https://m.facebook.com/story.php?story_fbid=567265664131970&id=100025456231980
*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 4 – மனிதன் அனுபவமும் – முயற்சியும்*
இந்த உலகில் மனிதன் இன்னாள் மட்டும்
எத்தனையோ காலமாக வாழ்ந்துவிட்டான்.
அந்தநாள் முதலாக அனுபோகத்தால்,
ஆராச்சியால் கண்ட விளைவை நோக்க,
வந்தபயன் இன்பம் துன்பம் இரண்டேயாகும்.
வரவு செலவின் மீதம், மிகுதி துன்பம்.
எந்தவகையில் முயன்றும், என்றும் எங்கும்
எவராலும் இதைக் குறைக்க முடியவில்லை.
இவ்வுலகத்தில் மனிதன் தோன்றி, யூகத்திற்கே பிடிபடாத அளவு காலமாகிவிட்டது. அன்று முதல் இன்று வரையில், வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறி விட்டான். இதுவரையில் கண்ட அனுபோகம் – அனுபவம் – ஆராய்ச்சி – இவைகளால் அடைந்த பயன்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும், இன்பம், துன்பம் என்னும் இரண்டுதான் உண்டு. இவ்விரண்டும் மனிதனுக்கு மாறிமாறிக் கிடைத்துக் கொண்டே இருந்தாலும், அவனுடைய முயற்சி துன்பத்தைக் குறைத்து இன்பத்தையே பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. எனினும், கூர்ந்து பார்த்தால், இன்பத்தை விட துன்பததைத்தான் அதிகமாக அடைகிறான், அனுபவிக்கிறான். அவன் வாழ்க்கையில் இன்ப துன்ப வரவுசெலவு கணக்கில் துன்பமே அதிகம். இதுவரையில் வாழ்ந்தோரும், இன்று வாழ்வோரும் கூட எவ்வளவு முயற்சி எடுத்தும், எந்தெந்த வகையில் செயலாற்றிய போதிலும், துன்பத்தைக் குறைக்க முடியவில்லை.
உலக சமாதானப் பாடல் – 5 தொடரும் ....

No comments:
Post a Comment