Friday, 31 December 2021

முத்திரையும் அதன் பலன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்கும் சுவாசகோச முத்திரை!!*

மூச்சுத்திணறல், இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது.
 எப்படி செய்வது..?
 
பெருவிரலில் அடி ரேகை, நடு ரேகை மற்றும் நுனியை கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரல்லின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். ஆள்காட்டி விரல் மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.
 
இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை  செய்ய வேண்டும்.

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச சம்பந்தமான நோய்கள் குறைபாடுகள், நீங்கி சுவாச இயக்கம் நன்கு நடைபெறும். நுரை  ஈரல்கள் தூய்மையாகி வலுப்பெறும். ஆஸ்துமா போன்ற நோய்கள் சில வாரங்களில் கட்டுக்குள் வரும். உடலின் வாதத்தன்மையின்  சமநிலையை காக்கும். மனவலிமை மனோதிடம் உண்டாகும்.

*பயன்கள்:*
 
மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்க ஆகியவை குறையும்.
 
ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.
 
இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும்.
 
இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன்  காக்க இந்த முத்திரை உதவும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Thursday, 30 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வரத முத்திரை*

*செய்முறை*

இடது கை இடது தொடைமேல் உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைக்க வேண்டும். வலது கைவிரல்கள் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.ஒரே சீரான சுவாசம் இருக்க வேண்டும்.

*கால அளவு*

தினம் 15 – 45 நிமிடங்கள்

*பலன்கள்*

மனத்தெளிவு உண்டாகி விருப்பங்கள் நிறைவேறும்..      தீய குணங்கள் , கோபம் மாறும்.

ஆன்மீகத்தில் அபயம் வரதம் சரணம் மூன்றும் முக்கியமானது.   அஞ்சாதே நானிருக்கிறேன் என்பது அபயம் .                                         
கேட்பதை கொடுப்பது வரதம்.                                                     என்னைச் சரணடை காப்பாற்றுகிறேன் என்பது சரணம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Tuesday, 28 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*கழிவு நீக்க முத்திரை*
-------------------------------

பெரு விரல் நுனியால் மோதிர விரலின் அடிப்பாகத்தை மெதுவாக அழுத்தி பிடிக்கவேண்டும். இதுவே கழிவு நீக்க முத்திரையாகும்.

 உடலில் தங்கியுள்ள நச்சுக்கழிவுகளாலேயே உடலில் பெரும்பாலும் நோய்கள் வருகின்றன. எனவே நச்சுகழிவுகளை முதலில் உடலிலிருந்து நீக்கிவிட்டு மற்ற முத்திரைகளை பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறைகளில் கூட முதலில் நச்சு கழிவு நீக்கத்திற்கே மருந்து கொடுப்பார்கள். பிறகுதான் நோய்க்குரிய மருந்து கொடுப்பார்கள்.அது போல் முத்திரை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் முதலில் 10 நாட்கள் வரை கழிவு நீக்க முத்திரையை மட்டுமே செய்யவேண்டும். 

இந்த முத்திரையை செய்ய தொடங்கிய ஓரிரு தினங்களில் தாங்க முடியாத நாற்றத்துடன் மலம் மற்றும் சிறு நீர் வெளியேறும். அடிக்கடி சிறு நீர், மலம் கழிக்கத்தோன்றும். உடல் சுத்தமாகத்தொடங்கிவிட்டால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களால் புகை பிடிக்க முடியாது, முயற்சித்தால் வாந்தி வரும். மது அருந்துபவர்களால் மது அருந்த முடியாது. இவையெல்லாம் உடல் சுத்தமாகிக்கொண்டிருப்பதின் அறிகுறிகள். இந்த முத்திரையை 30 முதல் 45 நிமிடங்கள் வரை தொடர்ந்து 10 நாட்கள் செய்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எல்லாம் நீங்கி சுத்தமாகிவிடும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Friday, 24 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*பங்கஜ முத்திரை*

இந்த முத்திரை செய்து வந்தால் மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.
பத்மாசனம் முறையில் அமர்ந்து இந்த பங்கஜ முத்திரை செய்யும் போது உடனடி பலன் கொடுக்கும். இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.

*செய்முறை :*

விரிப்பில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).
ஆரம்பத்தில் இதனை 16 நிமிடங்கள் செய்ய வேண்டும். நன்கு பழகிய பிறகு 48 நிமிடங்கள் வரை செய்யலாம். பங்கஜ முத்திரை நீண்ட நேரம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் உடலில் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

*பலன்கள் :*

பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.

மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல
அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.

மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும். வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.

நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும். இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Thursday, 23 December 2021

நலம் தரும் முத்திரை

*தினம் ஒரு முத்திரை*

*மகர முத்திரை*

*சிறு நீரகத்தினை வலுப்படுத்தும் மகர முத்திரை*

உள் உறுப்புகள், பலமாக இருந்தால் தான், அதன் வழியாக செல்லும் குண்டலினி சக்தி ஆதார சக்கரங்களை கடந்து செல்லும். சிறு நீரகத்தினை பலமாக்க வல்லது மகர முத்திரை. மகர முத்திரை "மகரம்" என்றால் "முதலை "என்று பொருள். எவ்வாறு முதலையானது மிக்க சக்தியோடு இருக்கிறதோ அவ்வாறு சாதகனையும் சக்திமிக்கவனாக்குவது இம்முத்திரை. இது, அமைதி, திருப்தி, சந்தோஷம் போன்றவற்றையும், தன்னம்பிக்கையையும் தரவல்லது.

இடது கை மோதிர விரலை மடக்கி கட்டை விரலோடு சேர்த்து, மற்றவற்றை நேராக நீட்டிய படி வைக்கவும்.வலது கை கட்டை விரல் இடக் கை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டும், மற்ற விரல்கள் பின்புறமாக இடது கையை பற்றிய படியும் இருக்க வேண்டும். இவ்வாறு இந்த முத்திரையில் 15 நிமிடம் இருக்க வேண்டும்.

*பயன்கள் :*

 உள் உறுப்புகள், பலமாக இருந்தால் தான், அதன் வழியாக செல்லும் குண்டலினி சக்தி ஆதார சக்கரங்களை கடந்து செல்லும். சிறு நீரகத்தினை பலமாக்க வல்லது மகர முத்திரை.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Wednesday, 22 December 2021

முத்திரையும் அதன் பலன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*வருண முத்திரை*

*செய்முறை:*

முதலில் விரிப்பு விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.

கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும்

பின் சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றை ஒன்று அழுத்துமாறு வைக்கவும்.

மற்ற மூன்று விரல்கள் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.

மூன்று விரல்களுக்கிடையே இடைவெளி இருக்க கூடாது.

இரு கைகளிலும் செய்யவும்.

பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யவும்.

*பலன்கள்:*

நீரிழிவு நீங்கும்.

உடலில் சூடு சமமாகும்.

தோல் பளபளப்பாகும்.

சதை பிடிப்பு நீங்கும்.

முக பருக்கள் வராது.

மனதில் அமைதி ஏற்படும்.

கணையம் மிக சிறப்பாக இயங்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Tuesday, 21 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*திரிசூல முத்திரை*

இரண்டு கைகளிலும் சுண்டுவிரலை மடக்கி
அதன் மேல் கட்டை விரலால் அழுத்தி வைக்கவும்,
மற்ற விரல்களை நீட்டி வைக்கவும்.

*பயன்கள்:*

முகம் கை கால்களில் வீக்கம் சரியாகும்.
மூக்கில் நீர் வடிதல் சரியாகும்.
வயிற்றுப்புண் சரியாகும்.
சிறுநீரக பிரச்சினைகள் சரியாக உதவிகரமாக இருக்கும்.

இந்த முத்திரையை 20 முதல் 30 நிமிடம் வரை சுகாசனத்திலோ
( சம்மணம்) பத்மாசனத்திலோ செய்யலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Monday, 20 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*மனதை அமைதிப்படுத்தும் சுரபி முத்திரை*

மனதை அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும். சுரபி முத்திரையை சற்று கவனமாகச் செய்ய வேண்டும்.

சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.

*செய்முறை :*

விரிப்பின் மீது சப்பணம் இட்டுதரையில் அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.

ஸ்டெப் 1:  நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2:  இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.

ஸ்டெப் 3:  இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

*பலன்கள் :*

வாதநோய் குணமாகும். அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.

தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.

செரிமான புண்கள் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.

சிந்தனை, படைப்பாற்றல் திறன்கள் மேம்படுகின்றன.

மனஅமைதி, புத்துணர்ச்சி கிடைக்கிறது.

மனதை அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Sunday, 19 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் ருத்ர முத்திரை*

வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு உள்ளவர்கள், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்து வரலாம். இந்த ருத்ர முத்திரை செய்வது எப்படி?

 அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

*ருத்ர முத்திரை செய்முறை*

நாற்காலியில் அல்லது தரை விரிப்பின் மீது நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். படத்தில் உள்ளபடி கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரலின் நுனி பகுதியை தொடும் படி வைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டியபடி இருக்க வேண்டும். இதனை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

*ருத்ர முத்திரை பலன்கள்*

இந்த முத்திரை செய்வதால்நி தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

 நினைவாற்றல் அதிகரிக்கும். படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த முத்திரை பயன்படும்.

ரத்த அழுத்தப் பிரச்சனை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

பார்வைத்திறனை அதிகரிக்கும்.

 மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Saturday, 18 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*மன அமைதி தரும் அஞ்சலி முத்திரை*

அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.

விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடின இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக மூச்சை கவனிக்கவும்.

இப்பொழுது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையன்று தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியில் தொடுமாறு வைக்கவும். இரண்டு கைகளும் இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். நமது வலது கைவிரல்கள் இடது கை விரல்களைத் தொட்டுத் கொண்டிருக்கவும். தலையைச் சிறிது தாழ்த்தவும். கண்களை மூடியபடி இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இதுபோல் காலை மாலை மூன்று முறைகள் செய்யலாம்.

மனித உடலில் நேர்சக்தி எதிர்சக்தி இரண்டும் உள்ளது. நமது வலது கை நேர் சக்தி, இடது கை எதிர்சக்தி. நம் இரு கைகளும் அஞ்சலி முத்திரையில் இணையும் பொழுது சக்தி ஓட்டம் சிறப்பாக ஏற்பட்டு நிறைவு பெறுகின்றது. இதன் காரணமாக உடலில் பிராண சக்தி சரியாக, நிலையாக இருக்கும்.

மூளைக்கு எப்பொழுதும் ஓய்வு கொடுக்காமல் சிந்தனை செய்து கொண்டே இருந்தால் மூளை சூடேறும். அஞ்சலி முத்திரையில் மூளைக்கு ஓய்வு கிடைக்கின்றது. மூளை அமைதியாகின்றது. மீண்டும் சக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.

மன அழுத்தத்தினால் இன்று பல வகையான வியாதிகள் வருகின்றது. குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமே. இந்த அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

Friday, 17 December 2021

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*அனைத்து சுவாச பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவும் ஆதி முத்திரை !!*
*செய்முறை:*

கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்:*

நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.

*வாழ்க வளமுடன்*
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சந்தி முத்திரை*

வயதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
 
*சந்தி முத்திரை*

*வலது கை:* மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

*இடது கை:* நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்:*

 முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

சந்தி முத்திரை செய்தால், மூட்டுகளில் ஈரப்பசை உருவாகி, மூட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் தடுக்கும். அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள், நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்கள் போன்றோர், சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும். இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.

*தினம் ஒரு முத்திரை*

*சந்தி முத்திரை*

வயதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
 
*சந்தி முத்திரை*

*வலது கை:* மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

*இடது கை:* நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்:*

 முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*முதுகுத்தண்டு முத்திரை*

*வலது கை:* நடு விரல், சுண்டு விரல், கட்டைன விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும்.

*இடது கை:*
 ஆள்காட்டி விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
மூன்று வேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

*பலன்கள்:*

 முதுகுவலி தேய்மானம், சயாட்டிக்கா எனும் முதுகு வலி, டிஸ்க் புரொலாப்ஸ், முதுகில் இருந்து பின்னங்கால் வழியாகப் பாதம் வரை வரும் வலி, இடுப்பின் ஏற்படும் இறுக்கம் சரியாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*இரத்த பித்த சமன் முத்திரை*

நடுவிரல்,தொட்டிருக்க மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும், 10 நிமிடங்கள் செய்தாலே போதும்.

*பலன்கள் :*

ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கும்போது, தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும்போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப் படபடப்பு, அதிகமாக பி.பி உயர்ந்துவிட்டது என உணரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையைப் பிடிக்கலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சுமன முத்திரை*

*சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் முத்திரை*

இந்த முத்திரை இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். செய்முறை

நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

*பலன்கள்*

இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை நீக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது. செரிமானம் நன்றாக இயங்கும். தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் 

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*உடல் வலியை தீர்க்கும் சமான முத்திரை*

உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.நம் உடலில் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலை அடைவதால் உடலுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கிறது.  

*செய்முறை  :*

விரிப்பில் அமர்ந்து கொண்டு அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும்.

*கட்டளைகள்:*

 சப்பளம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்யவேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது. முத்திரை செய்யும்போது உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கவேண்டும்.  ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்யவேண்டும்.

*பலன்கள்:*

 உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது. அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக மூளை சுறுசுறுப்படையும். பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர தெம்பு கிடைக்கும். உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.

தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும். கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து சுறுசுறுப்பாகத் தயாராக முடுயும். தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால் ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும். எந்த முத்திரை நமக்கு சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள் சமான முத்திரையை  மட்டும் செய்தாலே போதும். நல்ல தீர்வு கிடைக்கும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*நில முத்திரை*

நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது.

*செய்யும் முறை :*

மோதிர விரல் நுனியும், கட்டை விரல் நுனியும் சேரும் போது நிலமுத்திரை உண்டாகிறது. கட்டை விரல் நெருப்பை குறிக்கும். மோதிரவிரல் ‘மண்’ மூலம் பொருளைக் குறிக்கிறது. இதில் மண்ணின் சக்தி அதிகமாகி நெருப்பின் சக்தி குறைகிறது.

மண்ணின் சக்தி அதிகமாகும் போது நமது எலும்புகள் கார்டியாலஜ், தோல், தலைமுடி, நகம், தசைகள், உள் உறுப்புகள் அனைத்தின் சக்தியும் அதிகரிக்கிறது.

உடலின் சக்தியும் அதிகரிக்கிறது. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

உடல் பலவீனமாக உள்ளவர்கள் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் இம்முத்திரையைத் தொடர்ந்து ஒரு நாளில் 30 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

எலும்புகளின் அடர்த்திக் குறைவை நீக்கும். எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடங்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக் குறைக்கிறது.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பலன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சூரிய முத்திரை*

உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை.உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்திற்கு துணை புரிந்து உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

சப்பளங்கால் இட்டு 5 - 10 நிமிடங்கள்வரை செய்தால் போதும். தினமும் இருவேளை வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும். முத்திரையை செய்யும் முன் அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும். 

நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு, நீர்கடுப்பு, வாய்புண், வெள்ளைபடுதல், கண்சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கலாம். 

*செய்முறை :* 

மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொடவேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

*பலன்கள் :*

உடலின் வெப்ப நிலையை அதிகரித்து பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும், சுறுசுறுப்பாகவும்  வைத்திருக்க உதவும். உடலில் அதிக கொழுப்பு உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.  ஹைப்போதைராய்டு உள்ளவர்கள் ஒரு வேலை மட்டும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*சங்கு முத்திரை*

*செய்முறை:*

இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். 

வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும்.  இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

*பலன்கள்:*

தைராய்டு நோய் குணமடைகிறது. திக்கிப் பேசுவது குணமடைகிறது. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது. இந்த  முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது. நல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி  அதிகமாகிறது.

உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது. காய்ச்சல் குணமடைகிறது. அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தசை வலுவடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது. மன அமைதி கிடைக்கிறது. மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது. சங்கு முத்திரையை தொடர்நது செய்து வந்தால் தைராய்டு நோய் குணமடையும். தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும். இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

முத்திரையும் அதன் பயன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*அபான முத்திரை*

உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த  வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள்  வெளியேறும் செயல் துரிதமாகும்.

*அபான முத்திரை செய்முறை :*

கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி  இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

*பலன்கள் :*

வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். மேலும் பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். மூக்கடைப்பு தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி  போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐