*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(13/05/2019)*
மனதின் ஒரு ஓரத்தில்.. எதையோ.. யாரோ ஒருவரைப் பற்றிய கணிப்பில் மனதை வைத்துக் கொண்டு, அதை சிறிது சிறிதாக கற்பனைக் கோட்டையில் பெரிதாக்கி... சிறு விஷயங்களைக் கூடப் பெரிதாக்குவதும், பெரிய விஷயங்களை சிறியதாக நினைப்பதும் மனிதர்களுக்குப் பழகி விட்டது. அந்தக் கணிப்பு , தனக்கும் பிறருக்கும் துன்பம் ஏற்படாத வகையில் இன்பம் தான .... ஆனால், துன்பம் ஏற்படும் போது தானே சிக்கலே ஆரம்பமாகிறது.
எதற்காக.. ஒரு விஷயத்தை நினைத்து நினைத்து... தன்னைத் தானே துயரப் படுத்திக் கொள்ள வேண்டும்.. அல்லது துன்பப் பட வேண்டும்?
எந்த ஒன்று மனதிற்குப் பொருந்தவில்லையோ, அதைப் பற்றி நினைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ளலாமே! வேறு பிடித்த விஷயத்தில் கவனத்தை திருப்பிக் கொள்ளும் ஆறறிவு அனைவருக்கும் உள்ளது.
மனதின் வீணான குழப்பங்களால், தெளிவு பெற மனதை அனுமதிக்கலாமே!
யாரைப் பற்றியும், எந்த கணிப்பும் வைக்கவில்லை... என்றாலே கற்பனைகளை தவிர்க்க முடியும். அவங்க இப்படி? இவங்க இப்படியா?? என்ற எண்ணம் எதற்கு??
யாராவது 'தான் எப்படி?' 'என்ன செய்ய வேண்டும்?' 'எதற்கு இந்தப் பிறப்பு ?'என்று சிந்தனையில் ஆராய்ந்தால் ஒருவருக்கொருவர் உறவுகள் ஏன் ஏற்படுத்தப்பட்டன என்று புரிந்துகொண்டு கருமையத் தூய்மை பெற முயற்சிப்பார்கள். எதைப் பற்றியும் கவலையின்றி இருக்கவும் இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையில் நினைக்கப் பழக முன் வருவார்கள்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment