Friday, 31 January 2020

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்* 
*(31/01/2020)* 

*நமக்குள்ள துன்பம் நீங்குவதற்கே, சில விஷயங்கள் நமக்கு சவாலாகவே  முளைக்கின்றன.*

*ஒவ்வொருவருக்கும் வரும் துன்பம் என்பது .... துன்பம் தன்னை விட்டு  நீங்குவதற்கு , அகல்வதற்குத் தான்.  தன்னிடம் உள்ள ஒரு மனக்கழிவை நீக்க  பதிவாக பதிந்த ஒன்று,  வலியாக வெளியேறுகிறது என்பதை உணர்ந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வது சுலபம்! ஒரு சுகப்பிரசவம் போல.. குழந்தையை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் மலர்வது போல... துன்பம் ஒரு கழிவாக வெளியேறுகிறது. நீங்கியவுடன் அகம் தூய்மையாகிறது. வெளியே புதிய வரவு... சிரிக்கிறது..மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக... ரசித்துக் கொண்டே செல்வோம்., வாழ்க்கைப் பக்கங்களை....இனிமையாக, அன்பாக, ஆனந்தமாக....* 

*துன்பம் என்பது ஒருவருக்குக் கிடைக்கும் வாழ்க்கைப் பாடம் மற்றும் அனுபவம். 'இப்படிச் செய்யலாம் அல்லது இனி இப்படிச் செய்யக் கூடாது' என்பதாகும்.*

*வாழ்க்கையே ஒரு புத்தகம் போலத் தான்.. பல பிறவிகள் போல.... முடிவு தெரியும் வரை ஆச்சரியமாகவே செல்லும். அதன்  பக்கங்களை கடந்து செல்லும் போது வாழ்க்கைப் பாடங்கள் மிகவும் சுவாரஸ்வயமான, புதுப்புது ஆச்சரியமூட்டும் அத்தியாயங்களை, இனிமையாக கடப்பதாகவும், அற்புதங்கள் நிகழ்வதாகவும்,  இருக்கும்.*

*ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவங்களால் கருமையத் தூய்மை செய்தும், செதுக்கிக் கொள்வதற்காகவுமே வந்த துன்பத்தை சுலபமாகப் பக்கங்களை திருப்புவது போல, எளிமையாகக்  கடக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.*

*முடிவு எப்போதும் சுபமாக முற்றும் எனும் முழுமைப்பேறாக பிறவிக் கடல் நீந்தி முக்தியை அடைவதாக அமையட்டும். வாழ்க்கை கதைப்  பக்கங்களை, மேலும் விறுவிறுப்பாகக் கொண்டு செல்லும் நேர்மறை மனப்பாங்கும், விளகத்தின் வழி செல்லும் அறிவாட்சித் திறனும், இறைநிலையும்  பக்கபலமாக  நமக்குள்  இருக்கிறது என்பதை உணர்ந்து, வாழ்க்கைப் பயணம் எனும் புத்தகத்தை பாடமாக படித்து தேர்வுக்குக்  கேள்வி வரும்? பதில் எழுத வேண்டுமே! என்று எண்ணாமல் தனக்குப் பிடிக்கும்  புத்தமாக்கி, ரசித்துப் படிக்கும் சுவாரஸ்யமான கதை போல.. அதை எண்ணி,  வாழ்க்கையயை தனக்குப் பிடித்ததாகக் வாழப் பழக்கிக் கொண்டு, சவாலாக ஏற்று, வெற்றி கொண்டு சாதனை புரியலாமே!*

*அன்புடன் ஜே.கே.*

No comments: