Saturday, 2 December 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் கண் பயிற்சியில் வரும் உஷஸ் முத்திரையின் பயன்கள்

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள்

கண் பயிற்சியில் வரும் உஷஸ் முத்திரையின் பயன்கள்


உஷாஸ் முத்ரா என்பது கைகளை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விரல்களால் பிடித்து, கட்டைவிரல்களை நுனியில் இணைப்பதன் மூலம் அடையப்படுகிறது.

பொருள் மற்றும் விளக்கம்


சமஸ்கிருதத்தில் " உஷாஸ் " என்பது "விடியலைக் குறிக்கிறது மற்றும் "முத்ரா" என்பது "முத்திரை அல்லது சைகை" என்பதைக் குறிக்கிறது. இந்த முத்ரா தியானத்தின் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் மக்கள் புதிய தொடக்கங்கள் மற்றும் நோக்கங்களை அமைக்க முயற்சிக்கும் போது, ​​அதனால் பெயர்.

உஷஸ் முத்திரையின் பலன்கள்


1. மன விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது - உஷாஸ் முத்ரா இரண்டு கைகளையும் சமச்சீராகப் பற்றிக் கொண்டது. இது மூளையின் இடது மற்றும் வலது அரைக்கோளங்களை சமநிலைப்படுத்துகிறது அல்லது ஒத்திசைக்கிறது. இதனால், மனதில் தெளிவை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

2. எண்டோகிரைன் அமைப்பின் நன்மைகள் - உஷாஸ் முத்ரா ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வரம். PCOD மற்றும் தைராய்டு நோயாளிகள் இந்த எளிய கை சைகையை வைத்திருப்பதன் மூலம் பலன்களைப் பெறுகிறார்கள். இது சரியான ஹார்மோன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு நன்மைகளை வழங்குகிறது.

3. ஒழுங்கற்ற மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது - சரியான ஹார்மோன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பராமரிக்க இந்த சைகை நன்மை பயக்கும். எனவே, இது உங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு நிரந்தர தீர்வை வழங்குகிறது.

4. சாக்ரல் சக்ராவைத் தூண்டுகிறது - உஷஸ் முத்ரா சாக்ரல் (ஸ்வாதிஷ்டான) சக்கரத்தைத் திறக்க உதவுகிறது . இது ஒரு நபருக்கு பல்வேறு வடிவங்களில் உதவுகிறது. இது சமூக வாழ்க்கை, பாலியல், படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.

5. ஆற்றல் மட்டத்தை உயர்த்துகிறது - இந்த சைகை வழக்கமாக அதிகாலையில் செய்யப்படுகிறது. ஏனென்றால், இது எதிர்காலத்தை வழிநடத்தும் ஆற்றலை வழங்குகிறது. இது சோம்பலை நீக்கி, தீப்பொறி நிறைந்த ஒரு நாளையும் வாழ்க்கையையும் பெற உற்சாகத்தைத் தருகிறது.

Thursday, 26 October 2023

எளிமுறை உடற்பயிற்சியின் பயன்கள் : தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை : 3, 4, 5.6, 7

  • வெப்ப ஓட்டம் சீராகிறது.

  • பெண்கள் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளான அதிக உதிரப்போக்கு, Irregular periods, மாதவிலக்கு நேரத்தில் வரும் உடல் அயற்சி, வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் தீர்கிறது.

  • ஆண்களுக்கு விந்து அதிகமாக  வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

  • பயணத்தினால் வரும் வாந்தி, ஒவ்வாமை சரியாகிறது.

  • உண்ணும் உணவு சப்த தாதுக்களாக மாறுகிறது.

  • உடல் சூடு சமன்படுகிறது.

  • இதயம் சீரான இயக்கம் பெறுகிறது.

  • காற்று சிற்றறைகளுக்கு பிராணவாயு எடுத்துக்கொள்கிறது.

  • ஆயுட்காலம் நீள்கிறது.

  • உடல் லேசாகிறது.

  • இடகலை, பின்கலை, சுழுமுனை நாடிகள் இயக்கம் பெறுகின்றன.

  • உணர்ச்சி நிலைக் கடந்து உணர்வு நிலைக்கு செல்கிறோம்.

  • காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்கின்றன.

  • தைராய்ட் பிரச்சினை சரியாகிறது.

  • ஐந்தில் அளவுமுறை இயல்பாகிறது.

  • இருதயத்தில் மேல் உள்ள கொழுப்பு நீங்குகிறது.

  • நுரையீரலில் நீர் சேராமல் இருக்கிறது.

  • நுரையீரல் தொற்றுக்கு சிறப்பான பயிற்சி.

  • கண் கருவளையம் நீங்குகிறது.

  • கண்பயிற்சிக்கு உடல் தயாராகிறது.

  • உடல் பருமன் குறைகிறது.

Thursday, 12 October 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் : தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை 1 & 2

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள்

தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை 1 & 2





  • பெண்களுக்கான சிறந்த பயிற்சி. fybroid கட்டிகள், PCOD, PCOS தொந்திரவுகள் தீரும். கட்டிகள் சுருங்க ஆரம்பிக்கும். குழந்தையின்மை பிரச்சினை தீரும்.

  • Bulky Uterus நார்மல் ஆகும்.

  • Irregular Period சரியாகும்.

  • உதரவிதானம், கணையம், பித்தப்பை ஊக்குவிக்கப்படுகிறது.

  • ஆயுள் கூடுகிறது.

  • சர்க்கரை குறைபாடு பிரச்சினை தீர்கிறது.

  • Insulin, glukogen சரியாக சுரக்கும்.

  • ஆண்களுக்கு ஹைட்ரோசல்/ஹெரண்யா வராமல் பாதுகாக்கிறது.

Monday, 9 October 2023

ஆதி முத்திரையின் பயன்கள்

ஆதி முத்திரை 


ஆதி முத்திரை பெயர் விளக்கம்:

பிறந்த குழந்தை தனது இருகை விரல்களையும் மடக்கி கட்டைவிரலை உள்ளே வைத்து இந்த ஆதி முத்திரையில் தூங்குகின்றது.

அதனால் தான் குழந்தையின் உடலில் உயிரோட்டம் சிறப்பாக இயங்குகின்றது. எனவே தான் இதற்கு ஆதி முத்திரை என்ற பெயர் வந்தது. குழந்தை வளர வளர நித்திரை அதிகமாகி ஆதி முத்திரையை மறந்துவிட்டது. நாம் சிறு குழந்தையின் கைவிரல்களை ஒவ்வொன்றாக எடுத்து விட்டாலும் மீண்டும் தனது விரல்களை மடக்கி ஆதி முத்திரைக்கு தானாக சென்று விடும்.


ஆதி முத்திரையின் பலன்கள்:


  1. உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும்.

  2. உயிர் சக்தி பாதுகாக்கப் படுகின்றது.

  3. உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.

  4. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

  5. மன ஒருமைப்பாடு கிடைக்கும்.

  6. சுறுசுறுப்பாக உற்சாகமாக திகழலாம்.

  7. நல்ல எண்ணங்கள் உதயமாகும்.

  8. தீய எண்ணங்கள் விலகும்.

  9. எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

  10. படிக்கின்ற மாணவர்கள் படிக்கும் பொழுது உடல் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் மீண்டும் சோர்வு நீங்கும். உற்சாகமாக படிக்கலாம்.

  11. உடலில் விந்து சக்தியை தவறாக அதிகம் விரயம் செய்தவர்கள், அதனால் ஆண்மை குறைவு, வீர்ய தன்மை இழந்தவர்கள் மேற்குறிப்பிட்ட ஆதி முத்திரை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.

Thursday, 5 October 2023

எளியமுறை உடற்பயிற்சி - சின் முத்திரையின் பயன்கள்

எளியமுறை உடற்பயிற்சி


தசைநார் மூச்சுப் பயிற்சி : நிலை - 1


தசைநார் மூச்சுப் பயிற்சியில் முதல் இரு நிலைகளில் வரும் முத்திரைகளின் பலன்கள் பார்ப்போம்.



சின் முத்திரை ஞான முத்திரை

கட்டை விரலின் நுனியின் மேல் ஆள்காட்டி விரலை வைப்பது சின் முத்திரை எனப்படும் . முனிவர்கள் ஞானிகள் அனைவரும் கைகளில் வைத்திருப்பது இந்த ”சின் முத்திரை” தான் . இதை ஞான முத்திரை என்றும் , தியானம் செய்யும்போது உபயோகிப்பதால் தியான முத்திரை என்றும் அறிவை தூன்டுவதால் அறிவுமுத்திரை என்றும் கூறுவர் .

கட்டை விரல் நெருப்பைக் குறிக்கும் . ஆள்காட்டி விரல் வாயுவைக் குறிக்கும் . இந்த முத்திரையில் காற்றின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் இருப்பதால் சக்தி குறைவான சிறிய அளவிலான நெருப்பு அணைந்து விடுகிறது  எனவே ஒருநிலைப்பட்ட மனம் அமைகிறது .

சின்முத்திரையின் பயன்கள் :-    

  • நினைவாற்றலை அதிகரித்து மூளையை கூர்மையாக்குகிறது . மாணவர்களுக்குச் சிறந்தது .

  • காற்றின் சக்தி அதிகரிப்பதால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாகிறது . சோம்பேறித்தனமாக மந்தமாக இருக்கும் நிலையில் இம்முத்திரையை வைத்துக்கொண்டால் உடல் சுறுசுறுப்படைகிறது .

  • மனம் சோர்வடையும் போது இம்முத்திரையை வைத்தால் மனம் சுறுசுறுப்படைகிறது . புத்துணர்ச்சி கிடைக்கிறது . மனம் ஒருமைப்பாடு அடைகிறது . புதுப்புது சிந்தனைகள் தோன்றுகின்றன.

  • அளவுக்கதிகமான தூக்கத்தை குறைக்க உதவுகிறது . தூக்கமின்மை போக்கவும் உதவுகிறது .

  • வேலை செய்ய உற்சாகம் பிறக்கிறது . உடல் மனம் இரண்டின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

  • மனம் சம்பந்தப்பட்ட இஸ்டீரியா மனச்சோர்வு மனம் சிதைவு அதிகமான கோபம் இவற்றை சரி செய்ய உதவுகிறது . 

  • நரம்புகளை உற்சாகப்படுத்துகிறது . நரம்பு சம்பந்தமான குறைகளைத் தீர்க்க உதவுகிறது . நரம்புத் தளர்ச்சி செரிபரல் பால்சி ( CEREBERAL PALSY ) , MULTIPLE SCLEROSIS  போன்ற நரம்பு மண்டலக் குறைபாடுகளைத் தீர்க்க உதவுகிறது 

  • பிட்யூட்டரி தைராய்டு கணையம் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு சுரக்க உதவுகிறது 

  • விழித்திரையில் ஏற்படும் நோய்களைச் சரி செய்ய உதவுகிறது .

  • பக்கவாதம் முகவாதம் போன்ற நோய்களுக்கும் தசை குறைபாடுகளுக்கும் சின்முத்திரை நல்லது . தசைகளுக்கு பலமளிக்கிறது .

  • இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது . குரல் பேச்சு இவை குறைவதுபோல் தோன்றினால் இம் முத்திரையை உபயோகிக்கலாம் . 

  • மெதுவான இதயத் துடிப்பை சீராக்குகிறது .

  • நுரையீரலில் ஏற்படும் அதிகமான சளியை குறைக்க உதவுகிறது.

  • மூட்டுகளை சுலபமாக அசைய வைக்கிறது . இம்முத்திரை மூட்டு வலியை குறைக்கிறது .

  • வாதம் அல்லது வாயுவை அதிகரிக்கிறது . உடலில் அதிகமான வாதம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது .

  • நீண்ட காலம் இம் முத்திரையை செய்யும் போது நமது மனக்கண் திறக்கப்படுகிறது .அதாவது மூண்றாவது கண் எனும் நெற்றிக்கண் திறக்கிறது .

  • இம் முத்திரையை நீண்ட நாட்கள் செய்யும் போது புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் தன்னால் விலகி விடும் .

Saturday, 23 September 2023

எளியமுறை உடற்பயிற்சியில் - வஜ்ராசனத்தின் பயன்கள்

வஜ்ராசனத்தில் அமர்ந்து பயிற்சிகள் செய்யும்போது கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம் 


  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

  • இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதி பலப்படுத்தப்படுகிறது.

  • இடுப்பு மற்றும் 8 கீழ் முதுகு தசைகள் பலப்படுத்துகிறது.

  • இதை உணவு உண்ட பிறகும் செய்யலாம்.

  • தவத்தில் ஆழ்ந்து செல்ல உதவுகிறது.

  • காந்த ஓட்டம் சீராகும்.

  • கால்களின் அடிப்பகுதியிலிருந்து இதயம் வரை இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்கிறது.

  • செரிமான சுரப்பிகளின் திறன், செரிமான சக்தியின் செயல்திறனை அதிகரிக்கும்.

  • முக்கிய தமணி ஓட்டத்தை அதிகரிக்கும். இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கும்.

  • உடலின் ஏழு சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கப்படுகின்றன.

  • வஜ்ராசனத்திற்கு பிறகு உடல் வைரத்தைப் போல் வலுவாக மாறுகிறது.

  • சமமாகவும் / ஒத்ததாகவும், ஆக்கினை / அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது.

  • நிணநீர் ஓட்டத்தைத் தூண்டுகிறது.

  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.

  • தசைகளில் உள்ள பதட்டம் போய் தளர்வாகிறது.

  • வலியைக் குறைத்து சரிசெய்கிறது.


எளியமுறை உடற்பயிற்சி - கிட்னி மசாஜ்


எளியமுறை உடற்பயிற்சி - கிட்னி மசாஜ் பலன்கள்
  • வாயு பிரச்சினை தீரும்.

  • சீரணக் கோளாறு நீங்கும்.

  • கிட்னியில் கல், டயலிசிஸ், கிரியாட்டின் லெவல் பிரச்சினை அதிகம் இருப்பவர்களுக்கு சிறப்பான பயிற்சி இது.

  • கிட்னி மட்டுமல்ல - அதைச் சார்ந்த நரம்பு தொகுப்புகள் - முதுகெலும்பு, தண்டுவடம், இடுப்புப் பகுதி, பலம் பெறுகிறது.

  • மசாஜ் தசைகளில் பதட்டம் போய் தளர்கிறது. வலியைக் குறைக்க உதவுகிறது.



Sunday, 17 September 2023

எளியமுறை உடற்பயிற்சி - கால் பயிற்சியின் பலன்கள்

கால் பயிற்சியின் பலன்கள்
நிலை - 1

* கால் 1 ½ அடி இடைவெளி, ஈர்ப்பு விசை குறைவாகவும் / உடலுடன் உறுதியாக இணைக்கப்பட்ட அடித்தளமாக உள்ளது.

* கை, தோள்பட்டை / இடுப்பு சார்ந்த பிரச்சினை தீர்கிறது.

* கை ஊன்றி செய்யும்போது தசைகள் / தோள்கள் பலம் பெறுகின்றன.

* பாதங்களை வெளிப்புறம் ( in/out ) செய்யும்போழுது ஈர்ப்பு விசை ( Gravitational force ) தாக்காமல் அதாவது சமன்படுத்தப்படுகிறது.

* கால்களை அகலமாக விரித்து பரவ முடியும்போது கால் தசைகள் பலம் பெறுகின்றன.

* உடல் ஆற்றல் பெருகி சமன்படுகிறது.

* மனம் - உடல் இணைப்பை  மேம்படுத்துகிறது.

* கால்கள் (In-Out) உள்ளே வெளியே எனும் பயிற்சி செய்யும்போது எதிர்ப்புத்திறன் கூடுகிறது.

* இடுப்பு மூட்டு பலம் பெறுகிறது.

* கால் பாதங்கள் நீட்டிய நிலையில் சுழற்றும் போது இடுப்பு, கனுக்கால், தோள்கள், கைகள் மற்றும் மார்புப் பகுதி தசைகள் வரை வலுப்பெறுகின்றன.



Saturday, 2 September 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் / Benefits of simplified kundalini yoga phisycal exercises

                                      எளியமுறை உடற்பயிற்சி

கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 1




  • கைப்பயிற்சியின் முதல் நிலையில் கால் பலம் பெறுகிறது.

  • ½ அடி இடைவெளியில் கால்களை வைக்கும்போது முதுகெலும்பு பலப்படுகிறது

  • இது கணுக்கால், தொடைகள் மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இடுப்பு மற்றும் அடிவயிற்று தசை அசைவுகளின் கட்டுப்பாட்டைப் பெற உதவுகிறது.

  • இரு கைகளையும் தலைக்கு மேல் குவிந்து, காதோடு ஒட்டி வைக்கும்போது கழுத்து தசைகள் பலம் பெறுகின்றன.

  • தலைக்கு மேல் கைகள் குவித்து 4 மூச்சுகள் இழுத்து விடும்போது நுரையீரல் திறன் கூடுகிறது.

  • வலது மூளை, இடது மூளை இணைப்பதற்கான பயிற்சியாக உள்ளது.

  • கைகளை மேல்நோக்கி குவிக்கும்போது தலை முதல் இதயம் வரையிலும், கைகளை கீழ்நோக்கி தொடை ஒட்டி வைக்கும்போது இதயம் முதல் பாதம் வரை இரத்த ஓட்டம் சீராகிறது.

  • பஞ்சபூத ஆற்றல் சமன்படுகிறது.




கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 2



  • வாத நோய்கள் கட்டுப்படுகிறது.

  • நுரையீரல் தோற்று வராமல் தடுக்கப்படுகிறது.



கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 3,4,5


  • வாதம், பித்தம், கபம் சரியாக இயங்குகிறது.

  • பிரண சக்தி சீராகும்.

  • சிறுநீர், மலம், விந்து சரியான முறையில் வெளியேறும்.

  • சிறுநீரகம், கணயம் செயல்பாடு சமன்படும்.

  • உடல் சூடு சமன்படும்.

  • உணவு சப்த தாதுக்களாக மாற உதவுகிறது.

  • வலிப்பு கட்டுக்குள் வரும்.

  • உடலில் உள்ள இராஜ உறுப்புகள் சீரான இயக்கத்திற்கு வரும்.

  • மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது.

  • கை மரத்துப் போதல், உறைந்த தோள்பட்டை குணமாகிறது.

  • மனஅழுத்தம் குறைகிறது.







  • வலது கால் 1 அடி முன்னும் இடது கால் பின்னும் வைக்கும்போது பிரமிட் வடிவம் கிடைக்கிறது. முழுமையான சீவகாந்தத்தை ஈர்த்து தரும். உடலுக்கு ஆற்றல் கூடுகிறது.




கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 6



  • பாதம் ½ அடி இடைவெளி விடுவதால் அபரிமிதமான சீவகாந்தம் உள்ளிழுக்கப்படும்.

  • இரு கட்டை விரல்களை இணைக்கும்போழுது வான்காந்த ஆற்றல் இழுக்கப்படுகிறது.

  • கண் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

  • கழுத்து சார்ந்த பிரச்சினை மற்றும் முதுகெலும்பு (Disc) சார்ந்த பிரிச்சினைகள் சரியாகிறது.

  • உடலில் முதுகுப் பகுதியில் உள்ள தசைதான் பெரியது. அதுவே முதுகுத் தண்டைப் பிடித்து வைத்துள்ளது. அந்த முதுகுப் பகுதியில் உள்ள தசைகளை இயக்குகிறது.





  • உள்ளங்கை முட்டியில் அமர்த்தி கால்களை சுழற்றும்போது மூட்டுப் பகுதியில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறும்.

  • மூட்டில் வீக்கம் இருந்தால் நீங்கும்.

  • மூட்டுகளுக்கு இடையே எண்ணெய்ப் பசை இருப்பை அதிகரிக்கும்.

  • மூட்டுத் தேய்மானம் வராமல் காக்கப்படுகிறது.














Saturday, 24 June 2023

சாந்தி தவ நுணுக்கங்கள்


சனி, 28 டிசம்பர், 2013

சாந்தி தவம்: சில பயனுள்ள நுணுக்கங்கள்

 

1. தண்டுவட சுத்தி செய்யும் போது மூச்சு விடும் போது மூலாதாரத்தை கவனிக்க வேண்டும்.

2. பிருத்த்வி முதிதேரியல்(mutra) மனம் வைத்து மூலாதாரத்தை கவனித்தால் சாந்தி நன்கு பிடிபடும்....

3 .வெள்ளி கிழமை கலை தீப பயிற்சி செய்த பின்பு சாந்தி செய்தால் நன்றாக உணர முடியும். தினமும் தூக்கத்திற்கும் முன்பு சாந்தி செய்து பழகினால் நல்லது.

4. ஒரு சிறு கர்சீப்பை நீரில் நனைத்து, பிழிந்து பின் மூலாதாரப் பகுதியில் உருட்டி வைத்துக் கொண்டு தவம் செய்வது தாரணைக்கு எளிதாய் அமையும். மூலாதாரத்தின் உணர்வு நன்றாய் தோன்றிய பின் கர்சீப்பை எடுத்து விடலாம்.

5. அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும். தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள்) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.

6. ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.

7. அசுவினி முத்திரையைத் தவறாது போட்டு வருபவர்களுக்கு மூலாதாரப் பகுதியில் கவனத்தை வைப்பது பழக்கமாய் மாறிவிடும். அத்தகையவர்கள் சாந்தி தவத்தில் எளிதில் கவனத்தை அப்பகுதிக்கு நகர்த்தி விடுவார்கள்.

8. புவிக்கு தன் மீது படும் எந்த ஒரு காந்தக்களதையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொள்ளும் பண்பு உண்டு [earthing]. நாம் சம்மணமிட்டு தவம் செய்கையிலே புவியின் மேற்பரப்புக்கு மிக அருகாமையிலே அதைத் தொடுமளவுக்கு நமது மூலாதாரம் வருவதினாலே, அங்கே தேங்கியுள்ள காந்தம், புவியின் காந்தக்களத்தோடு பின்னிப் பிணைய ஏதுவாகின்றது. இந்த நிகழ்வு கூட, மூலாதாரத்தில் உறங்கும் காந்தத்தை நாம் உணர முடியாமற் போவதற்குக் காரணமாக் அமையக்கூடியதே. இதைத் தவிர்க்கவே நாம் பாய் போன்றவற்றில் அமர்ந்து தவம் செய்கின்றோம். இக்காரணத்தாலே, சற்றே உயரமான தலையணை, மடித்த கம்பளிப் போர்வை போன்றவைகளின் மீது அமர்ந்து தவம் செய்வது மூலாதார உணர்தலை எளிதாக்கும். சேர் மீது அமர்ந்து தவம் செய்தலையும் முயற்சிக்கலாம்.

9. சாந்தித் தவம் துவங்குகையில் மூலபந்தத்தில் இருந்து வரலாம், அது கவனத்தை ஆசனவாய்ப்பகுதியில் இருத்த உதவியாய் அமையவல்லது.

10. ஒரு அன்பர் சொன்னது: குண்டலினி நமது முறையில் முதுகுத் தண்டுக்கு வல இடப்புறமுள்ள பிங்கலை, இட நாடிகளின் [உஷ்ண, குளிர் நாடிகள்] வழியாகத்தான் மேலெழும்புகின்றது. மூலாதாரத்தவத்தைச் செய்யும் போது ஒரு நனைந்த ஈரத்தண்டை முதுகுத்தண்டின் மீது முழுக்கப்படுமாறு போர்த்திக் கொண்டால், உஷ்ண, குளிர் நாடிகளின் வழியாக அத்துணை எளிதில் உயிராற்றல் மேலெழும்பாது, அப்படியே சற்றே எழும்பினாலும், நனைந்த துண்டு போர்த்தியமையால் அதை நம்மால் உணர இயலாது. இவ்வாறு மனம் குண்டலினியோடு சேர்ந்து நகரா நிலையில், மூலாதாரத்தில் தேங்கியுள்ள ஆற்றலிலே தான் மனம் நிலைக்கும். இது சாந்தி யோகத்தை நல்லபடியாகச் செய்ய வழிவகுக்கும்

Friday, 23 June 2023

House Maintenance Tips / வீட்டுக் குறிப்புகள்

🙏🏻எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று காய்ச்சலாம்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

வாழ்க வளமுடன்
🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻

Tuesday, 9 May 2023

FIVE FOLD MORLA CULTURE

FIVE FOLD MORAL CULTURE
Each person must live by the earnings made through his or her own mental or physical labor.

Our method of living should not cause any suffering to the body or mind of any person.

One should not kill any living being for food.

One must have the utmost respect for the possessions and freedom of others and help to protect them.

One must cultivate loving kindness and strive to alleviate the miseries of others to the extent possible.

Each person must live by the earnings made through his or her own mental or physical labor.

There should simply not be any question of taking another person’s possessions.  Everyone has his needs.  If he cannot fulfill these by this own earning, it becomes necessary for them to make use of someone else’s hard-earned possessions.  If this is allowed, eventually human life will start resembling animal life.

Animals do not have the capacity to produce the food stuff that they need to satisfy hunger.  Most of them therefore depend for their food on killing and eating other animals. If mankind does not follow the noble moral culture of living on one’s own earnings, our lifestyle will become cruel like that of animals.  Just imagine, whenever a carnivorous animal becomes hungry it is obliged to do four deeds, namely

Torturing another living being

Killing it

Violently claiming its body as food and

Destroying its freedom to live.

Since these crimes cause pain and suffering to living beings, they are called sinful deeds when committed by a human beings.

Every thought and action by a living being gets shrunk and compressed by the Almighty self-compressive surrounding pressure, and stored in the form of waves in its Genetic Center.  When circumstances are appropriate, these concentrated waves blossom again into actions and thoughts.  This sets the pattern for the four evils mentioned above to form the way of living for animals.  These four patterns of action have become the character of the Genetic Centre of every carnivorous member of the animal kingdom. As mankind has evolved from ancestors, these crimes also characterize the human Genetic Centre, which determines the way we lead our lives. This is why the aforesaid four sinful tendencies have become natural to mankind and are continuing through heredity. If you look at the criminal codes and laws all over the world, you will that the actions identified as crimes through history can all be described as one of these four types. To avoid committing these four offences and change his characterized four actions and thoughts, man must work hard, using his body and mind, to make his way of life divine.

Our method of living should not cause any suffering to the body or mind of any person.

The divine law is such that Nature is never the cause of suffering; only man creates all pains and miseries. Only the injustices perpetrated by mankind are responsible for all the suffering now prevailing in the world. Therefore, if every person decides to abide by this principle of not causing pain to anyone else, would society not live in peace.

One should not kill any living being for food.

We have considered this point and its effects already under the First Principle of this  Code, above. It is enough if recall what has been said.

One must have the utmost respect for the possessions and freedom of others and help to protect  them.

We do not need a great deal of explanation for this statement. This code of conduct is absolutely to remove from the human society the growing tendency of exploiting others in various ways.

One must cultivate loving kindness and strive to alleviate the miseries of others to the extent possible.

Society as a whole is able to function only with the labor of all and cooperation and help from everyone.  This is essential. This noble way of living will bring happiness to all.

To sum up, I suggest that all adults and thinkers should endeavor realize the benefits of this Five-fold moral culture and begin to sincerely follow it in life.  It will be a good idea for all to take a vow that they will follow this five-fold code of conduct in life.  Let the intellectuals assume the duty of spreading the merits of the code among the general public.

Let its implementation be considered a sacred human obligation.

Thursday, 30 March 2023

கீரை ஜூஸ்

* முருங்கை கீரையுடன் சிறிது கருப்பு எள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அருந்திட, ரத்த அழுத்தம் சீராகும். ரத்த சோகை குணமாகும்.

* பசலைக்கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சைமிளகாய். உப்பு சேர்த்து வேக வைத்து அருந்த, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும், தைராய்டு நோய் குணமாகும்.

* வல்லாரைக்கீரை, பயத்தம்பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அருந்த ஞாபகசக்தி அதிகமாவதுடன்  தோல் நோய்கள் குணமாகும்.

* முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம், சுக்குப்பொடி சீரகத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, பின் வடிகட்டி அருந்த முதுகுத்தண்டுவலி வாதநோய், பக்கவாதம் முதலிய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.

* முள்ளங்கிக் கீரையை அப்படியே வேக வைத்து சூப்பாகவோ, சாறாகவோ அருந்த  சிறுநீரகக் கற்கள் கரையும். வாயுவை அகற்றி மலச்சிக்கலை போக்கும்.
*சிறுகீரையோடு ஒரு பிடி பார்லி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டி வெண்ணெய் சேர்த்து அருந்த உடல் பருமன் குறையும் . பித்த நோய்கள் அகலும்.

* பருப்புப் கீரையுடன்  ஊற வைத்த வெந்தயம் போட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு வடிகட்டி சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்த பித்தம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, எரிச்சல் குணமாகும்.

* தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, வேப்பந்தளிர் சிறிது சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி அருந்தி வர, வயிற்றுப் பூச்சிகள் அழியும். ரத்தத்தை தூய்மையாக்கி, நெஞ்சகப் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகளைப் போக்கும்.

* கரிசலாங்கண்ணியை வேக வைத்து அருந்த, ஆரம்பநிலை புற்றுக் கட்டிகள் சரியாகும். முடியின் வேர்க்கால்களுக்கு பலம் அளித்து, முடி வளர்ச்சிக்கு உதவும்.

* கொடிப் பசலைக் கீரையை வேகவிட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.

* துத்திக்கீரையுடன் கடுக்காயைத் தட்டி போட்டு, நீர்விட்டு உப்பு போட்டு கொதித்ததும் அருந்த வெள்ளைப்படுதல் குணமாகும்.

* மணத்தக்காளி கீரையை சாறாக அருந்த வயிற்றுப்புண்ணை ஆற்றும். உடல் எடை குறைவதோடு, தொப்பையைக் குறைக்கும்.

* நச்சக் கொட்டை கீரை, மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போட்டு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தி வர கழுத்துவலி குணமாகும். குடற்புண்கள் ஆறும்.

வாழ்க வளமுடன்
💐💐🙏🏻💐💐

Monday, 27 February 2023

இரவு அதிக நேரம் உறங்குவதனால் பாதிப்புகள்

*இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!*

நமது உடலுக்குள் ஏற்கனவே 24 மணி நேர கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் முக்கியமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

ஒரு மனிதருக்கு உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உறக்கம் மிகவும் அவசியமான ஒன்று. மேலும் போதுமான அளவு உறக்கத்தை பற்றியும், உறக்கத்திற்கும் உடலுறுப்புகளுக்குள்ள தொடர்பை பற்றியும் தற்போது வரை மிகபெரிய அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உறங்கும்போதுதான் நமது உடலானது முழு ஓய்வுக்கு வந்து அடுத்த நாள் வேலைக்காக தன்னை தயார் படுத்திக் கொள்கிறது. மேலும் தனக்குத் தேவையான சக்தியை சேமித்துக் கொள்வதற்கும் தசைகளை சரி செய்வதற்கும், சேதம் அடைந்த செல்களை சரி செய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் உறக்கம் மிகவும் அவசியமாகிறது.

இரவில் தாமதமாக உறங்கச் செல்வதினால் இதய நோய் ஏற்படும் அபாயம் 25% அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்காக 88,026 நபர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 2006 முதல் 2010 காலகட்டங்களில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சராசரி நபர்களின் வயது 61. இவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான பிரச்னைகள் பற்றி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த 5.7 வருடஆராய்ச்சியில் நடு இரவிலோ அல்லது அதற்கும் தாமதமாகவோ தூங்குபவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் 25% அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரவில் சீக்கிரம் உறங்க செல்வதால் இதய பாதிப்புகள் ஏற்படாது:

மேலும் இரவு 10 லிருந்து 11 மணிக்குள் உறங்கச் செல்பவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது. இரவு 10 லிருந்து 11 மணிக்குள் தூங்க சென்ற நபர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பானது 12 சதவீதம் வரை மட்டுமே இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற நபர்களில் 3,172 நபர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

*ஏன் இரவு தாமதமாக உறங்க கூடாது!*

நமது உடலுக்குள் ஏற்கனவே 24 மணி நேர கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் முக்கியமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இரவு மிகவும் தாமதமாக தூங்கச் செல்லும் போது இந்த செயல்முறை பாதிக்கப்படுகிறது.

*எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதும் முக்கியமானது!*

தூக்கமின்மை என்பது இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்னையாகும். சரியாக தூங்காமல் இருப்பதும் அவர்கள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி பலருக்கும் கவலை இல்லாமல் இருக்கிறது. அளவுக்கு குறைவாக தூங்கும் போது அது அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் இதய கோளாறுகள், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு உடல் பாதைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

மேலும் போதுமான அளவு தூக்கம் இல்லை எனில் அவை நமது நரம்பு மண்டலத்தை பாதித்து, இதயத் துடிப்பு முதல் நரம்பு மண்டலம் பாதிக்கிறது. எனவே அளவுக்கு குறைவாக தூங்கும்போது அவை பல்வேறு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

*நன்றாக தூங்குவதற்கு சில குறிப்புகள்*

* தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உறங்க சென்று விட வேண்டும்.

* பகலில் தூங்குவதை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

* உடல் இயக்கங்களை அதிகரிக்க வேண்டும்.

* உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இரவு உணவை முடித்து விட வேண்டும்.

* ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

* படுக்கை மற்றும் தலையணைகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை இரவு நேரத்தில் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

*_முறையான யோகப்பயிற்சிகள் வாழ்வை முறைப்படுத்தும்._*

வாழ்க வளமுடன்
💐💐🙏🏻💐💐