கதைப்போமா ......
Saturday, 10 August 2024
வாழ்வில் வளம் நலம் தரும் முத்திரைகள்
Friday, 5 July 2024
தூக்கத்தில் உடல் எடை அதிகரிப்பது ஏன்?
Monday, 22 January 2024
வாழை இலை
Wednesday, 10 January 2024
எளியமுறை உடற்பயிற்சியின் பயன்கள் - கண்பயிற்சி
Eye sugar, Eye BP - லிருந்து தப்பிக்கலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சினை சரியாகிறது.
புரை விழுதல் ( cataract ) வராமல் தவிர்க்கப்படும்.
கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு.
ஏற்கனவே கண்ணாடி போட்டிருந்தால் power ஏறாது (அ ) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கண்ணாடியை எடுப்பதற்கும் வாய்ப்புண்டு.
வெண்மென் தசைகள் இறுக்கம் தளர்ந்து காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஒட்டன் சீராகிறது.
பயிற்சி சரியாக தினமும் செய்து வந்தால் 50, 60 வயதில் 30-40 வயதுள்ள ஆரோக்கியம் கண்களில் இருக்கும்.
Saturday, 2 December 2023
எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் கண் பயிற்சியில் வரும் உஷஸ் முத்திரையின் பயன்கள்
எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள்
கண் பயிற்சியில் வரும் உஷஸ் முத்திரையின் பயன்கள்
உஷாஸ் முத்ரா என்பது கைகளை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விரல்களால் பிடித்து, கட்டைவிரல்களை நுனியில் இணைப்பதன் மூலம் அடையப்படுகிறது.
பொருள் மற்றும் விளக்கம்
சமஸ்கிருதத்தில் " உஷாஸ் " என்பது "விடியலைக் குறிக்கிறது மற்றும் "முத்ரா" என்பது "முத்திரை அல்லது சைகை" என்பதைக் குறிக்கிறது. இந்த முத்ரா தியானத்தின் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் மக்கள் புதிய தொடக்கங்கள் மற்றும் நோக்கங்களை அமைக்க முயற்சிக்கும் போது, அதனால் பெயர்.
உஷஸ் முத்திரையின் பலன்கள்
1. மன விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது - உஷாஸ் முத்ரா இரண்டு கைகளையும் சமச்சீராகப் பற்றிக் கொண்டது. இது மூளையின் இடது மற்றும் வலது அரைக்கோளங்களை சமநிலைப்படுத்துகிறது அல்லது ஒத்திசைக்கிறது. இதனால், மனதில் தெளிவை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
2. எண்டோகிரைன் அமைப்பின் நன்மைகள் - உஷாஸ் முத்ரா ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வரம். PCOD மற்றும் தைராய்டு நோயாளிகள் இந்த எளிய கை சைகையை வைத்திருப்பதன் மூலம் பலன்களைப் பெறுகிறார்கள். இது சரியான ஹார்மோன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு நன்மைகளை வழங்குகிறது.
3. ஒழுங்கற்ற மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது - சரியான ஹார்மோன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பராமரிக்க இந்த சைகை நன்மை பயக்கும். எனவே, இது உங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு நிரந்தர தீர்வை வழங்குகிறது.
4. சாக்ரல் சக்ராவைத் தூண்டுகிறது - உஷஸ் முத்ரா சாக்ரல் (ஸ்வாதிஷ்டான) சக்கரத்தைத் திறக்க உதவுகிறது . இது ஒரு நபருக்கு பல்வேறு வடிவங்களில் உதவுகிறது. இது சமூக வாழ்க்கை, பாலியல், படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.
5. ஆற்றல் மட்டத்தை உயர்த்துகிறது - இந்த சைகை வழக்கமாக அதிகாலையில் செய்யப்படுகிறது. ஏனென்றால், இது எதிர்காலத்தை வழிநடத்தும் ஆற்றலை வழங்குகிறது. இது சோம்பலை நீக்கி, தீப்பொறி நிறைந்த ஒரு நாளையும் வாழ்க்கையையும் பெற உற்சாகத்தைத் தருகிறது.
Thursday, 26 October 2023
எளிமுறை உடற்பயிற்சியின் பயன்கள் : தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை : 3, 4, 5.6, 7
வெப்ப ஓட்டம் சீராகிறது.
பெண்கள் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளான அதிக உதிரப்போக்கு, Irregular periods, மாதவிலக்கு நேரத்தில் வரும் உடல் அயற்சி, வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் தீர்கிறது.
ஆண்களுக்கு விந்து அதிகமாக வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
பயணத்தினால் வரும் வாந்தி, ஒவ்வாமை சரியாகிறது.
உண்ணும் உணவு சப்த தாதுக்களாக மாறுகிறது.
உடல் சூடு சமன்படுகிறது.
இதயம் சீரான இயக்கம் பெறுகிறது.
காற்று சிற்றறைகளுக்கு பிராணவாயு எடுத்துக்கொள்கிறது.
ஆயுட்காலம் நீள்கிறது.
உடல் லேசாகிறது.
இடகலை, பின்கலை, சுழுமுனை நாடிகள் இயக்கம் பெறுகின்றன.
உணர்ச்சி நிலைக் கடந்து உணர்வு நிலைக்கு செல்கிறோம்.
காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்கின்றன.
தைராய்ட் பிரச்சினை சரியாகிறது.
ஐந்தில் அளவுமுறை இயல்பாகிறது.
இருதயத்தில் மேல் உள்ள கொழுப்பு நீங்குகிறது.
நுரையீரலில் நீர் சேராமல் இருக்கிறது.
நுரையீரல் தொற்றுக்கு சிறப்பான பயிற்சி.
கண் கருவளையம் நீங்குகிறது.
கண்பயிற்சிக்கு உடல் தயாராகிறது.
உடல் பருமன் குறைகிறது.
Thursday, 12 October 2023
எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் : தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை 1 & 2
எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள்
தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை 1 & 2
பெண்களுக்கான சிறந்த பயிற்சி. fybroid கட்டிகள், PCOD, PCOS தொந்திரவுகள் தீரும். கட்டிகள் சுருங்க ஆரம்பிக்கும். குழந்தையின்மை பிரச்சினை தீரும்.
Bulky Uterus நார்மல் ஆகும்.
Irregular Period சரியாகும்.
உதரவிதானம், கணையம், பித்தப்பை ஊக்குவிக்கப்படுகிறது.
ஆயுள் கூடுகிறது.
சர்க்கரை குறைபாடு பிரச்சினை தீர்கிறது.
Insulin, glukogen சரியாக சுரக்கும்.
ஆண்களுக்கு ஹைட்ரோசல்/ஹெரண்யா வராமல் பாதுகாக்கிறது.
Monday, 9 October 2023
ஆதி முத்திரையின் பயன்கள்
ஆதி முத்திரை
ஆதி முத்திரை பெயர் விளக்கம்:
பிறந்த குழந்தை தனது இருகை விரல்களையும் மடக்கி கட்டைவிரலை உள்ளே வைத்து இந்த ஆதி முத்திரையில் தூங்குகின்றது.
அதனால் தான் குழந்தையின் உடலில் உயிரோட்டம் சிறப்பாக இயங்குகின்றது. எனவே தான் இதற்கு ஆதி முத்திரை என்ற பெயர் வந்தது. குழந்தை வளர வளர நித்திரை அதிகமாகி ஆதி முத்திரையை மறந்துவிட்டது. நாம் சிறு குழந்தையின் கைவிரல்களை ஒவ்வொன்றாக எடுத்து விட்டாலும் மீண்டும் தனது விரல்களை மடக்கி ஆதி முத்திரைக்கு தானாக சென்று விடும்.
ஆதி முத்திரையின் பலன்கள்:
உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும்.
உயிர் சக்தி பாதுகாக்கப் படுகின்றது.
உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
சுறுசுறுப்பாக உற்சாகமாக திகழலாம்.
நல்ல எண்ணங்கள் உதயமாகும்.
தீய எண்ணங்கள் விலகும்.
எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
படிக்கின்ற மாணவர்கள் படிக்கும் பொழுது உடல் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் மீண்டும் சோர்வு நீங்கும். உற்சாகமாக படிக்கலாம்.
உடலில் விந்து சக்தியை தவறாக அதிகம் விரயம் செய்தவர்கள், அதனால் ஆண்மை குறைவு, வீர்ய தன்மை இழந்தவர்கள் மேற்குறிப்பிட்ட ஆதி முத்திரை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.
Thursday, 5 October 2023
எளியமுறை உடற்பயிற்சி - சின் முத்திரையின் பயன்கள்
எளியமுறை உடற்பயிற்சி
தசைநார் மூச்சுப் பயிற்சி : நிலை - 1
தசைநார் மூச்சுப் பயிற்சியில் முதல் இரு நிலைகளில் வரும் முத்திரைகளின் பலன்கள் பார்ப்போம்.
சின் முத்திரை ஞான முத்திரை
கட்டை விரலின் நுனியின் மேல் ஆள்காட்டி விரலை வைப்பது சின் முத்திரை எனப்படும் . முனிவர்கள் ஞானிகள் அனைவரும் கைகளில் வைத்திருப்பது இந்த ”சின் முத்திரை” தான் . இதை ஞான முத்திரை என்றும் , தியானம் செய்யும்போது உபயோகிப்பதால் தியான முத்திரை என்றும் அறிவை தூன்டுவதால் அறிவுமுத்திரை என்றும் கூறுவர் .
கட்டை விரல் நெருப்பைக் குறிக்கும் . ஆள்காட்டி விரல் வாயுவைக் குறிக்கும் . இந்த முத்திரையில் காற்றின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் இருப்பதால் சக்தி குறைவான சிறிய அளவிலான நெருப்பு அணைந்து விடுகிறது எனவே ஒருநிலைப்பட்ட மனம் அமைகிறது .
சின்முத்திரையின் பயன்கள் :-
நினைவாற்றலை அதிகரித்து மூளையை கூர்மையாக்குகிறது . மாணவர்களுக்குச் சிறந்தது .
காற்றின் சக்தி அதிகரிப்பதால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாகிறது . சோம்பேறித்தனமாக மந்தமாக இருக்கும் நிலையில் இம்முத்திரையை வைத்துக்கொண்டால் உடல் சுறுசுறுப்படைகிறது .
மனம் சோர்வடையும் போது இம்முத்திரையை வைத்தால் மனம் சுறுசுறுப்படைகிறது . புத்துணர்ச்சி கிடைக்கிறது . மனம் ஒருமைப்பாடு அடைகிறது . புதுப்புது சிந்தனைகள் தோன்றுகின்றன.
அளவுக்கதிகமான தூக்கத்தை குறைக்க உதவுகிறது . தூக்கமின்மை போக்கவும் உதவுகிறது .
வேலை செய்ய உற்சாகம் பிறக்கிறது . உடல் மனம் இரண்டின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.
மனம் சம்பந்தப்பட்ட இஸ்டீரியா மனச்சோர்வு மனம் சிதைவு அதிகமான கோபம் இவற்றை சரி செய்ய உதவுகிறது .
நரம்புகளை உற்சாகப்படுத்துகிறது . நரம்பு சம்பந்தமான குறைகளைத் தீர்க்க உதவுகிறது . நரம்புத் தளர்ச்சி செரிபரல் பால்சி ( CEREBERAL PALSY ) , MULTIPLE SCLEROSIS போன்ற நரம்பு மண்டலக் குறைபாடுகளைத் தீர்க்க உதவுகிறது
பிட்யூட்டரி தைராய்டு கணையம் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு சுரக்க உதவுகிறது
விழித்திரையில் ஏற்படும் நோய்களைச் சரி செய்ய உதவுகிறது .
பக்கவாதம் முகவாதம் போன்ற நோய்களுக்கும் தசை குறைபாடுகளுக்கும் சின்முத்திரை நல்லது . தசைகளுக்கு பலமளிக்கிறது .
இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது . குரல் பேச்சு இவை குறைவதுபோல் தோன்றினால் இம் முத்திரையை உபயோகிக்கலாம் .
மெதுவான இதயத் துடிப்பை சீராக்குகிறது .
நுரையீரலில் ஏற்படும் அதிகமான சளியை குறைக்க உதவுகிறது.
மூட்டுகளை சுலபமாக அசைய வைக்கிறது . இம்முத்திரை மூட்டு வலியை குறைக்கிறது .
வாதம் அல்லது வாயுவை அதிகரிக்கிறது . உடலில் அதிகமான வாதம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது .
நீண்ட காலம் இம் முத்திரையை செய்யும் போது நமது மனக்கண் திறக்கப்படுகிறது .அதாவது மூண்றாவது கண் எனும் நெற்றிக்கண் திறக்கிறது .
இம் முத்திரையை நீண்ட நாட்கள் செய்யும் போது புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் தன்னால் விலகி விடும் .
Saturday, 23 September 2023
எளியமுறை உடற்பயிற்சியில் - வஜ்ராசனத்தின் பயன்கள்
வஜ்ராசனத்தில் அமர்ந்து பயிற்சிகள் செய்யும்போது கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்
இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதி பலப்படுத்தப்படுகிறது.
இடுப்பு மற்றும் 8 கீழ் முதுகு தசைகள் பலப்படுத்துகிறது.
இதை உணவு உண்ட பிறகும் செய்யலாம்.
தவத்தில் ஆழ்ந்து செல்ல உதவுகிறது.
காந்த ஓட்டம் சீராகும்.
கால்களின் அடிப்பகுதியிலிருந்து இதயம் வரை இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்கிறது.
செரிமான சுரப்பிகளின் திறன், செரிமான சக்தியின் செயல்திறனை அதிகரிக்கும்.
முக்கிய தமணி ஓட்டத்தை அதிகரிக்கும். இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கும்.
உடலின் ஏழு சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கப்படுகின்றன.
வஜ்ராசனத்திற்கு பிறகு உடல் வைரத்தைப் போல் வலுவாக மாறுகிறது.
சமமாகவும் / ஒத்ததாகவும், ஆக்கினை / அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது.
நிணநீர் ஓட்டத்தைத் தூண்டுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.
தசைகளில் உள்ள பதட்டம் போய் தளர்வாகிறது.
வலியைக் குறைத்து சரிசெய்கிறது.
எளியமுறை உடற்பயிற்சி - கிட்னி மசாஜ்
வாயு பிரச்சினை தீரும்.
சீரணக் கோளாறு நீங்கும்.
கிட்னியில் கல், டயலிசிஸ், கிரியாட்டின் லெவல் பிரச்சினை அதிகம் இருப்பவர்களுக்கு சிறப்பான பயிற்சி இது.
கிட்னி மட்டுமல்ல - அதைச் சார்ந்த நரம்பு தொகுப்புகள் - முதுகெலும்பு, தண்டுவடம், இடுப்புப் பகுதி, பலம் பெறுகிறது.
மசாஜ் தசைகளில் பதட்டம் போய் தளர்கிறது. வலியைக் குறைக்க உதவுகிறது.
Sunday, 17 September 2023
எளியமுறை உடற்பயிற்சி - கால் பயிற்சியின் பலன்கள்
Saturday, 2 September 2023
எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் / Benefits of simplified kundalini yoga phisycal exercises
எளியமுறை உடற்பயிற்சி
கைப்பயிற்சியின் பலன்கள் : நிலை - 1
கைப்பயிற்சியின் முதல் நிலையில் கால் பலம் பெறுகிறது.
½ அடி இடைவெளியில் கால்களை வைக்கும்போது முதுகெலும்பு பலப்படுகிறது
இது கணுக்கால், தொடைகள் மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இடுப்பு மற்றும் அடிவயிற்று தசை அசைவுகளின் கட்டுப்பாட்டைப் பெற உதவுகிறது.
இரு கைகளையும் தலைக்கு மேல் குவிந்து, காதோடு ஒட்டி வைக்கும்போது கழுத்து தசைகள் பலம் பெறுகின்றன.
தலைக்கு மேல் கைகள் குவித்து 4 மூச்சுகள் இழுத்து விடும்போது நுரையீரல் திறன் கூடுகிறது.
வலது மூளை, இடது மூளை இணைப்பதற்கான பயிற்சியாக உள்ளது.
கைகளை மேல்நோக்கி குவிக்கும்போது தலை முதல் இதயம் வரையிலும், கைகளை கீழ்நோக்கி தொடை ஒட்டி வைக்கும்போது இதயம் முதல் பாதம் வரை இரத்த ஓட்டம் சீராகிறது.
பஞ்சபூத ஆற்றல் சமன்படுகிறது.
கைப்பயிற்சியின் பலன்கள் : நிலை - 2
வாத நோய்கள் கட்டுப்படுகிறது.
நுரையீரல் தோற்று வராமல் தடுக்கப்படுகிறது.
வாதம், பித்தம், கபம் சரியாக இயங்குகிறது.
பிரண சக்தி சீராகும்.
சிறுநீர், மலம், விந்து சரியான முறையில் வெளியேறும்.
சிறுநீரகம், கணயம் செயல்பாடு சமன்படும்.
உடல் சூடு சமன்படும்.
உணவு சப்த தாதுக்களாக மாற உதவுகிறது.
வலிப்பு கட்டுக்குள் வரும்.
உடலில் உள்ள இராஜ உறுப்புகள் சீரான இயக்கத்திற்கு வரும்.
மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது.
கை மரத்துப் போதல், உறைந்த தோள்பட்டை குணமாகிறது.
மனஅழுத்தம் குறைகிறது.
வலது கால் 1 அடி முன்னும் இடது கால் பின்னும் வைக்கும்போது பிரமிட் வடிவம் கிடைக்கிறது. முழுமையான சீவகாந்தத்தை ஈர்த்து தரும். உடலுக்கு ஆற்றல் கூடுகிறது.
பாதம் ½ அடி இடைவெளி விடுவதால் அபரிமிதமான சீவகாந்தம் உள்ளிழுக்கப்படும்.
இரு கட்டை விரல்களை இணைக்கும்போழுது வான்காந்த ஆற்றல் இழுக்கப்படுகிறது.
கண் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
கழுத்து சார்ந்த பிரச்சினை மற்றும் முதுகெலும்பு (Disc) சார்ந்த பிரிச்சினைகள் சரியாகிறது.
உடலில் முதுகுப் பகுதியில் உள்ள தசைதான் பெரியது. அதுவே முதுகுத் தண்டைப் பிடித்து வைத்துள்ளது. அந்த முதுகுப் பகுதியில் உள்ள தசைகளை இயக்குகிறது.