Saturday, 8 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ஆஸ்துமா முத்திரை*

சளி முத்திரையைத் தொடர்ந்து கட்டாயம் செய்ய வேண்டிய
முத்திரை, ஆஸ்துமா முத்திரை. இதை காச முத்திரை என்றும் சொல்
வார்கள். இந்த முத்திரைகள், சுவாசக் கோளாறுகளை நீக்கும் சக்தி
படைத்தவை. யோகாசனம் பயில்பவர்கள், செய்பவர்கள், இந்த
இரண்டு முத்திரைகளையும் செய்து வர வேண்டும். அதாவது, சுவாசம்
சீராக நடைபெறும் வரை செய்ய வேண்டும்.
சளி முத்திரையும், ஆஸ்துமா முத்திரையும் ஒன்றோடொன்று
தொடர்புடையவை. இரண்டும் சளி, ஆஸ்துமா பிரச்னைகளைக்
குணப்படுத்தக்கூடியவை. முத்திரையைச் செய்யும்போது சுவாசத்தை
உள்ளிழுத்து வெளியே விடுவது அவசியம். இந்த முத்திரையைச்
செய்யும்போதும் மனம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
அந்த மன உணர்வு, மேல் வயிறு, அடி வயிறு, தொண்டை, முன்
தலைப் பகுதி, உச்சந்தலைப் பகுதி ஆகியவற்றுடன் ஒட்டி
நிற்பதுபோல் இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே
விட வேண்டும். சுவாசத்தை வெளியே விடும்போது தலை முதல்
கால் வரை உணர்வு சென்று பின் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
முத்திரைகள், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு மிகவும்
உதவியாக உள்ளது. இதயச் செயல்பாட்டின் அளவையும், நரம்பு
மண்டலத்தின் செயல்பாட்டின் தன்மையையும், கட்டுப்பாட்டில்
வைக்க உதவுகின்றன. இதன்மூலம், நல்ல பலன் கிடைப்பதுடன்
மேற்கண்ட உறுப்புகள் சுறுசுறுப்பாகச் செயல்படவும் உதவுகிறது.

*செய்முறை*

இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். நடு
விரல்களின் நகங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக்
கொண்டபடி இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டியபடி இருக்க
வேண்டும்.
கால அளவு
5 நிமிடங்கள் வீதம் தினமும் 4 அல்லது 5 முறைகள் செய்ய வேண்டும்.
நிற்கும் நிலை
அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ இதைச் செய்யலாம்.
உணவுப் பழக்கங்கள்
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உணவுப்
பழக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். சிரமத்தோடு
இரைந்து மூச்சுவிடுதல் (Wheezing), இழுப்பு போன்ற சுவாசம்
சம்பந்தமான நோய்களின் தாக்கம், இரவு 2 மணி முதல் அதிகாலை 4
மணி வரை அதிகமாக இருக்கும். எனவே, மாலை வேலையில்
உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவை
மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள்,
கடினமான உணவுப் பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம்.
பிராணாயாமம் செய்தால் ஆஸ்துமா குறையும்,

*பலன்கள்*

1. நரம்பு மண்டலமும் இதயமும் சீராகச் செயல்படும்.

2. மூச்சிரைப்பு, சளி, ஆஸ்துமா, மூக்கடைப்பு நீங்கும்.

3. நுரையீரலில் சேரும் சளி வெளியேறும்.

4. சுவாசக் கோளாறுகள் நீங்கும்.

5. நல்ல பசி உண்டாகும்.

6. மன அமைதி ஏற்படும்.

7. தனிமை நிலை, வெறுப்புணர்வு அகலும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

No comments: