Saturday, 15 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வஜ்ர முத்திரை*

இந்திரனின் கையில் உள்ள ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம் ஆகும்.
வைரத்துக்கும் வஜ்ரம் என்று பெயர். வஜ்ர முத்திரை, இடிக்கு
அடையாளமாகக் கூறப்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்
முறையாக நடக்கத் தூண்டுகோலாக இந்த முத்திரை உள்ளது.
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால், ரத்தம் அழுத்த
பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில், வயிற்றுக் கோளாறுகள், கணையம்
மற்றும் இதயப் பாதிப்புகள் ஏற்படும். ஒருவித வெறுப்பு,
அமைதியின்மை, தலைச்சுற்றல் ஆகியவை தோன்றும்.
அலுவலகத்தில் வேலை பார்த்து, இயந்திர வாழ்க்கை வாழ்பவர்
களுக்கு இந்த வஜ்ர முத்திரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

*செய்முறை*

கட்டை விரலின் நுனியை நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்
ஆகியவை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல்
வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யலாம்.
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம்.
நேர அளவு
ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும், ஐந்து நிமிடங்கள் வீதம்
செய்யலாம். அத்துடன் மூக்கின் அடிப்பகுதி, தலையின் முன் பக்க
நடுப்பகுதி, தலையின் பின்புறம், பிடரி, கழுத்துப் பகுதி ஆகிய
இடங்களில் நடு விரலால் மஜாஸ் செய்ய வேண்டும்.

*எச்சரிக்கை*

*அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது.*

*பலன்கள்*

1. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

2. அமைதியின்மை, தலைச்சுற்றல் குணமாகும்.

3. வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

4. கணையம், கல்லீரல் ஆகியவை பலப்படும்.

5. குறை ரத்த அழுத்த நோய் குணமாகும்.

6. புகைப் பிடித்தல், புகையிலை உபயோகித்தல், காப்பி, டீ குடித்தல்
ஆகிய பழக்கங்களை படிப்படியாகக் குறைத்து, நாளடைவில்
அப்பழக்கங்களில் இருந்து விடுபடலாம்.

7. இயந்திர வாழ்க்கை வாழ்பவர்களை, அதிையாக இருக்கவும்,
நோய்களில் இருந்து விடுபடவும் வைக்கிறது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

No comments: