*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(07/05/2019)*
*ஆக்கினை சக்கரம்*
ஆறாவது சக்கரமாக உள்ளது இச்சக்கரம்.
நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
மூலாதாரம் முதல் விசுத்தி வரையிலான ஐந்து சக்கரங்களும் இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆறாவது சக்கரமான ஆக்கினையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு நாடிகளின் வழியாக ஆக்கினை சக்கரம் பிற ஐந்து சக்கரங்களையும் ஆளுகிறது. எனவே ஆக்கினைக்கு ஆளுமைச் சக்கரம் (Commanding Chakra) என்ற பெயரும் உண்டு.
'ஆக்கினை’ என்றால் கட்டளை அல்லது ஆணை என்பது பொருள்.
இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக மட்டுமின்றி பீனியல், பிட்யூட்டரி போன்ற நாளமில்லா சுரப்பிகளின் வழியாகவும் ஆக்கினை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை அல்லது ஆட்சி செலுத்துகிறது.
ஆன்மிக உணர்வுக்கு திருப்புமுனை. உள்ளொளி பூரித்து உயிருக்கு மேல்நோக்கு வேகத்தைத் தருகிறது.
பொருள் கவர்ச்சி நீங்குகிறது. தன்னிலை விளக்கம் கிடைக்கிறது. விரும்பிய நல்வழியில் நிற்கும் திறன் கிடைக்கிறது. ஆசை அளவோடு நிற்கும். விளைவறிந்த விழிப்புநிலை கிடைக்கிறது.
ஐம்புலன்களில் விரிந்த மனம் சுருங்கி ஒரே புலனாக தொடு உணர்வில் நிலைக்கிறது. ஆகாம்ய வினைகளில் இருந்து விடுபடுகிறது.
இதில் பழகப் பழக மனம் ஆல்பா நிலையில் விநாடிக்கு 8-13 சுழல்விரைவு வந்து அமைதி நிலைக்கு வருகிறது.
தேவை, பழக்கம் சூழ்நிலைக்கு அறிவு மயங்குவதில்லை.
உடல், மனம் ஆக்கினை சக்கரம் தூய்மைப்படுத்திவிடும். மனதிலுள்ள அழுக்குகள் அனைத்தும் மறைந்துபோகும்.
சிந்தனைகளும் எண்ணங்களும் சீரடையும். மனம் பண்படும். எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை குணங்களும் அறவே மறைந்துபோகும்.
இதை Pituitary gland என்று கூறுவார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் மூளையின் கீழ்புறத்தில் ஜெர்சி பழம் போலத் தொங்கும். மூளைக்கு அடுத்து இது தான் உடலிலே பல சிக்கலான வேலைகளை செய்யும் உறுப்பு. இதை தலைமை சுரப்பி ( Master Gland) என்றும் நாளமில்லா சுரப்பி நடத்துநர் 'Conductor of Duckless Glands' என்று கூறுவார்கள். இது தனது கட்டளையை ஹைப்போதலாமஸிலிருந்து ( Hypothalamus) நேரடியாகப் பெறுகிறது. நாளமில்லா சுரப்பிகளுக்கு கட்டளை விடுப்பது இது தான். சமநிலையை உருவாக்கும் ஒரு சுரப்பியாகும். மற்ற நாளமில்லா சுரப்பிகள் சரிவர இயங்காத போது இதன் செயல்முறை அதிகமாகி மற்ற சுரப்பிகளின் இயக்கத்தைச் சமன்படுத்தும்.
இது இரண்டு இதழ்களினால் (Lobes) பிரிக்கப்பட்டுள்ளது. இது சுரக்கும் ஹார்மோன் கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பியை பராமரிக்கிறது. மற்றொரு ஹார்மோன் சிறுநீரகத்தைப் பராமரித்து வருகிறது. இந்த சுரப்பி சீராக சுரப்பதால் ஒழுக்க மேம்பாட்டை குழந்தைகளிடம் காணமுடியும்.
உயர்நிலைச் சக்கரங்களான ஆக்கினை, சகஸ்ராரம் ஆகிய இரண்டும் பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்டவை.
முதல் ஐந்து சக்கரங்களை தத்துவச் சக்கரங்கள் எனவும்; கடைசி இரு சக்கரங்களை ஆன்மிக சக்கரங்கள் எனவும் கூறுவதுண்டு.
வானவில்லின் ஆறாவது வண்ணமான “இண்டிகோ’ என்ற வண்ணமே ஆக்கினை சக்கரத்தின் வண்ணமாகும். வயலெட், நீலம் ஆகிய இரு வண்ணங்களுக்கும் இடைப்பட்ட, அந்த இருவண்ணங்களும் கலந்த ஒரு வண்ணமே “இண்டிகோ’ என்றழைக்கப்படுகிறது.
பீஜா மந்திரம்
“அம்’ (ஆன்ம்) என்பதே ஆக்கினை சக்கரத்தின் பீஜா மந்திரமாகும்.
குண்டலினி சக்தி ஆக்கினை சக்கரத்தினுள் நுழைந்து அதைத் திறக்கும்போது எல்லாம் ஒன்றுதான் என்ற பரிபூரண நிலை உருவாகிவிடும்.
நமது மூளை செயல்பட பிராணன் அவசியம். ஆனால் “மனம்’ செயல்பட பிராண சக்தியோடு மனசக்தியும் தேவை. இந்த மனசக்தியை ஆளும் சக்கரமே ஆக்கினை சக்கரமாகும்.
அன்புடன் ஜே.கே