Friday, 31 December 2021

முத்திரையும் அதன் பலன்களும்

*தினம் ஒரு முத்திரை*

*ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்கும் சுவாசகோச முத்திரை!!*

மூச்சுத்திணறல், இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது.
 எப்படி செய்வது..?
 
பெருவிரலில் அடி ரேகை, நடு ரேகை மற்றும் நுனியை கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரல்லின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். ஆள்காட்டி விரல் மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.
 
இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை  செய்ய வேண்டும்.

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச சம்பந்தமான நோய்கள் குறைபாடுகள், நீங்கி சுவாச இயக்கம் நன்கு நடைபெறும். நுரை  ஈரல்கள் தூய்மையாகி வலுப்பெறும். ஆஸ்துமா போன்ற நோய்கள் சில வாரங்களில் கட்டுக்குள் வரும். உடலின் வாதத்தன்மையின்  சமநிலையை காக்கும். மனவலிமை மனோதிடம் உண்டாகும்.

*பயன்கள்:*
 
மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்க ஆகியவை குறையும்.
 
ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.
 
இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும்.
 
இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன்  காக்க இந்த முத்திரை உதவும்.

வாழ்க வளமுடன்
💐💐💐💐💐

No comments: