Sunday, 12 May 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(29/04/2019)*

தனது மகிழ்ச்சி என்பது எப்பொழுதுமே.. தன்னை மகிழ்ச்சியாக வைப்பதில் தான் உள்ளது. அது என்றுமே பிறரை சார்ந்தது அல்ல.

தனது சூழ்நிலையை.. சாதகமாக்குவதும், பாதகமாக்குவதும், அவரவர் கையில் தான் உள்ளதேத் தவிர.. என்றுமே பிறர் இதற்கு காரணகர்த்தாவாக இருக்கவே முடியாது.. அவரவர் வினைப்பயனை தான்.. அவரவர் அனுபவிக்கின்றனர். அது இன்பமோ துன்பமோ எதுவாகிலும் அவரை சார்ந்ததே.. இதையே *தீதும் நன்றும் பிறர் தர வாரா!*  என்கின்றனர்.

*எதை விதைக்கிறாரோ அதையே அறுவடை செய்கின்றனர்.*

ஆனால் இன்றைய சூழ்நிலை... எல்லாவற்றிற்கும் பிறரை சாக்கிட்டே,... பிறரை காரணம் காட்டியே... மக்கள் பழக்கி விட்டார்கள் தங்கள் மனதை.

ஒரு குழந்தைக்கு தரையில் அடிபட்டது என்றால் தரையை அடித்து பழி சொல்லி பழக்குவது.. பெரியவர்கள் கண்டித்தால் அவர்களிடம் எதிர்த்து பேச பழக்குவதும்.. இதே தான் பெரியவர்களானதும் ஆபீசுக்கு லேட் ஆகி விட்டால் கூட Traffic ஐ தான் காரணம் காட்டுவது.. வண்டி பங்சர்.. அல்லது பிறவற்றை... பிறரை சாக்கிட்டே ..பழகிவிட்டனர் மக்கள்.

இந்த பழக்கத்தை எல்லாம்....  ஒருவர் தன்னை மாற்றிக் கொண்டால் மட்டுமே, தன்னை காரணம் காட்டுவதற்கும், தன்னை சாக்கிடுவதற்கும் தைரியம் வரும். எதுவென்றாலும் தன்னை சார்ந்ததே அனைத்தும் என்று நினைக்கப் பழக்கினால்.. பிறரை காரணம் காட்ட துணிய மாட்டார்கள். தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சிந்தித்து செயல்படுவார்கள்.

தன் நினைப்பை, செயலை, ஒருவர்  மாற்றாமல், எந்த மாற்றமும் உலகில் எதிர்நோக்குவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம். ஆனால் அதை எளிமையாக மாற்றினால் எல்லாமே சூழ்நிலையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் தைரியம், மனதிற்குப் புது தைரியமும், தன்னம்பிக்கையும் வருவதை உணர முடியும். உண்மையை உணர இதுவே வழி. தன்னை அறியும் மார்க்கமும் இதுவே.

அன்புடன் ஜே.கே

No comments: