*தினம் ஒரு முத்திரை*
*சூரிய முத்திரை*
உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை.உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்திற்கு துணை புரிந்து உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சப்பளங்கால் இட்டு 5 - 10 நிமிடங்கள்வரை செய்தால் போதும். தினமும் இருவேளை வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும். முத்திரையை செய்யும் முன் அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு, நீர்கடுப்பு, வாய்புண், வெள்ளைபடுதல், கண்சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கலாம்.
*செய்முறை :*
மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொடவேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
*பலன்கள் :*
உடலின் வெப்ப நிலையை அதிகரித்து பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். உடலில் அதிக கொழுப்பு உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும். ஹைப்போதைராய்டு உள்ளவர்கள் ஒரு வேலை மட்டும் 20 நிமிடங்கள் செய்யலாம்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment