https://m.facebook.com/story.php?story_fbid=574704443388092&id=100025456231980
*உலக சமாதானம்* *முதற் பாகம்*
*பாடல் : 7 – துன்பத்தின் காரணம்*
பொறிபுலன்கள் உடற்கருவி அமைப்பைக் கொண்டு
புதிதுபுதிதாய்க் கருவி அமைத்துக் கொண்டு
அறிவோடு சுகாதாரம் பொருளாதாரம்
அரசியல் விஞ்ஞானம் ஐந்தறிந்தும்
நெறியுடனே ஒவ்வொன்றும் மற்றவைக்கு
நேர்முரணாய் இயங்காத முறை காணாது
சிறிது பெரிதாய்ச் சிக்கல் மேலும் மேலும்
சேர்த்துக் கொண்டே மனிதன் கவலை பெற்றான்.
ஐம்புலங்கள், உடல் கருவிகள், இவைகளின் உயர்தரமான அமைப்பைக் கொண்டு, புதுப்புது முறைகளில் பலவிதமான உபகருவிகள், யந்திரங்கள் செய்து கொண்டு, மனிதர்கள் வாழ்கிறார்கள்.
வாழ்க்கையின் முன்னேற்றம் மனோதத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், , விஞ்ஞானம் என்ற இந்த ஐந்து துறைகளில் மேலும் மேலும் மேன்மை அடைந்து அறிவும் உயர்ந்து கொண்டே போகிறது.
ஆனால் இந்த ஐந்து வகையில் முன்னேற்றம் அடைந்துவரும் மனிதன் இவைகள் ஒன்றுக்கொன்று பாதிக்காமல்-ஒன்றால் மற்றவை பாதிக்கப்படாமல் இருக்கும் முறையை இது வரையில் வகுத்தானில்லை.
ஆகையால், பொருளாதாரத் துறையில் அடையும் முன்னேற்றம், சுகாதாரம் முதலிய நான்கில் ஒன்றுக்கோ, பலவற்றிக்கோ, சிறிய அளவிலோ, பெரும் அளவிலோ, பாதாகமத் தெரிகிறது.
இப்படியே மற்ற வகைகளிலுள்ள முன்னேற்றங்களும் ஒன்றை ஒன்று பாதிப்பதால், வாழ்க்கையில் பல சிக்கல்கள் தோன்றி, துன்பங்கள் பெருகி வருகின்றன.
*உலக சமாதானப் பாடல் – 8 தொடரும் ....*

No comments:
Post a Comment