Thursday, 13 January 2022

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பின் முத்திரை*
*(Back Mudra)*

இந்த பின் முத்திரை,  முதுகு வலியை நீங்கப் பயன்படும் சிறந்த
முத்திரையாகும். இது இரண்டு கைகளிலும் செய்ய வேண்டிய
முத்திரை. மிகக் கடுமையான முதுகு வலியையும் குணப்படுத்தக்
கூடியது. முதுகுப்புறம் பலமில்லாமல் பலஹீனமாக இருப்பவர்
களுக்கு இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.
பல காலமாக, நேராக உட்காராமல், கண்டபடி அமர்ந்திருந்ததால்
உண்டான அனைத்துவிதமான முதுகு சம்பந்தப்பட்ட பிடிப்புகளையும்
இந்த முத்திரை நீக்கும். முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு,
பொதுவாக முதுகுப் பகுதியில் வலி உண்டாவது இயற்கை. இதற்காக,
கண்டகண்ட வலி நிவாரணிகளை உட்கொண்டால் மட்டும் வலி
நீங்காது, முறையான யோகப் பயிற்சி மூலம் வலி நீங்கும். இந்த யோக
முத்திரையைச் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
சிலர், தோட்ட வேலை போன்ற கடினமான பணிகளைச் செய்வதால்
கூட முதுகுப் புறத்தில் வலி உண்டாகலாம். ஒரே இடத்தில் வெகு
நேரம் அமர்ந்து வேலை செய்தாலும் வலி வரலாம். முதுகுத் தண்டு
வழியாகச் செல்லும் உறுப்புகள் ஏதாவது பாதிக்கப்பட்டிருந்தாலும்
வலி உண்டாகலாம். மன உளைச்சல், பயம் மற்றும் உணவுப் பழக்க
வழக்கங்களும் வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கமின்மை,
அதிகத் தூக்கம், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றின் காரணமாகவும் முதுகில் வலி ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், தரையில்
மல்லாந்த நிலையில் படுத்து, காலை ஒரு நாற்காலி மீது வைத்தபடி
இந்த முத்திரையைச் செய்யலாம். அலுவலக வேலையின் இடை
வேளையின்போது இந்த முத்திரையைச் செய்தால், நாள் முழுவதும்
வலி இல்லாமல் பணிபுரியலாம்.

*செய்முறை*

வலது கை
கட்டை விரல், நடு விரல், சுண்டு விரல் ஆகியவற்றின் நுனிப்
பகுதிகள் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல்
மற்றும் மோதிர விரல் இரண்டும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
இடது கை
மோதிர விரல், கட்டை விரல் ஆகியவற்றின் நகங்கள் தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும்.
இந்த முத்திரையை தினமும் 4 முறை 4 நிமிடங்கள் வீதும் செய்து வர
வேண்டும்.

*பலன்கள்*

1. முதுகு வலி, தண்டுவட வலி ஆகியவை குணமாகும்.
2. அதிக வேலைப் பளுவால் ஏற்படும் வலி குணமாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

No comments: