*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 3 – குழந்தைகளைப் பண்படுத்துதல்*
பேதமற்ற சமுதாயம் அமைக்க வென்று
பேசுகிறீர் , எனினும் இதுவரையில் உங்கள்
ஆதரவுக் கேற்றபடி, அனுபவத்தில்
அனுசரித்த முறைகளெல்லாம் எடுத்து ஆராய்வீர்
வேதமத, ஜாதி இன, வேறுபாட்டை
வேரோடு போக்கி, உலகெங்கும் மக்கள்
சோதரர்களாய் ஒன்றுபட்டு வாழ,
சுருக்கவழி, குழந்தைகளைப் பண்படுத்துதல்.
எல்லா பேதங்களையும் ஒழித்து, சமரச வாழ்வளிக்கும் ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பலவிதத்திலும் பாடுபட்டு வரும் அன்பர்களே, சிந்தியுங்கள். நீங்கள் இதுவரையில் மேற்கொண்ட முயற்சிகள் பூரணமாய்ப் பயனளிக்கவில்லை.
சாதி மத, இன, தேச, பேதங்களை ஒழித்து, உலக மக்கள் சகோதர்களாக ஒன்றுபட்டு வாழ, சுருக்கமான வழி, குழந்தைகளை அத்தகைய முறையில் பண்படுத்தி வளர்ப்பதுதான். இதுபற்றிய திட்டம் விரிவாக பிரிதோடரித்தில் விளக்கப்பட்டுள்ளது.
உலக சமாதானப் பாடல் – 4 தொடரும் ..
No comments:
Post a Comment