hhttps://m.facebook.com/story.php?story_fbid=582084169316786&id=100025456231980
*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 10 – உண்மை நிகழ்ச்சிகள்*
பிறக்கின்றோம், வளர்கின்றோம், வாழ்கின்றோம் நாம்
பேருலகில் இன்பதுன்பம் அனுபவித்து
இறக்கின்றோம். இதுவேதான் என்றும் என்றும்
எல்லா ஜீவன்களுக்கும் பொது. இவ்வுண்மை
மறக்காத விழிப்புடனே, ஒழுக்கத்தோடு,
மதி உடலைப் பயன்படுத்தி உலக வாழ்வை
சிறப்பாக அனுபவித்து, இயற்கைக் கொப்ப,
சிந்தனையில் அமைதி பெற முயற்சி செய்வோம்.
இவைகளின் துணையும் பயனையும் கொண்டு வாழ்கிறோம்; இன்ப துன்பம் அடைகிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம் ஒவ்வொருவரும் இவ்வுலகமீது பிறக்கிறோம். மனித இனம் வாழ்ந்து கண்ட அனுபவம், வாழும் மக்களின் கூட்டுறவு, இவைகளின் துணையும் பயனையும் கொண்டு வாழ்கிறோம். இன்ப துன்பம் அடைகிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம்.
இந்த நியதி எல்லோருக்கும் பொது, இந்த உண்மையை மறக்காது, விழிப்புடன் இருக்கும் அறிவின் பண்பாட்டுடன், அறிவையும் உடலையும் பண்படுத்தி-பயன்படுத்தி – உலக வாழ்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பதற்காக, இயற்கைக்குப் பொருத்தமான வாழ்க்கை முறையை வகுத்துப், பூரண அமைதி பெற முயற்சி செய்வோம்.
மனிதனின் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்து, பிறப்பு இறப்பு இடையே, அறிவியக்க காலத்தில் மட்டும் ஏற்படும் இன்ப துன்ப தோற்றம், மாற்றம், என்ற மாறுபாடுகளையும் மனதில் கொண்டு, அமைதியாக வாழ திட்டங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்துகிறோம்.
*உலக சமாதானப் பாடல் – 11 தொடரும் ....*

No comments:
Post a Comment