Friday, 17 May 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(16/05/2019)*

எப்பொழுதும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். யாராவது ஒருவரை விமர்சிக்கிறார்/ கிண்டல் செய்கிறார்..  என்றால் கேலி செய்பவரை விட  ஒரு படி மேல்நிலையில் அந்த ஒருவர் இருக்கிறார் என்று பொருள்..

என்றுமே கிண்டல், கேலியை  நினைத்து ஒரு போதும் தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடாது.. தயங்கக் கூடாது. தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ள வேண்டும். பிறர் கேலியையும் பொருட்படுத்தக் கூடாது.

தனது முன்னேற்றப் பாதை தனது கையில், தனது உழைப்பில், தனது தன்னம்பிக்கையில்.. தான் உள்ளது.. பிறரது கையில் இல்லை.. தனது வயிற்றை 'தான்' தான் பசியாற்ற வேண்டும்.. தன் கையால் தான் உட்கொள்ள வேண்டும். அனைத்தும் அவரவர் கையில் தான் உள்ளது.. வாழ்க்கையின் இலக்கை எதிர்வரும்  ஒவ்வொரு சவால்களையும் மனோதிடத்துடன் வெற்றிகொள்ள தைரியத்தை கையில் அல்ல.. மனதில் ஏந்திக் கொள்ள வேண்டும். அதற்கு தவம் துணைபுரியும்.

மனதில் உண்மை இருந்தால் பலம் தானாக வரும். பயம் காணாமல் போய்விடும். மனோ சக்தியை அதிகரிக்க தன்னைத் தானே இயற்கையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை தான் அனைத்தும். இயற்கை வேறு நாம் வேறு அல்ல. நாம் தான் இயற்கை. அனைத்தும் இயற்கையே.. இயற்கையோடு வாழும் வாழ்க்கையே ஒருவரை உயர்த்தும்.

அன்புடன் ஜே.கே

No comments: