வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (14/08/2018)
*குரு வணக்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*“புருவத்திடை உந்தன் பூவிரலால் தொட்டு எந்தன்* *உயிருணர்த்திபுன் செயல்கள் பதிவழிந்து*
*பூர்வநிலை* *அறிவறியத்* *துரியம் காட்டி கருவறிந்து* *அகத்தவத்தால்*
*களங்கங்கள்* *போக* *பெருங்களத்தமர்த்தி*
*கருத்துடனே* *விளைவறிந்து*
*ஐந்து* *புலனையாளும்* *கலை* *போதித்து*
*உருவத்தில்* *உயிரை* *உயிர்க்குள்*
*உள்ள* *மெய்ப்பொருளை* *அறிவாய்க்காட்டி*
*ஒழுக்கத்தால்* *உலகினையே*
*நட்புக் கொள்ளும்* *அன்புநெறி விளங்கவைத்து*
*திருத்தமொடு காயகற்பம்*
*சீர் கர்ம யோகம் உடற்பயிற்சி தந்து*
*சிந்தனையை உடல் நலத்தை*
*சீரமைத்து உய்வித்த குருவே வாழ்க!”*
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*நமது ஆசான் அருட்தந்தை அவர்களின் 108 வது ஜெயந்தி இன்று.*
இன்றைய நாளில் அவர்கள் நமக்கு அளித்த வாழ்க்கை நெறிகளை ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகிறோமா? என்பது அவரவருக்கேத் தெரியும்.
சொற்களில் இனிமையும், செயலில் அன்பும், பிறருக்கு உதவும் எண்ணமும், பண்பும், ஒருவர் நேர்மறையாக சிந்திக்கும் திறனும் பெற்றிருந்தால் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கியே பயணிக்கும்.
ஆசானின் கரங்களை பற்றிக் கொள்வதன் மூலம் அவரே நம் அனைவரையும் வழிநடத்திச் செல்வார்கள்.
நம்பிக்கையும், குருவின் மீதுள்ள மதிப்பும் ஒருவரை, தன்னை மேம்படுத்த உதவும்.
அவர்கள் மீதுள்ள மதிப்பு, நம்மை, அவரின் உலக அமைதிக்கான கனவு நனவாகும் பாதையின் அருகே கொண்டு போய் விடும்.
கனவு நனவாக ஒவ்வொரு மனவளக்கலைஞரின் ஒருமித்த எண்ணம் மற்றும் மனவளக்கலைஞரிடையே ஒற்றுமையும், நல்லிணக்கமும், தேவை.
ஒவ்வொரு மனவளக்கலைஞரின் மகரிஷியின் காந்தத் தத்துவப் புரிதல், உலக சமாதானத்தை நமதருகேக் கொண்டு வரும்.
நம்மருகேயே அனைத்தும் உள்ளது.
ஒற்றுமையும் புரிதலும் மட்டுமே அவசியம்.
நம்மிடையே ஒற்றுமை, உலக ஒற்றுமைக்கு சுலபமாக வழி வகுக்கும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment