Friday, 17 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*இரத்த பித்த சமன் முத்திரை*

நடுவிரல்,தொட்டிருக்க மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும், 10 நிமிடங்கள் செய்தாலே போதும்.

*பலன்கள் :*

ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கும்போது, தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும்போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப் படபடப்பு, அதிகமாக பி.பி உயர்ந்துவிட்டது என உணரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையைப் பிடிக்கலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சுமன முத்திரை*

*சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் முத்திரை*

இந்த முத்திரை இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். செய்முறை

நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

*பலன்கள்*

இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை நீக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது. செரிமானம் நன்றாக இயங்கும். தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் 

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*உடல் வலியை தீர்க்கும் சமான முத்திரை*

உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.நம் உடலில் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலை அடைவதால் உடலுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கிறது.  

*செய்முறை  :*

விரிப்பில் அமர்ந்து கொண்டு அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும்.

*கட்டளைகள்:*

 சப்பளம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்யவேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது. முத்திரை செய்யும்போது உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கவேண்டும்.  ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்யவேண்டும்.

*பலன்கள்:*

 உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது. அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக மூளை சுறுசுறுப்படையும். பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர தெம்பு கிடைக்கும். உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.

தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும். கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து சுறுசுறுப்பாகத் தயாராக முடுயும். தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால் ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும். எந்த முத்திரை நமக்கு சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள் சமான முத்திரையை  மட்டும் செய்தாலே போதும். நல்ல தீர்வு கிடைக்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*நில முத்திரை*

நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது.

*செய்யும் முறை :*

மோதிர விரல் நுனியும், கட்டை விரல் நுனியும் சேரும் போது நிலமுத்திரை உண்டாகிறது. கட்டை விரல் நெருப்பை குறிக்கும். மோதிரவிரல் ‘மண்’ மூலம் பொருளைக் குறிக்கிறது. இதில் மண்ணின் சக்தி அதிகமாகி நெருப்பின் சக்தி குறைகிறது.

மண்ணின் சக்தி அதிகமாகும் போது நமது எலும்புகள் கார்டியாலஜ், தோல், தலைமுடி, நகம், தசைகள், உள் உறுப்புகள் அனைத்தின் சக்தியும் அதிகரிக்கிறது.

உடலின் சக்தியும் அதிகரிக்கிறது. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

உடல் பலவீனமாக உள்ளவர்கள் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் இம்முத்திரையைத் தொடர்ந்து ஒரு நாளில் 30 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

எலும்புகளின் அடர்த்திக் குறைவை நீக்கும். எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடங்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக் குறைக்கிறது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பலன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சூரிய முத்திரை*

உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை.உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்திற்கு துணை புரிந்து உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

சப்பளங்கால் இட்டு 5 - 10 நிமிடங்கள்வரை செய்தால் போதும். தினமும் இருவேளை வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும். முத்திரையை செய்யும் முன் அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும். 

நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு, நீர்கடுப்பு, வாய்புண், வெள்ளைபடுதல், கண்சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கலாம். 

*செய்முறை :* 

மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொடவேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

*பலன்கள் :*

உடலின் வெப்ப நிலையை அதிகரித்து பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும், சுறுசுறுப்பாகவும்  வைத்திருக்க உதவும். உடலில் அதிக கொழுப்பு உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.  ஹைப்போதைராய்டு உள்ளவர்கள் ஒரு வேலை மட்டும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சங்கு முத்திரை*

*செய்முறை:*

இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். 

வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும்.  இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

*பலன்கள்:*

தைராய்டு நோய் குணமடைகிறது. திக்கிப் பேசுவது குணமடைகிறது. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது. இந்த  முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது. நல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி  அதிகமாகிறது.

உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது. காய்ச்சல் குணமடைகிறது. அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தசை வலுவடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது. மன அமைதி கிடைக்கிறது. மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது. சங்கு முத்திரையை தொடர்நது செய்து வந்தால் தைராய்டு நோய் குணமடையும். தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும். இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*அபான முத்திரை*

உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த  வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள்  வெளியேறும் செயல் துரிதமாகும்.

*அபான முத்திரை செய்முறை :*

கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி  இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

*பலன்கள் :*

வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். மேலும் பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். மூக்கடைப்பு தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி  போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Sunday, 27 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

கேள்வி : சுவாமிஜி, அகத்தவம் செய்யாமலே மனிதன் நல்வாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய முடியாதா?



மகரிஷியின் பதில் : மனிதன் இரண்டடுக்கு வினைப்பயனை உடையவன். பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்தானோ அது பிராரப்த கர்மம் எனப்படும். கருவழியே அவனது முன்னோர்களிடமிருந்து என்ன பதிவுகளைப் பெற்றானோ அது சஞ்சித கர்மம் என்று சொல்லக்கூடிய பழவினையாகும். இவையிரண்டும் சேர்ந்த தொகுப்பே ஒரு மனிதனின் தன்மை (Personality) ஆகும்....

இதன் வழியாகத்தான் மனிதன் செயல்களைச் செய்து கொண்டே போவான். இந்தப் பதிவுகளில் நல்ல பதிவுகளும் உள்ளன, துன்பம் விளைவிக்கும் தீயபதிவுகளும் உள்ளன. தீயவற்றைத் தவிர்த்து நல்ல பதிவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய பதிவுகள் அவ்வப்பொழுது தோன்றித் தீய செயல்களைச் செய்ய வைத்து, அதன் மூலமாகத் துன்பங்களை மனிதன் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு வாழ்வின் நோக்கத்திற்கு முரணான தீயபதிவுகள் அதிகரித்துக் கொண்டே போனால் பிறவிகள் பல பெருங்கடலாக நீளும். வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.

அப்படியின்றி, துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வேண்டாத பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தான் இன்று பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமிடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்.

எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றிலான பழக்கப் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபட்டு, தான் விரும்பிய நல்வழியில் செல்ல அவனுக்கு முறையான உளப்பயிற்சி முறை வேண்டும். அதைத்தான் நமது சித்தர் பெருமான் திருமூலர் ஒரு கவியில்,

"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி யுண்டு
தனக்கும் கிளைக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே.

என்று குறிப்புட்டுள்ளார்.

வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையை கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள மனிதன், அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றொன்று அறம். இவையிரண்டையும் செய்தால் அவன் மாத்திரம் அல்லாமல் அவனுக்குப் பின்வரும் சந்ததிகளும் நன்மை பெறுவார்கள் என்கிறார்.

மனதை உயிர்மேல் வைத்து, ஒடுங்கி நின்று தவம் செய்யும் பொழுது, மன அலை விரைவு குறைந்து, உயிரின் தன்மையை உணர்கிறான். வினையின் பதிவுகள் அவற்றின் பிரதிபலிப்புகள் இவற்றை உணர்கிறான். தகாத தீய வினைப்பதிவின் காரணமாக உடலிலே வரக்கூடிய நோய்களையும், மனதில் வரக்கூடிய களங்கங்களையும் அறிந்து அறநெறி மூலம் அகற்றிக் கொள்கிறான்.

மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அதற்கு முறைப்படுத்தப்பட்ட உளப்பயிற்சி வேண்டும். அப்பயிற்சிக்குத்தான் அகத்தவம் என்று பெயர். அகத்தவமின்றி மன அலைச் சுழல் குறையாது. விளைவறிந்த விழிப்புநிலை வராது. பதிவு நீக்கம் பெற முடியாது. வீடுபேற்று நிலைகிட்டாது. வாழ்வின் நோக்கம் நிறைவேறாது. ஆகவே நல்வாழ்வு பெற அகத்தவம் மிக மிக அவசியம்.

சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள காரணம் என்ன?

கேள்வி : அருள்தந்தை அவர்களே, ஆன்மீக வழியிலே நமது வாழ்க்கையை வகுத்துக் கொண்டாலும், சில சமயங்களில் சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறதே - இதற்குக் காரணம் என்ன? இதை மாற்ற வழி இல்லையா?

மகரிஷியின் பதில் : மனித வாழ்க்கையில் துன்பமும், துயரமும் நேர்வதற்கு 3 சூழ்நிலைகள் உள்ளன.

 அவை :

1) ஆகாம்ய கர்மம்,...
2) பிராரப்த கர்மம்,
3) சஞ்சித கர்மம்.

சஞ்சித மர்மம் என்பது நமது முன்னோர்கள் செய்த புண்ணிய பாவத்தின் தொகுப்பாகும். அவை வழி வழியாகச் சந்ததிகளுக்கு வந்து சேரும் வினைப்பதிவாகும். எனவேதான் ஒரு மனிதனானவன் தான் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட துன்பமும் தூரமும் அவனது வாழ்க்கையில் உண்டாகித் கொண்டிருக்கின்றன. சஞ்சித கர்ம வினைப்பதிவுகளைத் தீர்த்துக் கொள்ள கீழ்க்காணும் மூன்று வழிகள் உள்ளன.

 அவை :

1) பிராயச்சித்தம்
2) மேல்பதிவு
3) தவம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Sunday, 20 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

சுவாமிஜி அவர்களே... பெற்றோர்களின் வினைத் தொடரே குழந்தைகள் என்றால் நற்குணம் படைத்த பெற்றோர்களுக்குத் தீயகுணம் படைத்த குழந்தைகளும்,தீயகுணம் படைத்த பெற்றோர்களுக்கு நற்குணம் படைத்த குழந்தைகளும் உருவாவது எவ்வாறு.../...

 சுவாமிஜி அவர்களின் பதில்கள்...

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடத்தில் இருக்கும். அவற்றை ஆழ்நிலைப் பதிவு ,மேல்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும்.அப்போது நல்லதையே செய்வான்; நல்ல மனிதனாகவே வாழ்வான்.
உள்ளே அடங்கி இருக்கும் தீய குணங்களையும், தீய செயல்களையும் விரிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலை பதிவாக இருக்கும். அவனுடைய வித்துவின் மூலம் பிறவிதொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுர்ச்சி பெரும். அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டு விட்ட தீய செயல்களும் செய்கிறார்கள்.
அதேபோல், நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம். வேறு வழி இல்லாது ஒருவர் கசாப்புக்கடை வைத்திருப்பவராக இருக்கலாம். அவர் மனதில் தூய்மையான பணி செய்தால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கலாம். அப்போது அவருக்குப் பிறக்க கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும். எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருதொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும் பொது அவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடையதாக இருக்கிறது.

அதே போல, ஒருவர் பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர். அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் தவத்தினால் விளைவறிந்த விழிப்பு நிலையில் நின்று, செயலுக்கு உரிய விளைவைக் கணித்து, தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இதனை ''மனவளக்கலையில்'' கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்

Sunday, 13 September 2020

இறைவனைக் கண்டு கொண்டேன்: அ/நி அட்சயா அவர்கள்

 


அருட்தந்தை கேள்வி பதில்கள்

ஆன்மநிலை அறிவது ஏன்?

ஆன்மநிலையறிவதனால் யாது பயன்? என்று சிலருக்கு ஒரு கேள்வி பிறக்கலாம்.

பல காரணங்களாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவின் சக்தி புலன்கள் ஐந்திலும் இயங்கி, தன் தத்துவங்களாகிய உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து பகுதிகளையும் அறிந்துவிட்ட பின் மேலும் வேகம் அதிகரித்து மீதியாகவும், அறியப்படாததும் ஆகிய தன் ஆதி நிலையை, அரூபசக்தி தத்துவத்தை, அறியும் ஆர்வமாக ஒரு எழுச்சி பெறுகிறது.

இவ்வகையில் வேகம் கொண்ட அறிவுக்கு எவ்வளவு தான் புலன்களின் வாயிலாக அனுபோகங்கள் கிடைத்த போதிலும், அதனால் முழுத் திருப்தியும், அமைதியும் பெற முடியாது குறைவுபட்டே நிற்கிறது. அந்தப் பக்குவத்தின் தன்னிலையை அறிந்து விட்டால் எழுந்த வேகம் தணிந்து முழுப் பயன் பெற்று விடுகிறது.

உதாரணம் : ஒரு ஆற்றில் தண்ணீர் வருகிறது. குறுக்கே பல ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் இருக்கின்றன. ஆற்றுநீர் அந்தப் பள்ளங்களை நிரப்பும் வரையில் அதைத் தாண்டிப் போகாது. நிரம்பி விட்டபின் அதன் வேகம் மேலும் முன்னோக்கி ஓடுகிறது. ஒரு மேடு, மலை குறுக்கிட்டாலும் அதைச் சுற்றிக் கொண்டு சென்று கடைசியாகக் கடலில் சங்கமமாகி விடுகிறது. அதன் வேகம் அத்துடன் முடிகிறது.

அதுபோலவே அறிவின் வேகத்திற்கேற்றபடி புலன்களின் மூலம் இயங்கி, மிகுதி வேகம் தன்னையறிந்த பிறகு முடிவடைகிறது. மேலும் தன்னிலையாகிய ஆதி தத்துவம் அறிந்தபின், அங்கே அறிவின் தத்துவமும் அதன் இயக்கம், முடிவு என்பனவும் தெரிந்து விடுவதால் தானே பல உடலுருவாய் இயங்கும் ஒருமைத் தத்துவமும் இன்ப துன்பங்களின் காரணம், எழுச்சி, மாற்றம் அனைத்தும் தெளிவாக விளங்கி விடுகின்றன. இந்நிலையில் அறிவு அமைதியைப் பெறுகிறது.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஆகாசம் உயிராக இருக்கிறது. அது உடலில் இயங்குவதால்
உடலுக்கு ஒரு காந்த இயக்கம் கிடைக்கிறது"

.
"ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க
வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்திவிட்டால்
அதுவே ஞானமாகவும் மலரும்".

.
"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே".

.
"வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறன்றது".

.
"இறை நிலையோ டெண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உரைந்திந் நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோகும் தன் முனைப்பு காணும் தெய்வம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Sunday, 6 September 2020

அருட்தந்தை கேள்வி பதில்கள்

அருட்தந்தை கேள்வி பதில்.

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?

சந்தேகங்களுக்கு விளக்கம். – யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி – 

ANBOLI JAN. 1987

கேள்வி:

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?
...

பதில்:

இதற்கு விளக்கம் “குரு, தன்னை பின்பற்றுகிறவர்கள் ஆன்மிகத்தில் உயர வகுத்து கொடுத்துள்ள பாதை” என்பதாகும்.
மணலில் நடக்கும் மனிதன் தன பாதச்சுவடுகளை விட்டுவிட்டுசெல்லும்போது அதை பின்பற்றி வருகிறவர்களுக்கு அது பெரிதும் உதவும்.
“குருவின் பாதங்கள்” எனபது “குரு வகுத்து கொடுத்த ஆன்மிக பயிற்சிகள், தத்துவங்கள்” என்று கருதவேண்டும்.

குறிப்பு:

இந்த குருவின் பதிலை ஏற்று குரு பாதங்களை படமாக போட்டு அதற்க்கு பூ அலங்காரம் செய்வதை விடுத்து, பயிற்சிகளை செய்வதிலும் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி குருவுக்கு உண்மையான சேவை செய்வோம்.

வாழ்க வளமுடன்

Saturday, 5 September 2020

குருவின் சேர்க்கை

குருவின் சேர்க்கை

அறிவு இயக்கமற்ற நிலையிலே உள்ள இருப்பு நிலைக்குப் போகும் அளவுக்கு நுண்மை பெற்றபோது அதுவும், பிரம்மம் (ஆதி) என்ற ஒரு நிலையம் ஒன்றுபட, அந்த இடத்தில் அறிவு அசைவற்று நின்று, ஆதியும் அறிவும் ஒன்றாகி விடுகிறது. அந்த குறிப்பைத்தான் சமம் + ஆதி = சமாதி என்று சொல்வார்கள். ஆதிக்குச் சமமாக அறிவு நிற்கும் நிலைதான் 'சமாதி'. இந்த நான்கையும் மனோபயிற்சியாக, பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்வார்கள். நாம் "மனவளக்கலை" என்கிறோம்.

உயிர் மேலே எழுப்பப்பட வேண்டும். அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு முதல் படியாகும். அதற்கென நீண்ட காலம் செலவிட முடியாது. நாம் "உலக சமுதாய சேவா சங்கத்தின்" மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம். மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை. முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆற்றலைக் கொண்டு மூலாதாரத்தில் தொட்டு, மேலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள். தொட்டு உணர்த்திய உடனே, பயிற்சியாளர் குருவின் ஆற்றல் மூலம் தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அதுதான் உண்மை.

குருவே வந்து, உயிர்ச்சக்தியைக் கொடுத்து விடுகிறாரா என்றால் இல்லை. தூண்டி விடுகிறார். தன்னுடைய ஆற்றலைச் சிறிது பாய்ச்சி, அதை வேகம் கொள்ளச் செய்து தூண்டிவிடுவது (Stimulate) தான் குருவின் ஆற்றல். ஆனால் தூண்டும் போது 'பாலுக்கு உரை ஊற்றுவது' போல, குருவினுடைய தன்மையையும் அடைகிறது. அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு உயிர் அறிந்தவர்களுடைய உயிர் (தீட்சை) சேர வேண்டும். குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போது தான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது, அறிவுக்கு ஒரு பிறவியும் உணடாகி விடுகிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.