https://m.facebook.com/story.php?story_fbid=589967298528473&id=100025456231980
*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 11 – மறுக்க முடியாத உரிமை*
பிறந்துவிட்ட மனிதனுக்கு, வளர, வாழ,
பேருலகம் எங்கெங்கும் சொந்தமாகும்.
இறந்துவிடும் வரைக்கும் இந்த உரிமை உண்டு,
எவர் இதனைத் தடுத்தாலும் அநீதி ஈதே ,
மறந்தபடி மனிதன் மனிதனை துன்புறுத்தும்
மதி மயக்கம் தெரியவைக்க, அறிஞர்கூடி
சிறந்த முறையில் பேதமற்று வாழ,
சேர்ந்து லகப் பொது ஆட்சி காண வேண்டும்.
பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனுக்கும், இந்த உலகம் பூராவும் சொந்தம். அதில் எங்கும் வாழ அவனுக்கு உரிமை உண்டு.
இந்த உரிமை இறந்துவிடும் வரையில் எல்லோருக்கும் உண்டு. எக்காரணத்தாலும், எவராலும், எவருக்கும் இந்த உரிமையை மறுக்க முடியாது. அப்படி மறுப்பதும் தடுப்பதும் அதாவது “நீ இந்த ஊரில், இந்த தேசத்தில், நுழையவோ, வாழவோ கூடாது” என்று யாராவது, யாரையாவது தடுப்பது – அநீதியேயாகும்.
இந்த நீதியையும், மனிதர் வாழ்க்கையின் உரிமையை மறந்துவிட்டு – மனிதனை மனிதன் தடுத்துத் துன்புறுத்தும் அறிவின் மயக்க அநீதியையும், தெளிய வைக்க உலக அறிவாளிகள் முயலவேண்டும். மனிதர்கள் அனைவரும் பேதமாற்றுச் சிறந்த முறையில் வாழவும், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லவும், தொழில் புரியவும், தகுந்த உலகப் பொது ஆட்சியை அவர்கள் வகுக்க வேண்டும். பிறப்பது, வாழ்வது, மரிப்பது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால், இந்த உலகில் எந்த தனிப்பட்ட பொருளும் இடமும் ஒரு தனி மனிதனுக்குச் சொந்தம் என்று சொல்வதற்கில்லை.
இதுவரையில் மனித இனம் தொன்று தொட்டு வாழ்ந்து கண்ட அறிவின் ஆராய்ச்சி அனுபவங்கள், செயல் திறமையின் விளைவுகள் என்பனவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே, இந்த உலகில் எந்தப் பாகத்திலும் மனித இன வாழ்வின் இன்பத்திற்குத் தடை, இடையூறு இல்லாத வழியில் வாழ உலகில் பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு என்பது இங்கு அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.
*உலக சமாதானப் பாடல் – 12 தொடரும் ....*

No comments:
Post a Comment