*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(30/04/2019)*
( குறிப்பு: குண்டலினி யோகம் குருவின் உதவியோடு மட்டுமே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.)
*விசுக்தி ( Thyroid gland and para thyroid gland)* ( விஷம் + சுத்தி). நம் உடலில் இருக்கும் நச்சை முறித்து சுத்தப்படுத்துகிறது இந்த சக்கரம். இதன் மந்திரம் 'ஹம்'' என்பதாகும்.
விசுக்தி ஐந்தாவது மையமாகும். இந்த சக்கரம் பஞ்சபூதங்களில் ஆகாசத்திற்குரிய மையம். இது தொண்டையில் இருக்கிறது. இத்தவம் மூலம் தைராய்டு, பாராதைராய்டு சுரப்பிகள் நன்கு செயலூக்கம் பெறுகின்றன.
இந்த தைராய்டு சுரப்பி நமது உடலின் ஆற்றல் நிலையம் (Power house) என்று குறிப்பிடலாம். உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்தை பாதுகாக்கிறது ( Metabolism). சுவாச இயக்கத்துடன் தொடர்புடையது. உடலுக்குத் தேவையான அயோடின் சக்தியை 2/3 பங்கு இச்சுரப்பியில் சுரக்கும் இரண்டு ஹார்மோன்கள் மூலமாக கிடைத்து விடுகிறது. ஹைப்போதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி இணைந்து இந்த ஹார்மோன்கள் சுரப்பதை ஒழுங்குபடுத்துகிறது.
இதிலிருந்து சுரக்கும் கால்சிடோனின் என்ற ஹார்மோன் எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்தை கொடுத்து விடுகிறது. இதனுடன் இணைந்து செயல்படும் பாரா தைராய்டு எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தை இரத்தத்திற்கு அனுப்பிவிடும். எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தை அளவிற்கு அதிகமாகக் குறைத்து விடாமல் இந்த Calcitonin சமன் செய்து கொண்டே இருக்கும். நம் உடலுக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு நாளமில்லா சுரப்பியும் நம் உடலில் இயங்கக் கூடிய இயற்கை மருத்துவர் என்பதை அனைவருமே இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தவத்தில் மூலம் உணவு உட்கொள்ளும் திறன் இயல்பாக கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆற்றல் இருந்துகொண்டே இருக்கும்.
விண்ணை பற்றிய தெளிவான அறிவு கிடைக்கிறது.
விண் தான் உயிர்த்துகள்களாக மனித உடலில் உயிரோட்டமாக உயிராற்றலாக மாறிக் கொண்டு இருக்கிறது. உடல்நலம் சீராகிறது. மனம் உற்சாகமாக ஆற்றல் மிக்கதாக இருக்கிறது.
பிரபஞ்ச இயக்க ரகசியங்கள் மனத்திற்கு எளிதாகப் புலப்படும். பேராதார அறிவோடு ( Universal consciouness) மனத்திற்கு தொடர்பு கிடைக்கிறது.
அறிவுக்கு நுண்ணியக்கம் ( Subtle frequency) கிடைப்பதால் உயிராற்றல் செலவை மிச்சப்படுத்துகிறது. சேமிக்கிறது. மனநிறைவு, பெருந்தன்மை, மனவிரிவு, சகிப்புத்தன்மை இத்தவத்தில் கைகூடுகிறது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment