Sunday, 12 May 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(10/05/2019)*

இந்த வாழ்க்கை ஒரு மனிதனுக்கு அளிக்கப்பட்டிருப்பது, மனிதன் மேல் இறைநிலைக்கு உள்ள நம்பிக்கையும்.., மற்றும் மனிதன் 'தன்' மேல் கொண்ட தன்னம்பிக்கையும் தான் காரணம்.

ஒற்றுமையே பலம். அதை வளர்க்க வளர்க்க அமைதியும்,  மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்க்கையில் அதில் சமாளிக்கத் தெரிந்து வாழ்பவன் தான் சாதனை மனிதன்.

ஏற்ற இறக்கம் கண்டு பயத்தில் தோல்வியடையாமல் நேருக்கு நேர் சந்தித்து வாழக் கற்றுக் கொள்ள.. தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளவே சில சூழ்நிலைகள் தரம் பிரித்து சவால்களாக வருகிறது. அதை சந்திக்க மனோபலம் முதலில் வேண்டும்.

அதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் வரம் தான் தியானம், தற்சோதனை, திருத்தம், பயிற்சிகள் எல்லாமே.. ஒருவர் தன்னிடம் திருத்தம் காணாமல் எந்த மாற்றத்தையும் உலகில் கொண்டு வர இயலாது.

மாற்றம் என்பது தன்னிடமிருந்து மட்டுமே பிறக்க முடியும். அப்படி தனது திருத்தம் மேற்கொண்டால் சிறு துளி பெரு வெள்ளம் போல் அந்த திருத்தம் மனிதர்களிடையே மனமாற்றத்தை அளிக்கும்.

இத்தனை நாள் சண்டை போட்டவங்க இன்னிக்கு அமைதியாயிட்டாங்களே... உலகம் மனிதனை பார்த்து வியக்கும் அளவு ஒரு உத்வேகத்தை பரப்ப வேண்டும்.

அதற்கு தனி மனித ஒழுக்கம் நிறைந்த பண்பாடு மட்டுமே மக்களிடையே சீர்திருத்தம் கொண்டு வரும். பேசிக் கொண்டே இருப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதை உணர்வது... புரிந்து கொள்ள வேண்டும். அமைதிக்கான செயலில் இறங்கினால் மட்டுமே மேம்பாடு காண முடியும்.

அன்புடன் ஜே.கே

No comments: