரியனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு முத்திரையாக இந்த முத்திரை
உள்ளது. ஊட்டச்சத்தை அளிக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கும்
விதமாகவும் இந்த முத்திரை அமைந்துள்ளது. மேலும், ஜீரண சக்தியை
அளிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதுடன், நரம்பு
மண்டலத்தைத் தூண்டி நன்கு செயல்படவும் வைக்கிறது.
இது சுவாசத்தைச் சீராக்கி, அதன்மூலம் சாப்பிடும் உணவைச் செரிக்கச்
செய்து, பிராண வாயுவை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை
வெளியேறச் செய்கிறது. இதன்மூலம், நுரையிரல் சீராக இயங்கும்.
மேலும், மேல் வயிற்றுப் பகுதி, கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை
ஆகியவை தடையின்றி முறையாகச் செயல்படவும் வைத்து, உடலில்
இருந்து கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, குமட்டல், அதனால் ஏற்படும்
நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

*செய்முறை*

வலது கை
கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகியவற்றின் நுனிப்
பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்,
மோதிர விரலும் சுண்டு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
இடது கை
கட்டை விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிகள்
ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள் காட்டி
விரலும் சுண்டு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
நேர அளவு
தினமும் ஐந்து நிமிடங்கள் வீதம் நான்கு முறை செய்ய வேண்டும்.
நின்ற நிலையில் இதைச் செய்வது நல்லது. சுவாசம் ஒரே சீராக இருக்க
வேண்டும்.

*பலன்கள்*

1. நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

2. படபடப்பு இல்லாமல் அமைதியாக இருக்க முடியும்.

3. ஆதாரச் சக்கரங்கள் தூண்டப்பட்டு, உயிர்த் துடிப்பு
பாரமரிக்கப்படும்.

4. வேலைப் பளுவினால் ஏற்படும் கோபம், படபடப்பு ஆகியவை
சரியாகும்.

5. ஜீரண உறுப்புகளுக்கு சக்தி கிடைத்து, விஷத்தன்மையுள்ள கழிவுப்
பொருள்கள் வெளியேறும்.

6, சாப்பிட்ட பிறகு தீவிரமான குமட்டல், வாயுத் தொல்லை,
அதனால் ஏற்படும் நோய்கள் குணமாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Tuesday, 18 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சபான முத்திரை*

சபான முத்திரை, பெருங்குடல், நுரையீரல் மற்றும் தோல் ஆகிய
வற்றை நன்கு செயல்படத் தூண்டி அசுத்தங்களை வெளியேற்றுகிறது.
தூய்மைக்கு ஒரு அடையாளமாக இந்த முத்திரை இருக்கிறது.
எல்லாவிதமான மன இறுக்கத்தையும் நீக்க இந்த முத்திரை உதவுகிறது.
நாம், எதிர்விளைவு, நேர்விளைவு என அனைத்துவிதமான
சக்திகளையும் பெறுகிறோம். இருப்பினும், தனிமை மற்றும் ஏகாந்தம்
ஆகியவை மிக முக்கியம். ஏகாந்தமான நிலையில் இல்லாவிட்டால்,
அத்தியாவசிய சக்தி இல்லாத நிலை ஏற்பட்டு, உடல் பலஹீனமாகும்.
மேலும், நோய்களால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். இத்தகைய
பிரச்னைகளிலிருந்து விடுபட சபான முத்திரை உதவுகிறது. மேலும்,
அடக்கிவைக்கப்பட்டுள்ள எதிர் விளைவுச் சக்தி மற்றும் கிருமிகளால்
உண்டாகும் நச்சுப் பொருள்களையும் நீக்கும்.

*செய்முறை*

இரண்டு கைகளில் உள்ள ஆள்காட்டி விரல்களை மேல் நோக்கியபடி
இணைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் படத்தில் உள்ளபடி
இணைந்திருக்க வேண்டும். கட்டை விரல்கள் இரண்டும் பெருக்கல்
குறிபோல சாய்ந்த நிலையில் ஒன்றின் மீது ஒன்றாக இணைந்திருக்க
வேண்டும்.
அமர்ந்த நிலையில் இதைச் செய்தால், ஆள்காட்டி விரல்கள் தரையை
நோக்கியபடி இருக்க வேண்டும். படுத்தபடி செய்தால், ஆள்காட்டிவிரல்கள் கால்களை நோக்கியபடி இருக்க வேண்டும். இரண்டு
கைகளையும் தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுவாசத்தை பத்து
அல்லது பதினைந்து நிமிடங்கள் உள்ளிழுத்து வெளியே விட
வேண்டும். இந்த முத்திரையைச் செய்யும்போது மூன்று முறை நீண்ட
பெருமூச்சு விட வேண்டும். 15 நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்*

1. சுவாசம் சீராகும்.

2. எதிர் விளைவு சக்தி வெளியேறி, புதிய சக்தி கிடைக்கும்.

3. எல்லாவிதமான மன அழுத்தமும் நீக்கும்.

4 உடலில் இருந்து நச்சுப் பொருள்கள் வெளியேறும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Monday, 17 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சக்தி முத்திரை*

தூக்கமின்மை என்ற நோயைக் குணப்படுத்தும் முத்திரையாக இந்தச்
சக்தி முத்திரை விளங்குகிறது. தூக்கமின்மை பிரச்னைக்கு பல காரணங்
கள் உள்ளன. அந்தப் பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவித்து நமக்கு
நல்ல தூக்கத்தைத் தருகிறது. சக்தி முத்திரை, இறுக்கம் நீக்கி மன
அமைதி ஏற்படச் செய்கிறது. பெண்களுக்கு குடல் பகுதியில்
ஏற்படும் ஒருவித இழுப்பு நோய் மற்றும் அதனால் உண்டாகும்
பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
நமது உள்ளும் புறமும் அமைதியான ஒரு சூழ்நிலை ஏற்பட
வேண்டும். இந்த முத்திரையைச் செய்யும்போது தாற்காலிகமாக
எல்லாவிதக் கவலைகளையும் நாம் மறந்து, நல்ல பலனை உணர
முடியும்.
இந்தச் சக்தி முத்திரை, சுவாசத்தில் ஏற்படும் திடீர்க் கோளாறுகளை
நீக்கி சுவாசத்தை மேம்படுத்துகிறது, கூர்ந்து கவனித்தால் சுவாசம்
சீராக நடப்பதை உணரலாம். ஆனால், இந்த முத்திரையில் சில பக்க
விளைவுகள் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த முத்திரையை அதிக நேரம் செய்வதோ, அடிக்கடி செய்வதோ
கூடாது. அப்படிச் செய்தால், சோம்பேறித்தனம் உண்டாகும்.

*செய்முறை*

மோதிர விரலையும், சிறு விரலையும் சேர்த்து வைக்க வேண்டும்.
இரண்டுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்க வேண்டும். மற்ற
இரு விரல்களை, தளர்வாக வளைந்திருக்கும்படி வைக்க வேண்டும்.
கட்டை விரல், உள்ளங்கையைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
மூச்சை மெதுவாக இழுத்துப் பின் வெளியிட வேண்டும். கால அளவு
இந்த முத்திரையைத் தினமும், மூன்று முறை 12 முதல் 15 நிமிடங்கள்
வரை செய்ய வேண்டும். கூடுமானவரை, அமைதியான சூழ்நிலையில்
இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். அமர்ந்த நிலையிலோ
அல்லது நின்ற நிலையிலோ செய்யலாம். கண்களை மூடியபடி
செய்வது நல்லது.

*பலன்கள்*

1. தூக்கமின்மை பிரச்னை தீரும்.

2. உள்ளுறுப்புகளுக்குச் சக்தி கிடைத்து நன்றாக இயங்கும்.

3. சுவாச உறுப்புகள் சீராக இயங்கும்.

4. ஆண்களின் குடல் பகுதியில் ஏற்படும் இழுப்பு மற்றும்
பெண்களுக்கு வரும் மாதவிலக்குப் பிரச்னைகள் தீரும்.

5. மன இறுக்கம் குறையும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Sunday, 16 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*நாக முத்திரை*

நாக முத்திரை, ஆழ்ந்த நுண்ணறிவுக்கு அடையாளமாக உள்ளது. இந்து மத வழிபாடுகளில் நாக வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது.
அறிவு, புத்திக்கூர்மை, பலம் ஆகியவற்றின் அடையாளமாகவும்
தெய்வீகமான ஒரு முத்திரையாகவும் நாக முத்திரை அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தீர்க்கும்
முத்திரையாக இது பயன்படுகிறது. ஆன்மிகப் பாதையில் நாம்
செயல்படும்போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ள இந்த
முத்திரை உதவுகிறது. மேலும், மனத் தெளிவும் அதிகரிக்கிறது. மூலம்,
தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.
அக்குபஞ்சர் மருத்துவ முறையில் கூறப்படும் பஞ்சபூதங்களில்
நெருப்பு என்ற பூதத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள
வெப்பத்தின் அடையாளமாக நெருப்பு உள்ளது. இது இதயத்தோடு
தொடர்புகொண்டது. ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
நாக்கோடு தொடர்புடையது. பேசும் தன்மையைக் கொடுக்கிறது.
நாக முத்திரையைச் செய்வதன் மூலம், நாம் எந்தக் குறிக்கோளுக்காக
வாழ்கின்றோமோ அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
பஞ்சபூதத்தில் நெருப்பு என்ற பூதம், சக்தி வாய்ந்த மூலப்பொருளாக
உள்ளது. இந்த நெருப்பு என்ற பூதம், எரிகிறது, நகருகிறது, நம்மைச்
செயல்பட வைக்கிறது. இதன் அடிப்படையில்தான் நெருப்பின்
பார்வை சிலவற்றை அமைக்கிறது. நகருதல், சக்தியை வளர்த்தல்,
மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவற்றை உண்டாக்குகிறது. நமதுமேல் வயிற்றுப் பகுதியில் உண்டாகும் நெருப்பு நமக்கு சக்தியைக்
கொடுப்பதுடன், ஒளியையும் கொடுக்கிறது. இந்த ஒளி நமக்கு
நல்வழியைக் காட்டுகிறது.
மற்ற முத்திரைகளில் இருந்து இது வித்தியாசமானது. கட்டை விரல்
நெருப்புக்கு அடையாளமாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டு கட்டை
விரல்களும் சேரும்போது, நெருப்பு என்ற பூதம் நமது நோய்களையும்
பிரச்னைகளையும் தீர்க்கிறது.

*செய்முறை*

இரு கைகளையும், நெஞ்சுக்கு நேராக வைக்க வேண்டும். இரண்டு
கட்டை விரல்களும் சாய்வாக ஒன்றன் மீது ஒன்றாக இருக்க வேண்டும்.
கால அளவு
தினமும் மூன்று வேலை ஐந்து நிமிடங்கள் வீதம் செய்யலாம். நின்ற
நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

*பலன்கள்*

1. உடலில் சக்தி அதிகரிக்கும்.

2. மனஇறுக்கம் நீங்கி உற்சாகமாக இருக்கலாம்.

3. மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

4. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

6. வாழ்வில் ஒளியைக் கொடுத்து நல்வழியைக் காட்டுகிறது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Saturday, 15 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வஜ்ர முத்திரை*

இந்திரனின் கையில் உள்ள ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம் ஆகும்.
வைரத்துக்கும் வஜ்ரம் என்று பெயர். வஜ்ர முத்திரை, இடிக்கு
அடையாளமாகக் கூறப்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்
முறையாக நடக்கத் தூண்டுகோலாக இந்த முத்திரை உள்ளது.
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால், ரத்தம் அழுத்த
பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில், வயிற்றுக் கோளாறுகள், கணையம்
மற்றும் இதயப் பாதிப்புகள் ஏற்படும். ஒருவித வெறுப்பு,
அமைதியின்மை, தலைச்சுற்றல் ஆகியவை தோன்றும்.
அலுவலகத்தில் வேலை பார்த்து, இயந்திர வாழ்க்கை வாழ்பவர்
களுக்கு இந்த வஜ்ர முத்திரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

*செய்முறை*

கட்டை விரலின் நுனியை நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்
ஆகியவை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல்
வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யலாம்.
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம்.
நேர அளவு
ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும், ஐந்து நிமிடங்கள் வீதம்
செய்யலாம். அத்துடன் மூக்கின் அடிப்பகுதி, தலையின் முன் பக்க
நடுப்பகுதி, தலையின் பின்புறம், பிடரி, கழுத்துப் பகுதி ஆகிய
இடங்களில் நடு விரலால் மஜாஸ் செய்ய வேண்டும்.

*எச்சரிக்கை*

*அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது.*

*பலன்கள்*

1. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

2. அமைதியின்மை, தலைச்சுற்றல் குணமாகும்.

3. வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

4. கணையம், கல்லீரல் ஆகியவை பலப்படும்.

5. குறை ரத்த அழுத்த நோய் குணமாகும்.

6. புகைப் பிடித்தல், புகையிலை உபயோகித்தல், காப்பி, டீ குடித்தல்
ஆகிய பழக்கங்களை படிப்படியாகக் குறைத்து, நாளடைவில்
அப்பழக்கங்களில் இருந்து விடுபடலாம்.

7. இயந்திர வாழ்க்கை வாழ்பவர்களை, அதிையாக இருக்கவும்,
நோய்களில் இருந்து விடுபடவும் வைக்கிறது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Thursday, 13 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பின் முத்திரை*
*(Back Mudra)*

இந்த பின் முத்திரை,  முதுகு வலியை நீங்கப் பயன்படும் சிறந்த
முத்திரையாகும். இது இரண்டு கைகளிலும் செய்ய வேண்டிய
முத்திரை. மிகக் கடுமையான முதுகு வலியையும் குணப்படுத்தக்
கூடியது. முதுகுப்புறம் பலமில்லாமல் பலஹீனமாக இருப்பவர்
களுக்கு இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.
பல காலமாக, நேராக உட்காராமல், கண்டபடி அமர்ந்திருந்ததால்
உண்டான அனைத்துவிதமான முதுகு சம்பந்தப்பட்ட பிடிப்புகளையும்
இந்த முத்திரை நீக்கும். முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு,
பொதுவாக முதுகுப் பகுதியில் வலி உண்டாவது இயற்கை. இதற்காக,
கண்டகண்ட வலி நிவாரணிகளை உட்கொண்டால் மட்டும் வலி
நீங்காது, முறையான யோகப் பயிற்சி மூலம் வலி நீங்கும். இந்த யோக
முத்திரையைச் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
சிலர், தோட்ட வேலை போன்ற கடினமான பணிகளைச் செய்வதால்
கூட முதுகுப் புறத்தில் வலி உண்டாகலாம். ஒரே இடத்தில் வெகு
நேரம் அமர்ந்து வேலை செய்தாலும் வலி வரலாம். முதுகுத் தண்டு
வழியாகச் செல்லும் உறுப்புகள் ஏதாவது பாதிக்கப்பட்டிருந்தாலும்
வலி உண்டாகலாம். மன உளைச்சல், பயம் மற்றும் உணவுப் பழக்க
வழக்கங்களும் வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கமின்மை,
அதிகத் தூக்கம், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றின் காரணமாகவும் முதுகில் வலி ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், தரையில்
மல்லாந்த நிலையில் படுத்து, காலை ஒரு நாற்காலி மீது வைத்தபடி
இந்த முத்திரையைச் செய்யலாம். அலுவலக வேலையின் இடை
வேளையின்போது இந்த முத்திரையைச் செய்தால், நாள் முழுவதும்
வலி இல்லாமல் பணிபுரியலாம்.

*செய்முறை*

வலது கை
கட்டை விரல், நடு விரல், சுண்டு விரல் ஆகியவற்றின் நுனிப்
பகுதிகள் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல்
மற்றும் மோதிர விரல் இரண்டும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
இடது கை
மோதிர விரல், கட்டை விரல் ஆகியவற்றின் நகங்கள் தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும்.
இந்த முத்திரையை தினமும் 4 முறை 4 நிமிடங்கள் வீதும் செய்து வர
வேண்டும்.

*பலன்கள்*

1. முதுகு வலி, தண்டுவட வலி ஆகியவை குணமாகும்.
2. அதிக வேலைப் பளுவால் ஏற்படும் வலி குணமாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Sunday, 9 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*உத்தரபோதி முத்திரை*

உத்தரபோதி முத்திரை என்றால் உயர்ந்த தெளிவை உண்டாக்கும்
முத்திரை என்று பெயர். இந்த முத்திரை முழு நிறைவைத் தருவதற்கான
ஒரு அடையாள முத்திரையாகவும், சிறந்த முத்திரையாகவும்
விளங்குகிறது. இந்த முத்திரையில் எல்லா விரல்களும் ஒன்று
மற்றொன்றுடன் இணைந்திருக்கின்றன. புத்த மத சிற்பங்களில் இந்த
முத்திரை அதிகம் காணப்படுகிறது. சூரிய ஒளியாகத் தோன்றி பயத்தை
அகற்றுகிறது.
உத்தர போதி முத்திரை, உடலுறுப்புகளுக்குப் புத்துணர்ச்சியைக்
கொடுத்து, சக்தியை அளிக்கிறது. நுரையீரல் மற்றும் பெருங்குட
லோடு தொடர்புடைய பிற பாகங்களைப் பலப்படுத்துகிறது.
சுவாசத்தை இது சீர்படுத்துவதால், இதயம் மற்றும் நுரையீரலின்
மேல்பாகம் நன்கு சுருங்கி விரிவதன் மூலம், புத்துணர்ச்சி
உண்டாகிறது.
மேலும், நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொள்வதால் மின்காந்தச்
சக்தி உண்டாகிறது. இதனால், வெளி உலகத் தொடர்பு
ஏற்படுவதுடன் அண்டவெளி சக்தியையும் பெற முடியும். நாம்
அன்றாடம் செய்யும் பல வேலைகள் உள்ளன. பேசுதல், ஆசிரியராக
வகுப்பறையில் பணிபுரிதல், பாடங்களைக் கேட்டல், படித்தல்
ஆகிய செயல்களைச் செய்வதற்கு முன், இந்த முத்திரையைச்
செய்தால் சக்தியானது உடலுக்குள் நுழைந்து நமது செயல்களைச்
சிறப்பாகச் செய்ய முடியும்.

*செய்முறை*

ஆள்காட்டி விரல்கள் மேல் நோக்கியபடி ஒன்றையொன்று
தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற எட்டு விரல்களும்
ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும்.

*கால அளவு*

இந்த முத்திரையை எங்கும் எப்போதும், விரும்பும் நேரம் வரை
செய்யலாம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓய்வின்றி
இருக்கும்போது இந்த முத்திரையைச் செய்யலாம். சுவாசம் சரியாக
இல்லாதபோதும் இந்த முத்திரையைச் செய்யலாம். தேவையான
அளவு சக்தி உடலுக்குள் கிடைக்கிறது.
நிற்கும் முறை
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் இருந்தபடி செய்யலாம்.
நின்றபடியும் செய்யலாம். நம் இதயத்துக்கு நேராக இம் முத்திரை
இருக்க வேண்டும்.

*பலன்கள்*

1. நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று செயல்படும்.

2, தைமஸ் மற்றும் தைராய்டு ஆகிய கழுத்துப் பகுதியில் உள்ள
நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.

3. சுவாச உறுப்புகள் நன்கு செயல்படும்.

4. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புகள் பலமாகும்.

6. நரம்பு மண்டலம் சக்தியைப் பெறுவதன் மூலம், அண்டவெளி
சக்தி உடலுக்குள் செல்கிறது.

7. மன நிறைவு ஏற்படும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Saturday, 8 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ஆஸ்துமா முத்திரை*

சளி முத்திரையைத் தொடர்ந்து கட்டாயம் செய்ய வேண்டிய
முத்திரை, ஆஸ்துமா முத்திரை. இதை காச முத்திரை என்றும் சொல்
வார்கள். இந்த முத்திரைகள், சுவாசக் கோளாறுகளை நீக்கும் சக்தி
படைத்தவை. யோகாசனம் பயில்பவர்கள், செய்பவர்கள், இந்த
இரண்டு முத்திரைகளையும் செய்து வர வேண்டும். அதாவது, சுவாசம்
சீராக நடைபெறும் வரை செய்ய வேண்டும்.
சளி முத்திரையும், ஆஸ்துமா முத்திரையும் ஒன்றோடொன்று
தொடர்புடையவை. இரண்டும் சளி, ஆஸ்துமா பிரச்னைகளைக்
குணப்படுத்தக்கூடியவை. முத்திரையைச் செய்யும்போது சுவாசத்தை
உள்ளிழுத்து வெளியே விடுவது அவசியம். இந்த முத்திரையைச்
செய்யும்போதும் மனம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
அந்த மன உணர்வு, மேல் வயிறு, அடி வயிறு, தொண்டை, முன்
தலைப் பகுதி, உச்சந்தலைப் பகுதி ஆகியவற்றுடன் ஒட்டி
நிற்பதுபோல் இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே
விட வேண்டும். சுவாசத்தை வெளியே விடும்போது தலை முதல்
கால் வரை உணர்வு சென்று பின் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
முத்திரைகள், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு மிகவும்
உதவியாக உள்ளது. இதயச் செயல்பாட்டின் அளவையும், நரம்பு
மண்டலத்தின் செயல்பாட்டின் தன்மையையும், கட்டுப்பாட்டில்
வைக்க உதவுகின்றன. இதன்மூலம், நல்ல பலன் கிடைப்பதுடன்
மேற்கண்ட உறுப்புகள் சுறுசுறுப்பாகச் செயல்படவும் உதவுகிறது.

*செய்முறை*

இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். நடு
விரல்களின் நகங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக்
கொண்டபடி இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டியபடி இருக்க
வேண்டும்.
கால அளவு
5 நிமிடங்கள் வீதம் தினமும் 4 அல்லது 5 முறைகள் செய்ய வேண்டும்.
நிற்கும் நிலை
அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ இதைச் செய்யலாம்.
உணவுப் பழக்கங்கள்
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உணவுப்
பழக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். சிரமத்தோடு
இரைந்து மூச்சுவிடுதல் (Wheezing), இழுப்பு போன்ற சுவாசம்
சம்பந்தமான நோய்களின் தாக்கம், இரவு 2 மணி முதல் அதிகாலை 4
மணி வரை அதிகமாக இருக்கும். எனவே, மாலை வேலையில்
உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவை
மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள்,
கடினமான உணவுப் பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம்.
பிராணாயாமம் செய்தால் ஆஸ்துமா குறையும்,

*பலன்கள்*

1. நரம்பு மண்டலமும் இதயமும் சீராகச் செயல்படும்.

2. மூச்சிரைப்பு, சளி, ஆஸ்துமா, மூக்கடைப்பு நீங்கும்.

3. நுரையீரலில் சேரும் சளி வெளியேறும்.

4. சுவாசக் கோளாறுகள் நீங்கும்.

5. நல்ல பசி உண்டாகும்.

6. மன அமைதி ஏற்படும்.

7. தனிமை நிலை, வெறுப்புணர்வு அகலும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Friday, 7 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சளி முத்திரை*
*(Bronchial Mudra)*

இந்த சளி முத்திரை மற்றும் _ஆஸ்துமா முத்திரை (நாளைப் பார்ப்போம்)_ இரண்டும் சுவாசக்
கோளாறுகளை நீக்குகின்றன. இந்த இரண்டு முத்திரைகளையும்,
ஒன்றன் பின் ஒன்றாக சிறிது நேர இடைவெளியில் செய்ய வேண்டும்.
இவற்றை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.
சுவாசக் கோளாறு ஏற்படும்போது, தனிமை உணர்வு, மூச்சுத் திணறல்,
இல்வாழ்வில் பிரச்னைகள், கவலைகள் ஆகியவை உருவாகின்றன.
இத்தகைய உணர்வுகளால் மனநிலை பாதிக்கப்பட்டு மனஇறுக்கம்
ஏற்படுகிறது.
நமக்குள் ஏற்படும் எதிர்மறை உணர்வுகள் மற்றும் மனநிலையால்
பெரிய அளவிலான சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இதனால், உடல்
ரீதியாகத் தளர்ச்சி ஏற்படுவதுடன் மன உளைச்சலும் அதிகமாகும்.
பயம், சோகம், மனநிறைவின்மை, எந்தப் பிரச்னையையும் பெரிதாக
நினைத்தல், மனம் புண்படுதல் ஆகியவை முக்கியக் காரணங்களாக
அமைந்துவிடுகின்றன. இதனால், சுவாசக் கோளாறுகள் எளிதில்
நம்மைப் பற்றிக்கொள்கின்றன.
கால அளவு
சளி முத்திரையை, தினமும் ஐந்து நிமிடங்கள் வீதம் செய்து வர
வேண்டும்.

*செய்முறை*

கட்டை விரலின் அடிப்பாகத்தை சுண்டு விரல் தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும். கட்டை விரலின் நடுப் பகுதியை மோதிரவிரல் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். கண்டு விரலும், இணைந்தபடி மோதிர
விரலும் இணைந்தபடி இருக்க வேண்டும். நடு விரலானது கட்டை
விரலின் மேல் பகுதியைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
ஆள்காட்டி விரல் நீட்டியபடி இருக்க வேண்டும். இந்த முத்திரையைச்
 செய்யும்போது மனம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்,
அந்த மன உணர்வு, மேல் வயிறு, அடி வயிறு, தொண்டை, முன்
தலைப்பகுதி, உச்சந்தலைப் பகுதி ஆகியவற்றுடன் ஒட்டி
நிற்பதுபோல் உள்ளிழுத்து இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே
விட வேண்டும். சுவாசத்தை வெளியே விடும்போது, தலை முதல்
கால் வரை மன உணர்வு சென்று பின் இயல்பு நிலைக்கு வர
வேண்டும். அதாவது, ஒவ்வொரு பகுதியையும் நினைத்துப் பார்க்க
வேண்டும். இந்தச் சளி முத்திரையைச் செய்து முடித்த பின், ஆஸ்துமா
முத்திரையையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
நிற்கும் நிலை
அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ இந்த முத்திரையைச்
செய்யலாம்.

*பலன்கள்*

1. எதிர்மறை உணர்வுகளை ஏற்றுக்கொள்வதால் சுவாசம் சீராக
இருக்கும்.

2. மூச்சுத் திணறல் நீங்கும்.

3. சளி வெளியேறும்.

4. தனிமை உணர்வுகள் அகலும்.

5. மனஇறுக்கம் குறையும்.

6. படிப்பில் கவனம் செல்லும்.

7. வெறுப்புணர்ச்சிகள், உடல் வேதனைகள் நீங்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Thursday, 6 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சங்கு முத்திரை*

சங்குகளில் பல வகை உண்டு. அவற்றில் வலம்புரி சங்கே சிறப்பானது. சங்கு என்றால் 'நன்மையைக் கொண்டு வருவது' என்று
பொருள்.
நமது உடலில் உள்ள விசுத்தி சக்கரத்தில் ஏற்படும் நோய்களை இந்த
முத்திரை குணப்படுத்துகிறது. விசுத்தி சக்கரத்தின் சக்தி மையம்
தொண்டைப் பகுதியில் இருக்கிறது. சங்கு நேர்மறை சக்தியை
அளிப்பதாக இந்துக்களிடையே நம்பிக்கை உள்ளது. சங்கு முத்திரையை
செய்யும்போது 'ஓம்' என்று பலமுறை சொல்ல வேண்டும்.
அப்போது, நம் உடலுக்குள் ஏற்படும் அமைதியான சூழ்நிலையை
உணரலாம். இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் கோபத்தைக்
கட்டுப்படுத்தி அமைதி காண முடியும்.

*செய்முறை*

முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் பதியவைத்து,
கட்டை விரல் தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக
மூடிக்கொள்ள வேண்டும். வலது பெரு விரல், இடது கையின் மற்ற
நான்கு விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இப்போது
சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது
கையின் பெரு விரலுக்கும் (கட்டை விரலுக்கும்), ஆட்காட்டி
விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு ஓட்டை உருவாகி இருக்கும். இந்த ஓட்டை வழியே ஊதினால் சங்கொலி கேட்கும்.

இந்த முத்திரையை வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் இருந்தபடி
செய்யலாம்.

*நேர அளவு*

ஆரம்ப நிலையில் 15 நிமிடங்கள் செய்யலாம். தினமும் மூன்று
வேலைகளிலும் செய்யலாம். இதேபோல், கைகளை மாற்றியும்
செய்யலாம். விரும்புகின்ற அளவில், விருப்பத்தைப் பொருத்துச்
செய்யலாம். நம்முடைய தேவைகள் நிறைவேறும் காலம் வரை
செய்யலாம்.
இடது கை கட்டை விரலோடு (நெருப்பு என்ற பூதம்), வலது கையில்
காற்று, ஆகாயம், நீர், நிலம் என நான்கு விரல்கள் சேர்கின்றன.

*பலன்கள்*

1. உடல் வலிமை அடையும்.

2. மன அமைதி உண்டாகும்.

3. விசுத்தி, மணிபூரகச் சக்கரங்கள் வலுவடையும்.

4. குரல் வளம் பெருகும்.

5. திக்குவாய் சரியாகும்.

6. தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

7. உணவு நன்கு ஜீரணமாகும்.

8. குடல் நோய்கள் குணமாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Wednesday, 5 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பூதி முத்திரை*

பூதி முத்திரையை 'திரவ முத்திரை' என்றும் சொல்லலாம். நமது
உடல் எடையில் பாதி அளவு நீரால் ஆனது. உடலில் உள்ள நீர்
அதிகரிக்காமலும், குறைந்துவிடாமலும் சமநிலையில் வைக்க இந்த
முத்திரை உதவுகிறது.
நமது உடல் பாகங்கள் அடிக்கடி நீர்ச்சத்து குறைவால் உலர்ந்து
காணப்படும். உதாரணமாக, வாய் உலர்ந்துபோதல், கண்கள் ஈரமின்றி
காணப்படுதல் ஆகிய குறைபாடுகள் உருவாகலாம். இந்தக்
குறைபாடுகளை, இந்தப் பூதி முத்திரை சரி செய்கிறது.
மேலும், சிறுநீரகப் பாதிப்புகளையும் இந்த முத்திரை சரி செய்கிறது.
சிறுநீர்ப் பையில் ஏற்படும் கோளாறுகளையும் சரி செய்கிறது. நாக்கில்
சுவையை உணரவைக்கும் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதிகமாக
உலர்ந்துபோகும் உடல் பாகங்களையும், வெப்பம் அல்லது
நெருப்பின் காரணமாக உலர்ந்துபோகும் பாகங்களையும் சரி செய்து,
நீர்ச்சத்து இருக்கும்படி செய்கிறது.

*செய்முறை*

கட்டை விரலும், சுண்டு விரலும் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
மற்ற விரல்கள், தளர்வாக நீட்டியபடி இருக்க வேண்டும். இரண்டு
கைகளிலும் செய்ய வேண்டும்.
கால அளவு
தினமும் மூன்று முறை, பதினைந்து நிமிடங்கள் வீதம் செய்ய
வேண்டும். நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

*பலன்கள்*

1. நாவின் சுவை உணர்வு அதிகரிக்கும்.

2. உடலில் உள்ள நீர்ச்சத்து சம நிலையில் இருக்கும்.

3. கண், வாய் ஆகியவை உலர்ந்துபோகாமல் தடுக்கப்படும்.

4. சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.

5. சிறுநீர்ப் பையில் உள்ள தடைகள் அகலும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Monday, 3 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ருத்ர முத்திரை*

சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெரு மானின்
கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம். அக்ஷம் என்றால் கண்.
நல்ல ருத்திராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும்பொன்னின் மாற்று
இருக்குமென்று கூறுவார்கள். ருத்ராக்ஷம் அணிபவரை தீயவை
மற்றும் நோய் நொடிகள் அணுகா,
சிவபெருமானைப் பற்றிய மந்திரம் 'ருத்ரம்' எனப்படும். உடல் ஒரு
போக்கிலும் மனம் ஒரு போக்கிலும் செல்ல முடியாது. இரண்டு
குவிந்த நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்,
மன இறுக்கம், மனக் குழப்பம், மன அழுத்தம், தெளிவற்ற சிந்தனை,
முரண்பாடான செயல்பாடுகள் ஆகியவை ஏற்படும்.
நம் உடலில் சக்தி, வாயுக்கள், சக்கரங்கள் உள்ளன. பஞ்சபூதங்களும்
குவிந்திருந்தால் சமநிலையில் இருக்கும். இதனால், உடலும் மனமும்
சமநிலையில் இருக்கும்.
பூமி என்பது தாயாக உள்ளது. அதனால் அன்னை பூமி, தாய் நாடு
என்றெல்லாம் கூறுகிறோம். இந்தப் பூமி என்ற பஞ்சபூதம்
தூண்டப்பட்டால், உடல் சமநிலைப் படும்.
சோலார் நரம்புக் குவியல்கள்
சுவாதிஸ்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரச் சக்கரங்களுடன் இந்த
நரம்புக் குவியல்கள் இணைந்துள்ளன. நமது வயிற்றுப் பகுதியில்
உள்ளே இருக்கும் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம்,
சிறுநீரகங்கள் ஆகிய முக்கிய உறுப்புகள் இந்த நரம்புக் குவியலின்
கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்த சுவாதிஸ்டானம்,
மணிபூரகச் சக்கரம் இரண்டும் சரிவரச் செயல்படா விட்டால், நரம்பு
கள் பாதிக்கப்பட்டு உள் உறுப்புகள் செயலிழந்துபோகும் வாய்ப்பு
உள்ளது.இந்த ருத்ர முத்திரையைச் செய்யும் போது சோலார் நரம்புக் குவியல்கள்
மற்றும் அதை இயக்கும் மணிபூரகச் சக்கரம் இரண்டும் தூண்டிவிடப்
படுகின்றன.
செய்முறை
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று
விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில்
இரண்டு கைகளிலும் செய்யலாம்.
இந்த முத்திரையை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
செய்யலாம். இரண்டு கைகளிலும் ஒரே நேரம் ஐந்து முதல் பத்து
நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்*

1. ரத்த ஓட்டம் சீராகும்.

2. தூய சிந்தனைகள் ஏற்படும்.

3. கண் பார்வைக் குறைபாடு குணமாகும்.

4. சுவாசம் சீர்படும்.

5. இதய வால்வில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

6. கவனச் சிதறல் ஏற்படாது.

7. பஞ்சபூதங்கள் அனைத்தும் உறுதியாகி சமப்படும்.

8. மண்ணீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் நன்கு செயல்படும்.

9. உயிர் சக்தி அதிகரிக்கும்.

10. தலைவலி, தலைச் சுற்றல் நீங்கும்.

11. ஜீரண சக்தி ஏற்படும்.

12. குடல் இறக்கம், மூலம், கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.

வாழ்க வளமுடன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Sunday, 2 January 2022

முத்திரையும் அதன் பலன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வாயு முத்திரை*

வாயு முத்திரை
நாம் உணவின்றி சில நாள்கள் வாழ முடியும். தண்ணீர் இல்லாமல்
ஒரிரு நாள்கள் வாழலாம். ஆனால், காற்று இல்லாமல் வாழ முடியாது.
ஏன், சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. அந்தவகையில்,
ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு நாம் சுவாசிக்க மிகவும்
அவசியமாகிறது.
வாயு முத்திரையை நாம் தொடர்ச்சியாகச் செய்து வந்தால், நம் உடலில்
உள்ள காற்று சமநிலையில் இருக்கும். இந்த முத்திரையை
வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது அதிக பலனைத் தரும்.

*செய்முறை*

சுட்டு விரல் எனப்படும் ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மேல்
பெரு விரலை வைத்து அழுத்தும்போது, வாயு முத்திரை கிடைக்கும்.
மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
நேர அளவு
இந்த முத்திரையை முதலில் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பிறகு, படிப்படியாக நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதிகபட்சமாக
45 நிமிடங்கள் செய்யலாம்.
வாயு முத்திரையைச் செய்யும்போது, நம் உடலில் உள்ள சுழுமுனை
நாடியில் பிராண சக்தி பாயத் தொடங்குகிறது. இதனால் மன அமைதி,
சுறுசுறுப்பு உண்டாகும். காற்று சமநிலையில் இருக்கும். எல்லாவித
நோய்களும் குணமாகும்.

*பலன்கள்*

1. பக்க வாதம் குணமாகும்.

2. உடல் வலிகள் நீங்கும்.

3. முதுகுத் தண்டுவட வலிகள் நீங்கும்.

4. மூட்டு வலிகள் நீங்கும்.

5. வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லை நீங்கும்.

6. முகத்தில் உண்டாகும் வாத நோய்கள் குணமாகும்.

7. படபடப்பு நீங்கும்.

8. அஜீரணம், வாயுத் தொல்லை, பசியின்மை அகலும்.

9. மன இருக்கம் நீங்கும்.

10. தெம்பு உண்டாகும்.
11. தொண்டையில் ஏற்படும் அடைப்புகள் நீங்கும்.

இந்த முத்திரையை எல்லாக் காலங்களிலும் செய்ய
வேண்டியதில்லை. நோய்கள் குணமானதும் நிறுத்திவிடலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐