Saturday, 27 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(26/04/2019)*

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்.

வீட்டிலும் உறவுகளுடன், நட்புறவுகளுடன், அனைவரும் அளவளாவி பேசிக் களிப்பூட்டும் போது நகைச்சுவை என்பது இயல்பான ஒரு விஷயமாக மனதில் உள்ள இறுக்கத்தைப் போக்கிடும். வயிறு வலிக்க சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வரும். மனம் குதூகலமடையும். மகிழ்ச்சி பொங்கும்.

நகைச்சுவை வாழ்க்கையோடு இணைந்து வரும் போது மனதில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது தானாகவே பயணிப்பதை காண முடியும். உடல், மனம் உற்சாகம் பெறும். இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தத்தால் ஏற்படும் இருதய நோய் எட்டியும் கூட பார்க்காது. சிரிப்பதால் முக அழகு கூடுகிறது. ஆயுள் நீட்டிக்கிறது. இளமையான தோற்றம் பெற முடியும்.

என்டார்பின் எனும் ஹார்மோன் சிரிப்பதால் மூளையில் சுரப்பது. அது எவ்வளவு நன்மைகளை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்துகிறது என்பது அனைவரும் தெரிந்து கொண்டால்.. எத்தனையோ மாத்திரைகளினால் மட்டுமே குணமடையும் என நம்பிக் கொண்டிருக்கும் மனிதரின் மனம் வியப்படையும். ஹாஸ்யத்தை விரும்பி புன்னகைத்து அதையும் முகத்தில் அழகான அணிகலனாக முகத்தில் சூடுவர்.

புன்னகை இருக்கும் போது பொன்னகை தேவையே இல்லை.

புன்னகைக்கும் மனம் வெளித் தோற்றத்தில் அது சிரிப்பாக மலர்ந்தால் தசைகள் விரிவு கொடுக்கும். அக அழகை முகத்தில் காட்டும்.

அன்புடன் ஜே.கே

No comments: