Tuesday, 11 February 2020

உலக சமாதான பாடல் : 8 - இம்மையும் மறுமையும்

https://www.facebook.com/100025456231980/posts/577401489785054/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 8  – இம்மையும் மறுமையும்*

  உருவெடுத்து அறிவியங்கித் கண்ட எல்லாம்
      உடலாழியும் மட்டே தான் நிலைத்திருக்கும்.
  உருவியக்கி அறிவாற்றல் பயன்படுத்தி
      உலகினிலே செய்த செயல் விளைவனைத்தும்
  உருவெடுத்து வாழ்ந்துவரும் மனிதர் வாழ்வில்
      உண்டுபண்ணும் நன்மைதீமை அளவிற் கேற்ப,
  உருவழித்து விட்டாபின்னும் உலகமீது
      உள்ளவர்களைத் தொடர்தல் கண்டு வாழ்வோம்.

    மனிதன் உடலியக்கம், அறிவியக்கம் இவைகளால் கண்ட உணர்ச்சி, அனுபவம், ஆராய்ச்சி, முடிவு என்ற இவைகள் எல்லாம், அவன் உடல் அழியுமட்டும், மரண காலம் வரைக்குமே நிலைத்திருக்கும்.

    ஆனால், உடல் சக்தி, அறிவின் திறமை என்ற இவைகளாக கொண்டு ஒருவன் உலகத்தில் மனிதர்கள் மத்தியில் செய்த செயல்கள் யாவும், மக்கள் வாழ்வில் விளைக்கும் நன்மை தீமைகளுக்கேற்றபடியும், அவைகளின் அளவுக்கு ஏற்றபடியும், அவன் மரணமான பின்னரும் கூட அழியாது மக்களிடையே நிலைத்துத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்த உண்மையை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நாம் செயலாற்றி வாழவேண்டும். 



*உலக சமாதானப் பாடல் – 9     தொடரும் ....*

No comments: