*தினம் ஒரு முத்திரை*
*கணேஷ் முத்திரை*
விநாயகரின் பெயரைக் கொண்ட முத்திரை இது. யானை முகம்
கொண்ட முழுமுதற் கடவுள் விநாயகர். எல்லாவிதத் தடைகளை,
இடையூறுகளை நீக்குபவர். இந்த கணேஷ் முத்திரை, இதயம் நன்கு
செயல்படத் தூண்டுகோலாக இருக்கிறது. இதயத் தசைகள், நுரையீரல்
குழாய்கள் ஆகியவற்றில் உள்ள குறைகளைன நீக்கி, அவற்றில் ஏற்படும்
பிரச்னைகளைத் தீர்க்கிறது.
இது, மற்றவர்களுடன் நல்ல முறையில் பழகவும், நம்பிக்கையை
ஏற்படுத்தவும் செய்கிறது. இது, நமது உடலில் உள்ள நான்காவது
சக்கரமான அநாகதச் சக்கரம் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.
இதனால், சுவாசம் சீரடைகிறது. ரத்தம் சுத்தமாகிறது. உடலில்
எல்லாப் பாகங்களுக்கும் ரத்தம் தடையின்றிச் செல்ல முடிகிறது.
நரம்பு மண்டலம் நன்கு இயங்குகிறது. ரத்த அழுத்தம் ஒரே சீராக
இருக்கும். ஹார்மோன்கள் நன்கு சுரக்கும்.
செய்முறை
வலது உள்ளங்கை, நமது மார்புப் பகுதியைப்ன பார்த்தவாறு இருக்க
வேண்டும். இதை, இடது கை விரல்களால் இறுகப் பற்றிக்கொள்ள
வேண்டும்.
இப்போது கைகளின் பிடிப்பைவிடாமல் சுவாசத்தை வெளியே விட
வேண்டும். இதனால் தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள
தசைகள் விரிவடையும். பிறகு, சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும்.
இப்போது டென்ஷன் குறைவதுபோல் இருக்கும். ஆறு முறை
இவ்வாறு சுவாசத்தைஅதாவது வெளிவிட்டு பின் உள்ளிழுக்க வேண்டும்.
பிறகு, கைகளை மாற்றி, அதாவது இடது உள்ளங்கையை மார்பைப்
பார்த்தவாறு வைத்து, வலது கையை இணைக்க வேண்டும். பின்னர்மேற்கண்டவாறு சுவாசத்தை வெளியிட்டுப் பின் உள்ளிழுக்க
வேண்டும்.
கால அளவு
தினமும் ஆறு முறை செய்ய வேண்டும். சுவாசத்தை
இழுத்துவிடுவதும் ஆறு முறை இருக்க வேண்டும்.
*பலன்கள்*
1. தடைகள் நீங்கும்.
2. ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகி, எல்லா பாகங்களுக்கும்
தடையின்றிச் செல்லும்.
3. இதயம் நன்கு செயல்படும். இதயத் தசைகள் நன்கு சுருங்கி
விரியும். ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.நி
4. நுரையீரல் குழாய்களும் தடையின்றிச் செயல்படும்.
5. நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment