Friday, 31 January 2020

உலக சமாதான பாடல்.5 : 'அறிவு, உடல் சக்திகள் வீணாகிறதே'

https://m.facebook.com/story.php?story_fbid=569904280534775&id=100025456231980

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 5 – அறிவு, உடல் சக்திகள் வீணாகிறதே*
நீதி, நெறி, நன்கறிந்த  மனிதர் வாழ்வில்
    நெருக்கடி ஏன்வந்த தென்று கணக்குப்பார்க்க,
ஆதிநிலை இருப்பெடுத்தால், அதன்பின் வந்த
    அணுமுதலாய் அண்டபிண்டம், அறிவு-லாபம்.
சாதி, மத, தேசமொழி, இனபேதங்கள்
    தனிஉடமைப்பற்று , இந்த வகையின் மூலம்
பாதிக்குமேல் மனிதர் சக்தி வீணாய்ப்
    பயனற்றுப் போவதை நாம் தெரிந்து கொண்டோம்

    மனோத்தத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம்  என்ற ஐந்து வகையாலும் அறிவுத் துறையில் முன்னேறி, நேர்மை-ஒழுக்கம் என்ற உயர்வையறிந்த மனித இனத்தின் வாழ்வில்,நெருக்கடியான, பல துன்பங்கள் அடிக்கடி தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றி வருவதற்கு என்ன காரணம்? என்று அறிய, யூகத்திற்கெட்டிய வரையில் கடந்த காலத்தை நினைவுபடுத்தி ஆராய்ந்தால், ஆதியில் ஒன்றுமில்லாமலிருந்து, பின் அணு முதல் அண்டங்கள், ஜீவராசிகள், அறிவு, அறிவின் முன்னேற்றம் என எப்போதும் இலாபமே கூடி வந்திருக்கிறது.

    அறிவின் மயக்கத்தாலும் சமய சந்தர்ப்பங்களாலும் கொள்ளப்பட்டு , தொடர்ந்து வரும் ஜாதி, மதம், மொழி, இனம் ஆகிய பேத உணர்ச்சிகளினாலேயும் தனி உடமைப் பற்றினைக் கொண்டும், உரிமை கொண்டாடி, மனதைக் கூறுக்கிக் கொண்டிருப்பதால், மனிதர்களின் அறிவின் ஆற்றலும் உடலின் ஆற்றலும் பல வழிகளில் பயனற்று வீணாகிப் போவதை நன்றாய் அறியலாம்.

  *உலக சமாதானப் பாடல் – 6   தொடரும்*

No comments: